Advertisements

வாக்கிங்கை விட அதிக நன்மைகள் தரும் ஜாக்கிங்

மனநிலையில் மாற்றம்: மன அழுத்தம் இருப்பவர்கள் குறைந்தது தினமும் அரைமணி நேரம் ஜாக்கிங் செய்து வந்தால் மனநிலையில் நல்ல முன்னேற்ற காணலாம்.

ஆயுள் நீடிக்கும்: தினமும் 10 – 20 நிமிடங்கள் ஜாக்கிங் செய்து வந்தால், உங்கள் மரணத்திற்கான சதவீதம் 30 – 60% குறைகிறதாம்.

உடல் எடை: தினமும் ஜாக்கிங் செய்வதனால் உடல் எடைக் குறையும். வாக்கிங் செய்வதை விட இரண்டில் இருந்து மூன்று மடங்கு வரை அதிக உடல் எடைக் குறைவு ஏற்படும்.

மூட்டு வலி: தினமும் ஜாக்கிங் செய்பவர்களுக்கு மற்றவர்களை விட 25% குறைவாக தான் மூட்டு வலிப் பிரச்சனைகள் வருகிறது.

வளர்ச்சிதை: மாற்றம் ஜாக்கிங் செய்வதை வழக்கமாக வைத்திருந்தால், உங்கள் நுரையீரல் நன்கு விரிவடையும், இரத்த ஓட்டம் சீராகும், உடற்திறனில் நல்ல மாற்றம் தெரியும்.

இதயம்: தினமும் குறைந்தது ஒரு கி.மீ தூரம் ஜாக்கிங் சென்று வந்தீர்கள் என்றால் இதயப் பாதிப்புகள் வரும் வாய்ப்புகள் 50% வரை குறையும்.

நீரிழிவு நோய்: குறைந்தது வாரம் ஐந்து நாட்களாவது அரைமணி நேரம் ஜாக்கிங் செய்துவந்தால் நீரிழிவு நோய் பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புகள் குறையும்.

எலும்புகள்: தினமும் ஜாக்கிங் செய்வதனால் உங்கள் எலும்புகள் வலுமை அடைகின்றன. இதனால் முதுமையில் ஏற்படும் மூட்டுப் பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.

உறக்கம்: தினமும் குறைந்தது 30 நிமிடங்கள் ஜாக்கிங் செய்வதனால் தூக்கமின்மை குறையும், நல்ல உறக்கம் வரும்.

ஞாபக சக்தி: ஜாக்கிங் செய்வதனால் உங்கள் மூளை சுறுசுறுப்பு ஆகிறது, இதனால் உங்கள் நினைவாற்றல் அதிகரிக்கும்.

Advertisements
%d bloggers like this: