கீச்… கீச்… போயே போச்!

‘கடந்த, 30 ஆண்டுகளாக, ‘பியூபர்போனியா’ என்ற சிகிச்சையை செய்கிறேன். நான் கண்டுபிடித்த, இந்த நவீன மருத்துவ சிகிச்சையால், 30 நிமிடத்தில், ஆண்களின் கீச்சுக் குரல் பிரச்னைக்கு தீர்வு

கிடைக்கும்,” என, டாக்டர் குமரேசன் கூறினார்.
கடந்த ஜூலை மாதம், அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடந்த உலகத் தமிழ் மாநாட்டில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்ததில், ‘பியூபர்போனியா’ குறித்த தன் ஆய்வுக் கட்டுரையை, மாநாட்டில் சமர்ப்பித்து, 40 நிமிடங்கள் பேசினார்.
‘ஆடம்ஸ் ஆப்பிள்’
இது அரிதான பிரச்னை இல்லை. ஹார்மோன் கோளாறுகளால் ஏற்படும் பிரச்னையும் இல்லை. ஆனாலும், ஆண்களுக்கு பெண் குரல் போல மென்மையான குரல் இருந்தால், வேலை வாய்ப்பு, திருமணம் உட்பட, பல பிரச்னைகளை சந்திக்க வேண்டியுள்ளது.
மகாபலிபுரம் சென்றபோது, சுங்க சாவடியில் பாக்கி பணத்தை வாங்க கையை நீட்டியபோது, ’10 ரூபாய் இருக்கா சார்’ என, பெண் குரல் கேட்டது. பெண்களும் இங்கு வேலையில் இருக்கின்றனரா என்ற வியப்பில், எட்டிப் பார்த்தபோது, அமர்ந்திருந்தது ஆண்.
‘பெண் குரலாக இருந்ததால், பொது இடங்களில் முடிந்த அளவு பேசுவதைத் தவிர்ப்பேன்’ என்றார்.
அவரை அழைத்து வந்து சிகிச்சை செய்தேன். பிரபலங்கள் பலருக்கும், இந்தப் பிரச்னை இருக்கிறது. 12 வயது வரை, இரு பாலருக்கும் பெண் குரலே இருக்கும். 13 – 14 வயதில் ஆண் குழந்தையின் குரல் நாண் நீளமடையும். அப்போது, குரல்வளை விரிவடைந்து, குரல்வளையில் உள்ள குறுத்தெலும்பு வெளியில் வரும்; ஆண்களின் குரல்வளையில் நீண்டு கொண்டிருக்கும் இது, ‘ஆடம்ஸ் ஆப்பிள்’ எனப்படும்.
‘பியூபர்போனியா’
பெண் குழந்தையின் குரல் நாண், நீளமடையவோ, விரிவடையவோ செய்யாது. 16 வயதிற்குப் பிறகும், ஆணுக்கு, பெண் குரல் இருப்பது, ‘பியூபர்போனியா’ எனப்படும்.
இந்தப் பிரச்னையை சரி செய்ய, குரல் வளையை விரிவடையச் செய்ய வேண்டும். 30 நிமிடத்தில் இதைச் செய்து விட முடியும். தொடர்ந்து, 21 நாட்கள் பயிற்சி பெற வேண்டும்.
இந்த பிரச்னைக்கான தீர்வை கண்டறிய தனக்கு உத்வேகம் தந்தது, 5,000 ஆண்டு கள் பழமையான, தமிழின் தொன்மையான நுாலான, தொல்காப்பியம் என்றவர், அது பற்றி விளக்கினார்.
அரசியல்வாதிகள், பின்னணி குரல் கொடுப்போர், பாடகர்கள், ஆசிரி யர்கள் என்று தினமும், அதிக நேரம் குரலை பயன்படுத்துபவர்களுக்கு, குரலை நிர்வகிப்பது எப்படி என்று வகுப்புகள் எடுப்பேன்.
குரல் உருவாவது தொடர்பான தகவல்களைத் தேடியபோது, தொல்காப்பியத்தில் சொல் அதிகாரத்தில், ‘உந்தி முதலா முந்து வளி தோன்றி, தலையினும் மிடற்றினும் நெஞ்சினும் நிலைஇ, பல்லும் இதழும் நாவும் மூக்கும் அண்ணமும்’ என்ற வரிகளில் அடிவயிற்றில் இருந்து ஒலி வர வேண்டும் என்ற, வரிகளை படித்தேன்.
குரல் உருவாகும் இடத்தை தெளிவாக விளக்கியுள்ளார் தொல்காப்பியர். சொல் உருவாவதற்கு, உந்தியிலிருந்து அதாவது அடிவயிற்றிலிருந்து காற்று வர வேண்டும், என்று கூறியுள்ளார்.
அப்படி வரும் காற்று, குரல் நாணில் வரும் போது, அதிர்வு ஏற்பட்டு குரலாக ஒலிக்கிறது.
நாவின் அசைவு
பல், இதழ்கள், நாக்கு, அண்ணம் ஆகியவற்றில் ஏற்படும் அதிர்வானது வார்த்தையை உருவாக்குகிறது. சொற்கள் தெளிவாக ஒலிப்பதற்கு நாவின் அசைவு முக்கிய பங்கு வகிக்கிறது.
நவீன மருத்துவ விஞ்ஞானிகள் சொல்வதையும், இதையும் ஒப்பிட்டு அறிவியல் பூர்வமாக மாநாட்டில் விளக்கினார்.
சிகாகோ உலகத் தமிழ் மாநாட்டில், சமர்ப்பித்த, இவரின் ஆய்வு கட்டுரை, பல்வேறு வெளிநாட்டு ஊடகங்களில் செய்தியாக வெளியானது.
அதன்பின், தங்கள் நாட்டில் வந்து இந்த சிகிச்சையை செய்ய வேண்டும் என சுவிட்சர்லாந்து உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த, 200 அமைப்புகள் பதிவு செய்துள்ளன.
டாக்டர் எம்.குமரேசன்,
காது, மூக்கு, தொண்டை சிறப்பு மருத்துவர்,
சென்னை. 98410 55774

%d bloggers like this: