பகை அரசியலை மறந்து ‘தூது’… சசிகலா – சந்திரலேகா சந்திப்பு ஏன்?

உங்களை முன்கூட்டியே விடுதலை செய்வதற்குத் தேவையான அனைத்தையும் மத்திய அரசு செய்யும்’ என ஒன்றேகால் மணி நேரச் சந்திப்பின்போது

சந்திரலேகாவால் ஆசிர்வதிக்கப்பட்ட சசிகலா… ஆசிட் அடிக்கப்பட்ட சந்திரலேகா… இப்படியான பகை அரசியலின் பின்னணியைத் தாண்டி சமீபத்தில் பரப்பன அக்ரஹாரா சிறையில் நடந்திருக்கிறது சசிகலா – சந்திரலேகா சந்திப்பு. பல ஆண்டுக்கால பகைக்குப் பிறகு, சசிகலாவைத் தேடிப்போய் சிறையில் பார்த்திருக்கிறார் ‘ஆசிட்’ சந்திரலேகா!

 

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நாடாளுமன்றத் தேர்தலில் அடிவாங்கி, அ.தி.மு.க பலவீனமாகி வருகிறது. தினகரன் ஒரு பக்கம் தனி ஆவர்த்தனம் நடத்திக் கொண்டிருக்கிறார். எடப்பாடியும் பன்னீரும் ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்வதில் கவனமாக இருக்கிறார்கள். இப்படியான சூழலில்தான் சசிகலா – சந்திரலேகா சந்திப்பு நடந்திருக்கிறது.

“எடப்பாடியையும் பன்னீரையும் வைத்து ஒன்றும் செய்ய முடியாது. கட்சியைப் பலப்படுத்துவதில் அவர்கள் தோற்றுப் போய்விட்டார்கள். ஆட்சிக்காலம் முடிந்தால் இருப்பவர்களும் சிதறிவிடுவார்கள். சசிகலா தலைமையில் அ.தி.முக-வை வலுப்பெறச் செய்வதுதான் தமிழகத்தில் பா.ஜ.க-வுக்கு சாதகமாக இருக்கும். ரஜினி, அரசியலில் இறங்கினால், நேரடியாக பா.ஜ.க-வோடு கூட்டணி வைக்கமாட்டார். ஆனால், அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைக்க அவருக்குத் தயக்கம் இருக்காது. அதற்கு அ.தி.மு.க வலுவாக இருக்க வேண்டும். இதற்கான திட்டத்தை முன்னெடுத்து வந்தது பா.ஜ.க. அந்த அசைன்மென்ட் சுப்பிரமணியன் சுவாமிக்கு ஒப்படைக்கப்பட்டது.

இந்தப் பின்னணியில்தான் ‘பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க ஒன்றிணைய, சசிகலாவே தலைமையேற்க வேண்டும்’ என்று பகிரங்கமாகவே சொல்லிவந்தார் சுவாமி. அதன் தொடக்கம்தான் சசிகலா – சந்திரலேகா சந்திப்பு” எனச் சொன்னார் சந்திப்பை அறிந்த முக்கியமான சோர்ஸ் ஒருவர்.

“சுவாமியே நேரடியாக சசிகலாவைச் சந்தித்தால் அரசியல் அதிர்வலை ஏற்படும் என்பதால், அது தவிர்க்கப்பட்டது. சசிகலாவைச் சந்தித்தபோது, ‘பா.ஜ.க தூதுவராக சுவாமியின் மூலம் உங்களைச் சந்திக்க வந்திருக்கிறேன்’ எனச் சொல்லியிருக்கிறார் சந்திரலேகா. ‘உங்கள் பிரச்னைகள் அனைத்தும் சுவாமிக்குத் தெரியும். உங்களுக்காக பா.ஜ.க தலைமையிடம் அவர் பேசிவருகிறார்.

கருத்து வேறுபாடுகளை மறந்து ஓ.பி.எஸ் – ஈ.பி.எஸ் – சசிகலா மூவரும் இணைந்து செயல்பட வேண்டும். உங்களை முன்கூட்டியே விடுதலை செய்வதற்குத் தேவையான அனைத்தையும் மத்திய அரசு செய்யும்’ என ஒன்றேகால் மணி நேரச் சந்திப்பின்போது, நம்பிக்கை தெரிவித்திருக்கிறார் சந்திரலேகா. பா.ஜ.க-வின் தூதுவராக சந்திரலேகா கொடுத்த சிக்னலுக்கு, சசிகலா சரண்டராகிவிட்டார் என்று சொல்கிறார்கள்” என விவரித்தார் அந்த சோர்ஸ்.

%d bloggers like this: