கோட்டை’யைப் பிடிக்க ஸ்டாலின் புதிய பிளான்! – கொங்கு மண்டலத்தில் களமிறக்கப்பட்ட அன்பில் மகேஷ்…

கோட்டையைப் பிடிக்கவேண்டுமானால் கொங்கு மண்டலத்தைப் பிடிக்க வேண்டும் எனத் தீவிரமாகக் களமிறங்கியிருக்கிறது தி.மு.க. முதல்கட்டமாக, மு.க.ஸ்டாலினின் நம்பிக்கைக்கு உரியவரும் உதயநிதி ஸ்டாலினின் நெருங்கிய நண்பருமான அன்பில் மகேஷ், கொங்கு மண்டலத்தில் களமிறக்கப்பட்டிருக்கிறார். ‘‘தி.மு.க இளைஞரணி கொங்கு மண்டலப் பொறுப்பாளராக அன்பில் மகேஷ் பொய்யாமொழி நியமனம் செய்யப்பட்டுள்ளது, கொங்கு மண்டலத்தில் அ.தி.மு.க-வின் செல்வாக்கை உடைக்கத்தான்’’ என்கிறார்கள் தி.மு.க-வினர்.

கருணாநிதி – அன்பில் தர்மலிங்கம், ஸ்டாலின் – அன்பில் பொய்யாமொழி, உதயநிதி – அன்பில் மகேஷ் என மூன்று தலைமுறைகளாகத் தொடரும் இந்த நட்பு, காலம் கடந்த நெருக்கத்துக்குச் சான்று.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி காலம் வரை அ.தி.மு.க-வுக்கும் கொங்கு மண்டலத்துக்குமான உறவும் நெருக்கமானதுதான். இந்த நிலையில் அன்பில் மகேஷை கொங்கு மண்டலப் பொறுப்பாளர் ஆக்கியிருப்பதன் மூலம் அரசியல் பரப்பில் சூடு கிளப்பியிருக்கிறது தி.மு.க.

அ.தி.மு.க-வின் வெற்றிக்கு பெரிதும் கைகொடுத்துவருவது ‘கொங்கு மண்டலம்’தான். தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களான கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், கரூர் ஆகியவற்றில் மொத்தம் 61 தொகுதிகள் உள்ளன. அவற்றில் பெரும்பாலான இடங்களைக் கைப்பற்றி, `கொங்கு மண்டலம் எப்போதும் நம் கோட்டை’ என நிரூபித்துவருகிறது அ.தி.மு.க.

ஈரோடு தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் - துணை அமைப்பாளர்கள் ஆலோசனை கூட்டத்தில்...

ஈரோடு தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் – துணை அமைப்பாளர்கள் ஆலோசனை கூட்டத்தில்…

Advertisement

<?XML:NAMESPACE PREFIX = “[default] http://www.w3.org/2000/svg&#8221; NS = “http://www.w3.org/2000/svg&#8221; />

Learn More

Powered by PlayStream

Supermoon – Ft. Russell Peters World Tour.
Pune | Ahmedabad | Hyderabad Oct 1st – Oct 6th

கடந்த 2001 சட்டமன்றத் தேர்தலில் கொங்கு மண்டலத்தில் 48 தொகுதிகளில் போட்டியிட்ட அ.தி.மு.க, 38 தொகுதிகளைக் கைப்பற்றியது. 2006-ல் அ.தி.மு.க தோல்வி அடைந்த நிலையிலும், கொங்கு மண்டலத்தில் இருந்து 16 எம்.எல்.ஏ-க்கள் தேர்ந்தெடுக்கப் பட்டனர். தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகு கடந்த 2011 தேர்தலில் அ.தி.மு.க தலைமையிலான கூட்டணி இங்கு உள்ள 61 தொகுதிகளில் 55 தொகுதிகளைப் பிடித்தது. 2016-ல் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தவிர 60 இடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில், 47 தொகுதிகளை அ.தி.மு.க கூட்டணி கைப்பற்றியது.

அ.தி.மு.க தொடங்கப்பட்டதிலிருந்து அந்தக் கட்சிக்கு அதிகளவிலான வெற்றியைக் கொடுப்பதும், தமிழக அரசியலின் பல்வேறு திருப்புமுனைகளை உருவாக்கிய நிகழ்வுகளுக்கு மையப்புள்ளியாக இருப்பதும் கொங்கு மண்டலம்தான். கடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க-வின் ஆட்சிக்கனவைத் தகர்த்ததில் மிக முக்கியப் பங்கு கொங்கு மண்டலத்துக்கு உண்டு.

கொங்கு மண்டலத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர், சேலம் ஆகிய ஆறு மாவட்டங்களில் கவுண்டர் சமூகத்தினர் பெருமளவு உள்ளனர். இந்த ஆறு மாவட்டங்களில் மொத்தம் உள்ள 47 சட்டமன்றத் தொகுதிகளில் 41 தொகுதிகளில் அ.தி.மு.க வென்றிருக்கிறது. இதில் 27 எம்.எல்.ஏ-க்கள் கவுண்டர்கள் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களில் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, செங்கோட்டையன், கே.சி.கருப்பணன் ஆகியோர் கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். கவுண்டர் சமுதாய வாக்குகளைத் தக்கவைப்பதற்காகவே, அந்தச் சமூகத்தைச் சேர்ந்த எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கினார் சசிகலா.

‘கோட்டை’யைப் பிடிக்க ஸ்டாலின் புதிய பிளான்! - கொங்கு மண்டலத்தில் களமிறக்கப்பட்ட அன்பில் மகேஷ்...

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க அமோக வெற்றி பெற்றதையடுத்து, கொங்கு மண்டலத்தை தி.மு.க வசப்படுத்த மு.க.ஸ்டாலின் காய் நகர்த்திவருகிறார். அ.தி.மு.க-வில் செல்வாக்குமிக்க தலைவராக இருந்து அ.ம.மு.க-வுக்குச் சென்ற செந்தில் பாலாஜியை, தி.மு.க-வுக்கு இழுத்து வந்தார் ஸ்டாலின். தி.மு.க இளைஞரணி துணைச் செயலாளரான அன்பில் மகேஷ் பொய்யாமொழியை, இப்போது கொங்கு மண்டலப் பொறுப்பாளராக அறிவித்துள்ளனர்.

நாடாளுமன்றத் தேர்தலில் கொங்கு மண்டலப் பகுதியில் வெற்றி பெற்றதற்கு வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்கான கூட்டம் பொள்ளாச்சியில் நடைபெற்றது. அப்போது பேசிய தி.மு.க தலைவர் ஸ்டாலின், ‘தி.மு.க கூட்டணிக்கு வாக்களிக்காதவர்களுக்குக்கூட சேர்த்துச் செயல்பட்டு ஏன் தி.மு.க-வுக்கு வாக்களிக்கவில்லை என அவர்களை எண்ணவைக்கும்படி தி.மு.க எம்.பி-கள் செயல்படுவர். கொங்கு மண்டலம் அ.தி.மு.க-வின் கோட்டை என்ற கூற்றைப் பொய்யாக்கியுள்ளனர் மக்கள். லட்சக்கணக்கான ஓட்டு வித்தியாசத்தில் எங்களை வெற்றிபெற வைத்திருக்கிறார்கள்’ என்றார்.

அ.தி.மு.க-வின் கோட்டையாகக் கருதப்பட்ட கோவை, நாமக்கல், ஈரோடு ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய கொங்கு மண்டலத்தில் தி.மு.க வெற்றி பெற்றதில், அ.தி.மு.க-வினா் கலக்கமடைந்து காணப்படுகின்றனர். இந்நிலையில் அன்பில் மகேஷ் கொங்கு மண்டலப் பொறுப்பாளராக நியமித்திருப்பதால், உள்ளூர் தி.மு.க நிர்வாகிகள் உற்சாகத்தில் இருக்கின்றனர். அன்பில் மகேஷும் உற்சாகமாகக் களத்தில் இறங்கி பணியாற்றத் தொடங்கிவிட்டார். இளைஞரணி நிர்வாகிகளை அழைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்திவரும் அவர், பொதுக்கூட்டங்கள் நடத்தி தி.மு.க கொள்கைகளை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்வதிலும் கவனம் செலுத்திவருகிறார்.

அன்பில் மகேஷ் வருகை குறித்து அ.தி.மு.க-வினரிடம் பேசினால், ‘‘எத்தனை பேர் வந்தாலும், கொங்கு மண்டலத்தில் எங்கள் செல்வாக்கை சரித்துவிட முடியாது’’ என அலட்டிக்கொள்ளாமல் பதில் சொல்கிறார்கள். அமைச்சர் வேலுமணிகூட, ‘‘கொங்கு மண்டலம் எப்போதும் அ.தி.மு.க கோட்டைதான். அதை நாங்கள் விரைவில் நிரூபிப்போம்’’ எனச் சூளுரைத்திருக்கிறார்.

அ.தி.மு.க-வின் கொங்கு கோட்டை, தி.மு.க-வின் கோட்டையாக மாறுமா? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

%d bloggers like this: