உங்களுக்கு கடன் தேவைப்படுகிறதா வங்கிகள் முகாம் நடத்துகின்றன சென்று பயனடையுங்கள் !

உங்களுக்கு கடன் தேவைப்படுகிறதா வங்கிகள் முகாம் நடத்துகின்றன சென்று பயனடையுங்கள் !

அனைத்துப் பொதுத்துறை, தனியார் துறை வங்கிகள் இணைந்து வாடிக்கையாளர் சந்திப்பு

நிகழ்ச்சிகளை நடத்த முடிவு செய்துள்ளன. இந்த நிகழ்ச்சி, பொதுமக்கள் மற்றும் வங்கிச்சேவை பெறுவோர் குழுக்கள் இடையே வங்கியின் கடன் வழங்கும் நடைமுறைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

சில்லரை வியாபாரம், விவசாயம், சுயஉதவிக் குழுக்களுக்கான நிதி, வாகனம், வீட்டுவசதி, கல்வி, தனிநபர் கடன்கள், குறு-சிறு-நடுத்தரத் தொழில் கடன்கள் ஆகியவை விரைவில் கிடைக்க இந்தக் கூட்டங்களில் ஏற்பாடு செய்யப்படும். நிகழ்ச்சியின் போது, கடன் மறுசீரமைப்பு, ஒரே நேரக் கடன் தீர்வு ஆகியவையும் மேற்கொள்ளப்படும்.

இந்தத் திட்டம் இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்படும். முதற்கட்டமாக அக்டோபர் மாதம் 3-ஆம் தேதியிலிருந்து 7-ஆம் தேதிவரை இதற்கான முகாம்கள் நடைபெறும். இதில் பொதுமக்கள் பங்கேற்கலாம். இரண்டாம் கட்டத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் இரண்டு அல்லது மூன்று நாள் நிகழ்வுகள் அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதிவரை நடத்தப்படும்.

இந்தத் திட்டத்துக்கான மாநில வங்கியாளர் குழுவுக்கு இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, ஒருங்கிணைப்பாளராக செயல்படும். இந்த வங்கி இதர வங்கிகளுடன் இணைந்து சென்னைத் தியாகராய நகரில் இத்தகைய முகாம்களை அடுத்தமாதம் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் நடத்தத் திட்டமிட்டுள்ளது. இதில் வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள் சிறு தொழில் மேம்பாட்டுக்கான இந்திய வங்கி ஆகியவற்றுடன் தனியார் துறை வங்கிகளும் பங்கேற்கின்றன.

இந்த முகாமிலும், டிஜிட்டல் பணம் செலுத்தும் முறைகள், உள்ளடக்கிய நிதித் திட்ட சேவைகள், கடன்கள் குறிப்பாக சிறு-குறு-நடுத்தர தொழில் கடன்கள் மறுசீரமைப்பு உள்ளிட்ட சேவைகள் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் என்று இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

The post உங்களுக்கு கடன் தேவைப்படுகிறதா வங்கிகள் முகாம் நடத்துகின்றன சென்று பயனடையுங்கள் !

One response

  1. 0ll)lll)llllll

%d bloggers like this: