கமல் கட்சி தேறுமா? தேறாதா? பிரஷாந்த் கிஷோரிடம் ரஜினிகாந்த் வைத்த ஒரே கேள்வி: கடுப்பேறிய கமல்ஹாசன்.

மக்கள் செல்வாக்கு கெத்தாக இருந்தால் அரசியல் கட்சி துவங்கியது அந்தக் காலம். ஆனால், கெத்தான அரசியல் ஆலோசகரும், அவரது கம்பெனியின் பிராஜெக்ட்டும்

கிடைத்தால் கட்சி துவங்குவது இந்தக் காலம். ஆம் இந்தியாவில் அரசியல் கன்சல்டன்ட்-களின் வழிகாட்டலை நம்பித்தான் அரசியல் நடந்து கொண்டிருக்கிறது. மோடியை இரண்டாவது முறையும் பிரதமராக்கியதும், நிதிஷ்குமாரை முதல்வராக்கியதும், ஜெகன்மோகன் ரெட்டியை அதிரிபுதிரியாக முதல்வராக்கியதும், மு.க. ஸ்டாலினை ஜெயலலிதாவே அதிரும் வண்ணம் பலமான எதிர்க்கட்சி தலைவராக்கியதும் இதே அரசியல் கன்சல்டன்ட்கள்தான்.

அப்படியானால் கட்சி துவங்கி, ஒரு நாடாளுமன்ற தேர்தலை கம்பீரமாக சந்தித்துவிட்ட கமல்ஹாசன் இந்த ட்ரிக்கை விட்டு வைப்பாரா?

இந்த நிலையில் கமல் அணுகிய சற்று சில நாட்கள் கழித்து அ.தி.மு.க.வும் பிரஷாந்தை அணுகியது. ஆனால் கமலுக்கு கமிட் ஆகிவிட்டதால் அ.தி.மு.க.வுடன் இணையவில்லை கிஷார். சூழல் இப்படியிருக்கும் நிலையில், ஏதோ சில காரணங்களுக்காக கமல் கட்சியுடனான ப்ராஜெக்டிலிருந்து பிரஷாந்த் விலகிவிட்டார் எனும் பேச்சும் கடந்த வாரம் எழுந்தது.

இச்சூழலில் நடிகர் ரஜினிகாந்த், பிரஷாந்த் கிஷோரை சந்தித்துப் பேசியுள்ளார்! எனும் தகவல் வெளியாகி உள்ளது. தர்பார் ஷூட்டிங்குக்காக மும்பையிலிருந்த ரஜினி இந்த சந்திப்பை மேற்கொண்டாராம். எதிர்வரும் சட்டமன்ற தேர்தலின் போது கட்சியை துவங்க இருப்பதாக சொல்லியிருக்கும் ரஜினி, அடிப்படை தகவல்கள் சிலவற்றை பிரஷாந்திடம் கேட்டறிந்தாராம். அதை விட முக்கியமாக, கமல்ஹாசன் கட்சியை பற்றி சில முக்கிய தகவல்களை ரஜினி கேட்டார்!என்று சொல்லப்படுகிறது.

‘கமல்ஹாசன் கட்சிக்கு தமிழகத்தில் செல்வாக்கு எப்படியுள்ளது? தனிப்பட்ட முறையில் கமலுக்கு எப்படி செல்வாக்குள்ளது?’ என்று ஆரம்பித்து அக்கட்சி தேறுமா? அல்லது தேறாதா! என்கிற அளவுக்கு ரஜினி குடைந்து குடைந்து கேள்விகளை கேட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கட்சி துவங்கும் முன்பாகவே ரஜினி செய்யும் இந்த பைபாஸ் அரசியல் குறித்து கமல் டீம் செம்ம கடுப்பாகி உள்ளது.

%d bloggers like this: