வாய் சொல்லில் வீரரடி இந்த போலி திராவிட பகுத்தறிவு போராளிகள்!

தமிழ் வளர்ச்சியில் பங்கு வகித்தவர்களுக்கும், அதை வைத்து அரசியல் செய்தவர்களுக்கும், எந்த விதமான தொடர்பும் கிடையாது. உ.வே.சா., தன் வாழ் நாளையெல்லாம் ஓலைச்சுடிகளை தேடி தேடி அலைந்து அவற்றை அடுத்த கட்டமாக

ஆவணப்படுத்துவதிலேயே கழித்தார். அவர் அளவிற்கு எல்லோரும் கொண்டாடும் தமிழ் வளர்க்கும் அறிஞரை இன்றளவும் காணவில்லை.

சங்க இலக்கியங்களில் பல பாடல்கள் இன்றும் கிடைக்கவில்லை. புறநானுாற்றை தொகுத்தவர் பெயர் இன்றளவும் தெரியவில்லை. இவ்வளவு ஏன், தஞ்சை சரஸ்வதி மகாலில் உள்ள ஓலைச்சுவடிகள் முழுமையாக பதிப்பிக்கப்படவில்லை. தமிழ் பல்கலைக்கழகங்களில் வெளியிட வேண்டிய ஆய்வு கட்டுரைகள் இன்னமும் காத்துகிடக்கின்றன.

பொதுவாக திராவிட இலக்கியங்கள் எனப்படும் இக்கால அரசியல் சார்பு எழுத்தாளர்களின் படைப்புகள் இந்துமதத்தை இழிவு படுத்துவதாகவே இருக்கிறது. தமிழின் வளர்ச்சிக்கு உறுதுணையாக நிற்கும் மிகப்பெரிய பக்தி இலக்கியங்களை எள்ளி நகையாடி, தற்கால அரசியலுக்கு ஓட்டுகள் சேகரிக்கும் கருவியாகத்தான் இலக்கியங்கள் படைக்கப்பட்டன. இப்படிப்பட்ட வியாபாரிகளால் தமிழ் என்றும் வளரவில்லை என்பது இவர்களின் நுால்களை படித்தால் எளிதில் புரிந்து கொள்ளலாம்.

இவர்கள் செய்தது எல்லாம் இந்தி பூச்சாண்டி காட்டி ஆங்கிலத்தைக் கொண்டு தமிழை அழித்தது தான். தமிழகத்தில் படித்த 2 பேர் சந்தித்தால் கூட ஆங்கிலத்தில் பேசும் அடிமை கலாச்சாரத்தை வளர்த்தவர்கள் இவர்கள். வெளியே தமிழ் பற்றாளர்களாக தெரியும் இவர்கள் தான் தமிழில் பேசினால் அபராதம் விதிக்கும் பள்ளிகளை நடத்துகிறார்கள். இன்றைக்கு தமிழே தெரியாமல் தமிழகத்தில் எந்த பதவியையும் அடையலாம் என்ற இலக்கணத்தை உருவாக்கியவர்களும் இவர்களே.

இந்தி பூசாண்டி காட்டி ஆட்சியில் அமர்வது தான் இவர்கள் தமிழுக்கு நடத்தும் போராட்டம். தற்போதுள்ள அரசாவது வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் தமிழ் படிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் தமிழ் என் பேச்சு, தமிழ் என் மூச்சு என்று பேசுபவர்கள், அவ்வாறு எதையும் செய்யாமல் வெற்றுக் கூச்சலாகவே தங்களின் மொழிப்பற்றை காட்டிக் கொண்டார்கள்.

மத்தியில் பாஜக அரசு அமைந்த பிறகு, தமிழ் எங்கு வளர வேண்டுமோ, அங்கு தமிழ் குறித்து பேசி வருகிறது. பாஜக தருண் விஜய், வட மாநிலங்களில் தமிழை பரப்புவதில் உண்மையான முயற்சிகளை மேற்கொண்டார். நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பட்ஜெட்டிலேயே புறநானுாற்றுப்பாடலை எடுத்தாண்டார்.

இவற்றுக் கெல்லாம் மேலாக, பிரதமர் நரேந்திர மோடி, மற்ற வடநாட்டுத் தலைவர்களைப் போல தமிழகத்தில் வரும் போது சகோதர சகோதரிகளே வணக்கம் என்று மட்டும் கூறி தன்னை தமிழ் ஆர்வலராக காட்டிக் கொள்ளாமல், எந்த இடமாக இருந்தாலும், அதற்கு ஏற்ப தமிழ் புலவர்களின் பாடல்களை குறிப்பிட்டு, தமிழின் தொண்மையை வெளிப்படுத்தி வருகிறார்.

இதற்கும் மேலாக சீனத் தலைவர், மோடி சந்திப்பு மகாபலிபுரத்தில் சந்திக்கிறார்கள். நிச்சயம் இதன் பின்னர் மகாபலிபுரம், அதன் வரலாற்று பெருமைகள் சீனாவில் நிச்சயம் பரவும்.

தமிழ் வளர்ச்சியில் காசிமடம் உள்ளிட்ட சைவ மடங்களின் பங்கு அதிகம். அதே போல நகரத்தார்கள் பங்கு மிக அதிகம். இஸ்ரேலில் எந்த விழாவாக இருந்தாலும் மரம் நடுவது பழக்கம். அதே போல நகரத்தார் வீட்டில் திருமணம் போன்ற எந்த நிகழ்ச்சி நடந்தாலும், புத்தங்கள் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருந்தனர். அவ்வளவும் கையடக்க பிரதிகள்.

கடையில் கால் அணா கூட குறைத்துக் கொள்ளாத செட்டியார், கோடி கோடியாக கொட்டி கோயில்களை பராமரிப்பதும், தமிழ் வளர்ச்சிக்கு செலவு செய்வதையும் வழக்கமாக கொண்டிருந்தார்கள் என்பது நினைக்க வியப்பளிப்பது. அவர்கள் அருட் கொடைதான், அண்ணாமலை பல்கலைக்கழகம், செந்தமிழ்க் கல்லுாரி போன்ற ஸ்தாபனங்கள்.

திருநெல்வேலி பகுதியில் இருந்து இன்றைக்கு தமிழகம் முழுவதும் விரவி இருக்கும் சைவ சித்தாந்த நுாற்பதிப்புக்கழகம், அவ்வளவு ஏன் இங்கு இடதுசாரி சிந்தனையை பரப்ப நினைத்த ரஷ்யாவின் மீர் பதிப்பகம் போன்றவை தமிழுக்கு செய்த சேவைகளில் 10 சதவீதத்தைக் கூட திராவிடம் பேசும் பேச்சு வியாபாரிகள் செய்யவில்லை. அதனால் தான் பாரதியாரின் வாய்ச்சொல்லில் வீரர் என்ற வார்த்தைகளுக்கு இலக்கணமாக திகழ்கிறார்.

%d bloggers like this: