உடலில் ஏற்படும் பாதிப்புகளை மருந்து இல்லாமல் வலி நீக்கும் பிசியோதெரபி மருத்துவம்

வளர்ந்து வரும் மருத்துவ துறையில் பிசியோதெரபி மருத்துவம் கடந்த சில வருடமாக முக்கிய இடத்தை பிடித்துள்ளது. மூட்டு வலி, தசை வலி,

முதுகு வலி, முழங்கால் வலி, குதிகால் வலி, தோள்பட்டை வலி, தசை பிடிப்பு, கழுத்துவலி, மூட்டுத் தேய்மானம் போன்ற பிரச்சினைகளை மாத்திரையின் தேவையில்லாமல் எந்த பக்க விளைவுகளும் இல்லாமல் தனிப்பட்ட பல்வேறு ஆராய்ச்சிகளின் மூலம் நிரூபிக்கப்பட்ட முறைகளை கொண்ட மருத்துவ முறைகளை கொண்டு குணப்படுத்திட கண்டறியப்பட்டதே பிசியோதெரபி மருத்துவமாகும். இது ஆங்கில மருத்துவத்தின் ஒரு சிறப்பு பிரிவேயாகும்.

இதில் முறையாக படித்து தகுதி பெற்ற மருத்துவர்களை கொண்டு சிகிச்சை பெறும் போது இதன் மகத்துவத்தை இன்னும் செவ்வனே உணரலாம்.வலி நிவாரணத்தோடு நின்று விடாமல் மூளை ரத்த அழுத்தம் பாதிப்பால் ஏற்படும் பக்கவாதம், மூளை வளர்ச்சி குறைபாடுடைய குழந்தைகள், விளையாட்டின் போது ஏற்படும் காயங்கள், எலும்பு முறிவுக்கு பின் மூட்டு இறுகி போதல் பல்வேறு பிரச்சினைகளை உடற்பயிற்சி மூலமும், சில இதற்கெனவே வடிவமைக்கப்பட்ட சிறப்பான உபகரணங்களைகொண்டு அளிக்கும் பிசியோதெரபி மருத்துவத்தின் மூலம் சரிபடுத்தி கொள்ளவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படும் நூறு சதவீத உடல் ஊனத்தை குறைத்து வெற்றிகரமாக யாருடைய உதவியும் இல்லாமல் வாழ வழிச்செய்திட உதவும் உன்னத பிசியோதெரபி மருத்துவம்.

%d bloggers like this: