15 நாள்ல சர்க்கரை நோயை கட்டுக்குள் கொண்டு வரலாம்!

பாஸ்ட்புட் உணவு கலாசாரத்தினாலும், போதிய உடல் உழைப்பு இல்லாததினாலும் இருபது வயதைத் தொடும் போதே சமீபமாய் பலருக்கும் சர்க்கரை நோயும் வந்து விடுகிறது. இவர்களில் பெரும்பாலானோர்க்கு நோய் எதிர்ப்பு சக்தியும்

இருப்பதில்லை. மருந்து மாத்திரைகளை காலம் முழுக்க சாப்பிட்டு கொண்டிருக்காமல், உணவையே மருந்தாக மாற்றிக் கொண்டால், நம் உணவு முறைகளிலேயே சர்க்கரையின் அளவை கட்டுக்குள் மிக எளிதாக கொண்டு வந்து விடலாம்.
தினமும் ஒரு நாட்டு கொய்யா பழத்தை சாப்பிடுங்கள். பழத்தை அப்படியே கடித்து சாப்பிட்டால் சர்க்கரையின் அளவு கூடாது.அப்படி ஒரு வேளை நாட்டு கொய்யா கிடைக்கவில்லை என்றால் தினமும் குறைந்தது 2 நெல்லிக்காயாவது சாப்பிட வேண்டும்.
இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும். இரத்தம், மற்றும் சிறுநீரில் சர்க்கரையின் அளவு அதிகம் கலந்திருப்பது தான் சர்க்கரை நோய்க்கான காரணம். இதற்கு தீர்வு பாவற்காய் மற்றும் நெல்லிக்காய் தான். முதலில் உங்கள் உடம்பிலுள்ள சர்க்கரையின் அளவை பரிசோதித்துக் கொள்ளுங்கள்.

சர்க்கரையின் அளவு அதிகமாக இருந்தால் 100 கிராம் பாவற்காய் மற்றும் இரண்டு நெல்லிக்காய் எடுத்துக் கொள்ளுங்கள். இரண்டையும் நன்றாக கழுவிக் கொண்டு, இப்போது இரண்டிலும் விதைகளை நீக்கி சிறியதாக வெட்டிக் கொள்ளுங்கள். இவற்றை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து எடுத்து வடித்துக் கொள்ளுங்கள். மிக்ஸியில் அரைக்கும் முன் தண்ணீர் சிறிதளவு சேர்த்துக் கொள்ளவும்.

இப்போது சர்க்கரை நோய்க்கான ஜூஸ் தயார். இந்த ஜூஸைத் தொடர்ந்து 5 நாட்களுக்கு காலை வெறும் வயிற்றில் குடித்து வாருங்கள். ஜூஸ் குடித்து விட்டு 15 நிமிடங்கள் வேர்வை வரும் வரை நடக்கவும். இது சர்க்கரையின் அளவை வேகமாக குறைப்பதால் உங்கள் சர்க்கரையின் அளவை பரிசோதனை செய்து கொள்ளுங்கள். சாதாரண அளவில் சர்க்கரை உள்ளவர்கள் இந்த ஜூஸின் அளவை கொஞ்சம் குறைத்து எடுத்துக் கொள்ளலாம்! இப்படி செய்து வந்தால், 15 நாட்களிலேயே சர்க்கரையின் அளவு உங்கள் கட்டுக்குள் வந்துவிடும்!

%d bloggers like this: