தூரமாக இருந்தாலும் உங்கள் காதல் துணை பக்கத்தில் இருப்பதாக ணர வேணுமா? இதை செய்யுங்கள்

   காதல் என்ற அகராதியை தற்போது தேடாதவர்கள் யாருமே இருக்க முடியாது. தனக்கு ஒரு காதலி இருக்கிறார் என்பதை சொல்லிக் கொள்வதற்காகவாவது இங்கே நிறைய பேர் காதலிக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் எல்லா இடங்களிலும் இந்த மாதிரியான மனிதர்கள் இருக்கிறார்கள். தன்னை சுற்றி உள்ளவர்கள் என்ன செய்கிறார்களோ தானும் அதன்மீது ஆசைப்படுவது என்பதை வழக்கமாக கொண்டிருப்பவர்கள் அவர்கள். எனவே கூட இருக்கவனுங்க காதல் பண்ணிக்கொண்டு சுத்துனா தானும் காதலிப்பேன் என அவசரகதியில் காதலிப்பவர்கள் தான் அந்த வித்தியாச மனிதர்கள்.

#1 எதிர்பாராத நேரத்தில் சந்திப்பை ஏற்படுத்துங்கள்:
 
80களின் காதல்:

80 களில் நடைபெற்ற காதலோ மிக அலாதியானது. நிறைய ரொமேன்ஸ்களை தன்னகத்தே அடக்கிக் கொண்டது. ஆத்தங்கரை, சோளக் கொள்ளை, மாந்தோப்பு, என காதல் புனை எழுத்தாளர்கள் வருந்திக் கொண்டு எழுதுமளவுக்கு அவர்களுக்கு தனிமையும், அழகான சுற்றுச் சூழலும் கிடைத்திருந்தது. முத்தங்கள் பரிமாற்றிக் கொள்வதற்கும் நீண்ட நேரம் பேசுவதற்கும் வாய்ப்புகள் அங்கே அதிகம். பேருந்துகள் அவ்வளவாக கிடையாது. எங்கு சென்றாலும் நடைபயணம் தான். இருவர் வீட்டுக்கும் நீங்கள் காதலிப்பது தெரியாமல் இருக்கும் பட்சத்தில் பெண்ணின் துணைக்கு அவரது காதலர் அதே வழியில் செல்லும் போது தனது மகளை பத்திரமாக கூட்டிக் கொண்டு போய் விட்டுவிடு தம்பி என பாசமாக சொல்லும் கதா அம்சங்களைக் கொண்டது 80களின் காதல்.

90களின் காதல்:

தொழில்நுட்ப வளர்ச்சிகள் அதிகமாக மாறிய காலம் இது. காடுகள் எல்லாம் அழிக்கப்பட்டு சாலைகளாக மாற்றப்படும் துரதிர்ஷ்ட வசம் நடந்தேறிய தருணமிது. குளக்குளியல்களை வீட்டு பாத்ரூம்கள் ஆக்கிரமித்துக் கொண்டன. இருவரும் தங்களது அன்பை பரிமாறிக் கொள்ள அலைபேசியை மட்டுமே நம்பியிருக்க வேண்டிய கட்டாய சூழலில் தவிக்க விடப்பட்ட காலம். அருகிலுள்ள கோவில் தான் காதலர்கள் சந்திக்கும் இடமாக எப்போதும் இருந்திருக்கிறது. நெடுங்காலம் பார்க்க வேண்டும் எனக் காத்திருப்பு வலியை நிச்சயம் தரும். மாதம் ஒரு முறை எப்படியாவது எதாவது ஒரு வாய்ப்பை பயன்படுத்தி பார்த்துவிடுகிற அந்த தருணம் இருக்கிறதல்லவா? ஒரு மாத ஏக்கத்திற்கும், பிரிவு தந்த வலிக்கும் ஒரு நொடியில் அந்த மருந்தளித்து குணப்படுத்திவிடும் ஆற்றல் அந்த சந்திப்புக்கு நிச்சயம் உண்டு.

காத்திருப்பு :

எல்லாக் காலக் காதல்களிலும் காத்திருப்பது என்பது நிச்சயம் இருந்திருக்கும். சங்ககாலம் தொடங்கி இன்று வரை இல்லற வாழ்க்கையில் காத்திருப்பு என்ற அத்தியாயம் பெரிதாக பேசப்படுகிறது. கோவலன் வருகைக்காக கண்ணகி காத்திருக்கவில்லையா? ராமர் தன்னை வந்து மீட்பார் என சீதா தேவி காத்திருக்கவில்லையா ? இப்படி வரலாறுகளை தோண்டி எடுத்தாலும் காத்திருப்புகளின் இன்பவலியை நாம் நெடுங்காலமாக பார்த்து வருகிறோம். ஆனால் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த இந்த காத்திருப்பு, இன்று பரவலாக எல்லா வீடுகளிலும் இருக்கிறது. கல்விக்கேற்ற வேலை சொந்த ஊரில் கிடைக்கவில்லை என வெளியூரை, வெளிநாட்டை நோக்கி பயணப்படும் கணவன்மார்களைப் பிரிந்து கணவரது குடும்பத்தோடு சொந்த ஊரில் வாழும் மனைவி மார்கள் இங்கே அதிகம்.

காதலை வலுசேர்க்கும் மாமருந்து:

பிரிந்திருக்கும் போது ஒருவரையொருவர் புரிந்து கொள்வதற்கும், அறிந்து கொள்வதற்கும் நிறைய வாய்ப்புகள் கிடைக்கின்றன. ஒரு விஷயத்தின் அருமை நமக்கு இரண்டு வேளைகளில் தெரிகிறது. ஒன்று தேவைப்படுவது கிடைக்காதபோது, இரண்டாவது தேவைப்படுவது நம்மை விட்டு விலகிப்போகும் போது. இதில் இரண்டாவது ரகம் நீங்கள். உங்கள் கணவரின்/மனைவியின் அருமை இந்த குருகிய தூரப் பிரிவு நிச்சயம் உங்கள் காதலை வலுவாக்கும். இனி நமக்குள் ஒத்து வராது என முடிவு செய்தவர்களுக்கும் ஆறு மாதகாலம் நீதிமனறத்தால் வழங்குவது இதற்காகத் தான். ஏதாவது ஒரு புரிந்துணர்வு இல்லாமல் தான் முழுமையாக பிரிவிற்கு விருப்பம் தெரிவிப்பார்கள். ஆனால் வழங்கப்படும் தற்காலிக பிரிவில் ஒருவரையொருவர் எதாவது ஒரு தருணத்தில் தேட ஆரம்பிப்பார்கள் அதனால் அவர்களுக்குள் ஒரு புதிய காதல் காவியம் மலரும். அது மீண்டும் அவர்கள் ஒன்றாக புதிய வாழ்க்கையைத் தொடங்க வழிவகுக்கும்.

தூரமா இருக்கோம் அப்டிங்கிற உணர்வு வேண்டாம்:

தூரமா இருக்கோம் அப்டிங்கிற உணர்வு உங்களுக்குள் இருந்தால் தூக்கிப் போடுங்கள். கூட இருந்தாலும் 8ல் இருந்து 10 மணிநேரம் வேலைக்குச் செல்கிறார். 6-8 மணி நேரம் தூங்குகிறார். இதில் 2 அல்லது 3 மணி நேரம் தான் உங்களுடன் நேரத்தை செலவிடுகிறார். ஆக நேர செலவிடலை இப்போதுள்ள தொழில்நுட்பம் எளிதாக்கிவிட்டது. எனவே தூரமாக இருக்கிறோம் என்ற உணர்வை தூக்கிப் போடுங்கள்.

#1 எதிர்பாராத நேரத்தில் சந்திப்பை ஏற்படுத்துங்கள்:

உங்கள் வருகைக்காக காத்திருந்து கதவைத் திறந்து உங்களை வரவேற்பது தான் உங்கள் மனைவியின் அதீத சந்தோசமாக இருக்க முடியும். ஆகவே உங்கள் துணை உங்களை இருப்பை விரும்பினாலே, மனச்சோர்வடைந்தாலோ ஒன்றை செய்யுங்கள் அவருக்கே தெரியாமல் அவரைச் சந்திப்பதற்காக திட்டமிடுங்கள். அப்படி எதிர்பார்க்காத நேரத்தில் நீங்கள் உங்கள் துணையை சந்திப்பது எல்லா மனசோர்வையும் நீக்கி விடும். அதே சமயத்தில் உங்களுடைய துணை வீட்டில் இருக்கிறாரா என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு திட்டத்தை செயல்படுத்துங்கள். அதே சமயத்தில் உறுதிப்படுத்தும் போது சில விசயங்களை அவர்கள் கண்டுபிடிக்கும் விதமாக விட்டு விட்டு உறுதிப்படுத்துங்கள்.

#2 காதல் கடிதம்:

இப்போதெல்லாம் கடிதங்கள் எழுதுவது எல்லாம் ஒரே அடியாக நின்றுவிட்டது. பிறந்ததிலிருந்து இளமைப் பருவம் வரை தன்னுடனே இருந்த மகளை பிரிந்த தந்தைக்கு மகளிடம் இருந்து வரும் கடிதமே மாமருந்தாக இருந்தது. அதே சமயத்தில் ராணுவ வீரர்கள் தன்னுடைய மனைவிக்காக எழுதிய கடிதங்களில் நிறைந்திருக்கும் காதல் வேறு எங்கிலும் நீங்கள் பார்த்துவிடமுடியாது. ஆனால் தொழில்நுட்பம் எல்லாவற்றையும் சுக்குநூறாக்கிவிட்டது. ஆனாலும் கருவி தான் மாறி இருக்கிறது. பேப்பருக்கும் பேனாவுக்கும் பதிலாக செல்பேன் வந்திருக்கிறது. அதனால் துணையருக்கு காதல் கடிதங்கள் எழுதுவது ஒன்றும் குற்றமல்ல. இருந்தாலும் கூட பேப்பரையும் பேனாவையும் எடுத்து உங்கள் விரல்களால் ஒரு கடிதமொன்றை எழுதுங்கள். உங்கள் கைகளால் உருவாக்கப்பட்ட அந்த எழுத்துரு உங்களையே அவர்களிடம் கொண்டுப் போய்ச் சேர்த்தத்ற்கு சமமாக அது மாறிவிடும்.

<!–

–>

#3 வீடியோ கால்:

தொழில்நுட்பத்தின் மிக முக்கியமான கண்டுபிடிப்பு என்பது வீடியோ கால் வசதி. தொழில்துறைக்கு எந்த அளவுக்கு இது உதவுகிறதோ இல்லையோ தனிப்பட்ட வாழ்க்கைக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. கிராமத்தை விட்டு வர மறுக்கிற அப்பா அம்மாக்களை அடிக்கடி சந்திக்கிற வாய்ப்பை இது நல்குகிறது. உங்கள் துணைக்கு காலையில் எழுந்து காபி குடிக்கிறீர்களோ இல்லையோ போனை எடுத்து உங்கள் துணைக்கு ஒரு வீடியோ காலை செய்துவிடுங்கள். அதே மாதிரி படுக்கப் போகும் முன் ஒரு காலை செய்து விடுங்கள் அப்போது உங்கள் துணையுடன் நீங்கள் இருப்பதை அது நிச்சயம் உணர்த்தும்.

#4 புகைப்படங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்:

உங்களுக்கு குழந்தைகள் இருந்தால் அவர்களுடைய முதல் நாள், முதல் புதிய உடை, முதல் நாள் பள்ளி என முக்கியமான அனுபவங்களை நீங்கள் மிஸ் பண்ணாமல் இருக்க உங்களுடைய துணைக்கு புகைப்படங்களை அவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

#5 பரிசை வழங்குங்கள்:

ஏதாவது ஒரு பொருளை பார்க்கும் போது உங்கள் துணையின் நியாபகம் வருமானால் அதை உடனடியாகா வாங்கி பேக் செய்து உங்கள் மனைவிக்கு அனுப்பிவிடுங்கள். அதுமட்டுமல்லாமல் நினைவுகளின் அடிப்படையில் அவ்வப்போது பரிசுகளை அவர்களுக்கு பிரத்யேகமாக வழங்குங்கள்.

#6 ஒன்றாகத் தூங்குங்கள்

ஒன்றாகத் தூங்குவது போன்ற உணர்வை உங்கள் துணைக்கு ஏற்படுத்துங்கள். அது அவர்களுக்கு நிச்சயம் ஒரு நேரத்தில் ஏமாற்றத்தை தந்தாலும் ஆறுதலையாவது உங்கள் துணைக்கு நிச்சயம் தரும்.

#7 உங்களுடைய புகைப்படத்தை பகிருங்கள்

தினந்தோறும் உங்கள் துணை எந்த உடை அணிய வேண்டும் என்பதை உங்கள் துணையாரே எப்போதும் முடிவு செய்திருப்பார். அதே சமயத்தில் ஒப்பனைகளில் ஏதேனும் மாறுபாடு இருந்தால் அதை சரிசெய்யச் சொல்லும் தருணம் அதீத இன்பத்தைத் தரும் . அவசர அவசரமாக கிளம்பிய உங்களுக்கும் அது உன்னத அனுபவத்தைத் தரும்.

#8 உங்கள் அடுத்த சந்திப்புக்காக திட்டமிடுங்கள்:

திட்டமிடாத சந்திப்பு எவ்வளவு அனுபவத்தைத் தருகிறதோ அதைவிட முழுத் திருப்தி திட்டமிட்ட சந்திப்புகளில் இருக்கும். சில நாட்களுக்குப் பிறகு வீட்டிற்கு வரும் துணையருக்கு எதுவும் செய்து தரமுடியவில்லையே என்ற வருத்தத்தை திட்டமிட்ட சந்திப்புகள் குறைக்கும்.

%d bloggers like this: