அலட்சியம் வேண்டாம்…
ஆட்டிஸம் அலர்ட்
‘‘குழந்தைகளுக்கு ஏற்படுகிற வளர்ச்சிக் கோளாறுகளில் ஆட்டிசம்(Autism) என்கிற மன இறுக்கப் பிரச்னை ஒரு பொதுவான மூளைக் கோளாறு என்று சொல்லப்படுகிறது. இந்தியாவில் குழந்தைகளில் 20 லட்சம் பேர் வரை ஆட்டிசம் கோளாறு உள்ளவர்களாக இருக்கிறார்கள் என்கிறது ஆட்டிசத்திற்கான இந்திய அளவிலான மதிப்பீடு. ஆண் குழந்தைகளில் 60-ல் ஒரு குழந்தைக்கும், பெண் குழந்தைகளில் 150-ல் ஒரு குழந்தைக்கும் இந்த பாதிப்பு இருப்பதாக சமீபத்திய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
பெண்கள் நினைத்தால் சிசேரியனை குறைக்கலாம்
சுகப்பிரசவத்திற்கான வழிமுறைகள் ஏராளமாக இருக்கின்றன. கருத்தரித்த பெண்களுக்கு அவற்றை விளக்கிச் சொன்னாலே இந்தியாவில் சிசேரியன் பிரசவங்களின் எண்ணிக்கை கணிசமாக குறையும். பிரசவிக்க எதிர்பார்த்திருக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் குழந்தைப்பிறப்பு ஓர் மறக்க முடியாத அனுபவமாகும். இதை ஒரு பாதுகாப்பான, சௌகரியமான அனுபவமாக ஆக்குவதே எங்களது நோக்கமாகும்.
கீரை.. கீரை.. எப்படி கீரே?
அரைக்கீரை: தாது விருத்தி செய்யும். ரத்தத்தை உற்பத்தி செய்யும். கபத்தை உடைத்து வெளியேற்றும். வாத நோய் தணிக்கும்.
அகத்திக்கீரை: பித்தம் குணமாகும். ஜீரணசக்தி உண்டு பண்ணும். இழந்த பலத்தை மீட்டுத்தரும். மலத்தை இளக்கி வெளியேற்றும். வைட்டமின் ஏ மற்றும் கால்சியம் அதிக அளவில் இருப்பதால் உடல் வளர்ச்சியையும், கண் பார்வை தெளிவையும், எலும்பு பலமும் கொடுக்கும்.
குறையும் கட்டுமானப்பொருள்களின் விலை… வீடு கட்ட சரியான நேரமா?
எங்கு பார்த்தாலும் பொருளாதார மந்தநிலை பற்றிய பேச்சுகளே அடிபடுகின்றன. பெரிய நிறுவனங்களில் உற்பத்தி மற்றும் ஆள்குறைப்பு நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன. இதனால், பெரிய நிறுவனங்களைச் சார்ந்து இயங்குகிற சிறு, குறு நிறுவனங் களும் பாதிப்பு அடைகின்றன. இதன் தாக்கம், உடனடியாக வங்கிகளின் வாராக்கடனாக உருவெடுக்கின்றன. இதனால் நிறுவனங்களின் செயல்பாடுகளில் மேலும் தொய்வு ஏற்படுகிறது. ஒட்டுமொத்தத்தில், நுகர்வோர் தேவை குறைகிறது.