அம்மா’ இரு சக்கர வாகனம்.. எப்படி விண்ணப்பிப்பது? என்ன தேவை?

தமிழ்நாட்டில் பணிக்கு செல்லும் ஏழை மகளிருக்கான மானிய விலையில் வழங்கப்பட்டு வரும் இருசக்கர வாகனங்களுக்கான விண்ணப்பங்களை நேற்று முதல் மாநகராட்சி அலுவலகங்கள் வழங்கி வருகின்றன. தமிழக அரசு தரும்

இருசக்கர வாகனங்களுக்கான மானியத் தொகையை எப்படி பெறுவது, அதற்கான விண்ணப்பங்கள் எங்கே கிடைக்கும், தகுதிகள், வேண்டிய ஆவணங்கள் என்ன என்பதைப் பற்றியெல்லாம் இந்த கட்டுரையில் படிக்கலாம் வாங்க!

தமிழ்நாட்டில் வசித்து வரும் பெண்கள் இந்த மானிய விலையிலான வாகனத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

வாகனம் 01.01.2018 தேதிக்கு பின்னர் தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். மேலும், வாங்கப்படும் வாகனம் புதிய மாசுக்கட்டுப்பாட்டு விதிமுறைகளுக்கு உட்பட்டு தயாரிக்கப்பட்டதாகவும், மோட்டார் வாகன சட்டம் 1988-ன் கீழ் வட்டார போக்குவரத்து அலுவலரால் பதிவு செய்யப்படும் வகையில் இருக்க வேண்டும். இருசக்கர வாகனமானது 125 சிசி குதிரைத்திறன் சக்தி கொண்டதாகவும் இருப்பது அவசியம்.
வாகனத்தின் மானியத்திற்காக விண்ணப்பிக்கும் போது, விண்ணப்பிப்பவர்களின் வயது, முகவரி, ஓட்டுநர் உரிமம், வருமானம் உள்ளிட்ட சான்றுகளையும் இணைக்க வேண்டியது அவசியம்.

%d bloggers like this: