எஸ்பிஐ வங்கியின் புதிய வீட்டுக் கடன்..! வரலாறு காணாத குறைந்த வட்டியாம்..!

எஸ்பிஐ வங்கி இந்தியாவியாவிலேயே முதன் முறையாக, ஆர்பிஐ வங்கியின் ரெப்போ ரேட் அடிப்படையில் வட்டி விகிதம் கொண்ட வீட்டுக் கடன் திட்டத்தை அறிவித்து இருக்கிறார்கள். இதற்கு முன்பே ஜூலை 2019-ல்

எஸ்பிஐ ரெப்போ ரேட் அடிப்படையில் இயங்கும் வீட்டுக் கடன் திட்டத்தை அறிவித்தது. ஆனால் சில நடைமுறை சிக்கல்கள் இருந்ததால், தன் ஜூலை 2019-ல் அரிமுகப்படுத்திய திட்டத்தை பின் வாங்கிக் கொண்டது.

ஆனால் இப்போது தெளிவாக, திட்டம் போட்டு, கடன் திட்டங்களை வடிவமைத்து களம் இறங்கி இருக்கிறது எஸ்பிஐ. இந்த ரெப்போ ரேட் விகிதங்களின் அடிப்படையில், வீட்டுக் கடன் மட்டும் இல்லாமல், இனி சிறு குறு தொழில் முனைவோர்களுக்கான ஃப்ளோட்டிங் வட்டி விகித கடன், சில்லறைக் கடன் போன்றவைகளையும் வரும் அக்டோபர் 01, 2019 முதல் கொடுக்க முடிவு செய்து இருக்கிறதாம். சுருக்கமாக எஸ்பிஐ வங்கி தன் External Benchmark-ஆக எடுத்துக் கொண்டு அனைத்து ஃப்ளோட்டிங் கடன்களையும் கொடுக்க இருக்கிறதாம்.

சரி புதிய ரெப்போ ரேட் வட்டி விகித எஸ்பிஐ வீட்டுக் கடனைப் பார்ப்போம்.

எஸ்பிஐ வங்கி ரெப்போ ரேட் வட்டி விகிதமான 5.40 சதவிகிதத்துடன் 2.65 % வட்டியை ஸ்பிரட் என்கிற பெயரில் கூடுதலாக வைப்பார்களாம். அதன் பிறகு பிரீமியம் என்கிற பெயரில் 0.15 சதவிகித வட்டியை வைப்பார்களாம். ஆக மொத்தம் 5.40 + 2.65 + 0.15 = 8.20 சதவிகித வட்டிக்கு 30 லட்சம் ரூபாய் வீட்டுக் கடன் வாங்கலாம். இது மாத சம்பளம் வாங்குபவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

2. 30 – 75 லட்சம்

எஸ்பிஐ வங்கி ரெப்போ ரேட் வட்டி விகிதமான 5.40 சதவிகிதத்துடன் 2.65 % வட்டியை ஸ்பிரட் என்கிற பெயரில் கூடுதலாக வைப்பார்களாம். அதன் பிறகு பிரீமியம் என்கிற பெயரில் 0.40 சதவிகித வட்டியை வைப்பார்களாம். ஆக மொத்தம் 5.40 + 2.65 + 0.40 = 8.45 சதவிகித வட்டிக்கு 30 – 75 லட்சம் ரூபாய் வீட்டுக் கடன் வாங்கலாம். இது மாத சம்பளம் வாங்குபவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

3. 75 லட்சம் ரூபாய்க்கு மேல்

எஸ்பிஐ வங்கி ரெப்போ ரேட் வட்டி விகிதமான 5.40 சதவிகிதத்துடன் 2.65 % வட்டியை ஸ்பிரட் என்கிற பெயரில் கூடுதலாக வைப்பார்களாம். அதன் பிறகு பிரீமியம் என்கிற பெயரில் 0.50 சதவிகித வட்டியை வைப்பார்களாம். ஆக மொத்தம் 5.40 + 2.65 + 0.50 = 8.55 சதவிகித வட்டிக்கு 30 – 75 லட்சம் ரூபாய் வீட்டுக் கடன் வாங்கலாம். இது மாத சம்பளம் வாங்குபவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

4. சம்பளம் வாங்காதவர்களுக்கு

சம்பளம் வாங்காதவர்கள், இந்த எஸ்பிஐ வீட்டுக் கடனுக்கு, அவர்கள் வாங்கும் கடன் அளவு பொருத்து மேலே சொன்னது போல வட்டி விகிதங்கள் வரும் . அதோடு கூடுதலாக ஒரு 0.15 சதவிகிதத்தை கடனின் கார்ட் ரேட் உடன் கூடுதலாக வைப்பார்களாம். எனவே சம்பளம் வாங்குபவர்களை விட, சம்பளம் வாங்காதவர்கள் கூடுதலாக வட்டி செலுத்த வேண்டி இருக்கும்.

5. பெண்கள்

பெண்கள் இந்த வீட்டுக் கடன் வாங்கும் திட்டத்தில் கடன் வாங்க வந்தால், மேலே சொன்ன அனைத்து திட்டங்களில் இருந்தும் 0.05 சதவிகிதம் வட்டி மேலும் குறைத்து கொடுக்கப்படும் எனச் சொல்லி இருக்கிறது ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா நிர்வாகம். ஆனால் இந்த வசதி ஜாயிண்ட் கணக்குகளுக்கு உண்டா என தெளிவுபடுத்தவில்லை எஸ் பி ஐ நிர்வாகம்.

6. வீட்டின் மதிப்பில் 80 – 90%

வீட்டின் மொத்த மதிப்பில் 80 சதவிகிதத்துக்கு மேல் ஆனால் 90 சதவிகிதத்துக்குள் கடன் வாங்குவதாக இருந்தால் கூடுதலாக 0.10 சதவிகிதம் வட்டி குறைக்கப்படுமாம். உதாரணமாக: ராணி 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீட்டை வாங்கப் போகிறார். இப்போது தன் சொந்த காசாக 5 லட்சம் ரூபாய் கொடுத்து, மீதம் 45 லட்சம் ரூபாயை கடன் வாங்குகிறார் என்றால், வீட்டின் மொத்த மதிப்பில் 90 சதவிகிதத்தை கடன் வாங்குகிறார் என்று பொருள். எனவே இவருக்கு 0.10 % வட்டி மேலும் குறையும்.

%d bloggers like this: