வாய்ப்புண்

இன்று வாய்ப்புண் வருவது சாதாரண விஷயமாகிவிட்டது. அதை சரியாக கவனிக்காமல் விட்டால் பிரச்சினை பெரிதாகிவிடும். ஆரம்பத்தில் உதடு, கன்னம், நாக்கு ஆகிய பகுதிகளில் சிறிதாகத் தோன்றும் கொப்பு ளங்கள் நாளடைவில் உடைந்து குழிப்புண்களாக மாறி வலியை உண்டாக்கும். இதனால் சாப்பிடும்போதும் பேசும்போதும் வலி எடுக்கும்.

காய்ச்சல் வரும், உடல்வலி, தலைவலி எனத் தொல்லைகள் பெருகும்.  மன அழுத்தம், பாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமிகளால் வாய்ப்புண் ஏற்படுகிறது. தவிர, வைட்டமின் ‘பி’ சத்துக் குறைவாலும், இரைப்பை மற்றும் குடல் சார்ந்த நோய்களாலும் ஏற்படுகிறது. சிகரெட், பீடி புகைக்கும் பழக்கம் இருந்தாலும் வாய்ப்புண் வரும்.
இதனால் உணவு விழுங்குவதில் சிரமம் ஏற்படும். வாயில் துர்நாற்றம் வீசும். வாய்ப்புண் நீண்ட நாட்கள் தொடர்ந்தால் புற்று  நோயாக மாறவும் வாய்ப்புண்டு. ஆண்களைவிட பெண்களுக்குத்தான் இந்தத் தொல்லை அதிகம்.

%d bloggers like this: