வெளிவராத டி.டி.வி.தினகரனின் திகில் பின்னணி… புட்டுப்புட்டு வைக்கும் அதிமுக..!

அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மா நாளிதழில் ‘காலத்திய துரோகங்களும் கையிலுள்ள ஜாதகங்களும்…’ என்கிற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியாகி இருக்கிறது.

அதில், டி.டி.வி.தினகரனின் ஜாதகமே என் கையில் என்கிறாரே புகழேந்தி… இதுல என்ன வியப்பு. திருவாளர் டோக்கனாரின் பாஸ்போர்ட் நீதிமன்றத்தின் கையில், அவரது நிதி ஒழுக்கம் மற்றும் அந்நிய செலவாணி விதிமுறைகள் குறித்த விபரங்கள் அனைத்தும் அமலாக்கப்பிரிவின் கையில், தேர்தல் ஆணையத்துக்கே லஞ்சம் கொடுக்க முனைந்த மேற்படியாரின் குற்றச்செயல் விபரங்கள் சி.பி.ஐயின் பிடியில். இதுபோக அன்றைய சென்னை மத்திய சிறை, கடலூர் மத்திய சிறை மற்றும் திகார் சிறை ஆகியவற்றில் முட்டைப் போண்டாவின் குற்ற நடவடிக்கைகளின் பட்டியல்.

இவை போக அனைத்திந்திய அண்ணா திமுகவுக்கும், புரட்சித் தலைவி அம்மாவுக்கும் அவர் இழைத்த துரோகங்கள் அத்தனையும் ஒன்றரை கோடி தொண்டர்களின் உள்ளங்கையில் நெல்லிக்கனியாக… இதுபோக இன்னும் பொதுவுக்கு வராத திகார்கரனின் திகில் விபரங்கள் எல்லாம் ஜாதக வடிவில் நேற்று வரை அவருக்கு சொம்படித்த பெங்களூரு புகழேந்தியின் கையில் என்றால் இப்ப சொல்லுங்க தமிழ்நாட்டு எல்லைக்குள்ளேயே அவரை தலைகாட்டக்கூடாது என்று பாண்டிச்சேரி பக்கமாக பத்திவிட்ட நம் அம்மாவின் நடவடிக்கை எவ்வளவு நியாயமானது என்பதற்கு நீளுகிற இந்த அன்னாரது நேர்மை குறிப்புகளே போதும்தானே.பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல் தாமே வரும் என்பதற்கு சந்தி சிரிக்கும் இந்த ஜாதக குறிப்புகளே போதும் தானே. வெட்கம் வெட்கம்’’ என கடுமையாக விமர்சித்துள்ளது.

%d bloggers like this: