தலைவலி, மூட்டுவலியை நீக்கும் கண்டங்கத்திரி இலைச்சாறு!

வேரோடுப் பறித்து வந்து, சிறிய துண்டுகளாக வெட்டி, நிழலில் காயவைத்துப் பொடி செய்துகொள்ள வேண்டும். பொடியில் குடிநீர் தயாரித்து உண்டு வந்தால், நாள்பட்ட ஆஸ்துமா நோய் குணமாகும்

கண்டங்கத்திரி

கத்திரியில் நிறைய வகைகள் இருந்துள்ளன. திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரி அருகே, குப்பக்குறிச்சி என்ற சிற்றூர் உண்டு. அந்த ஊரின் பெயரில் ‘குப்பக்குறிச்சிக் கத்திரிக்காய்’ என்ற ஒருவகை கத்திரி திருநெல்வேலி சந்தைக்கு வரும். சுத்தமான வெள்ளை நிறத்தில், பார்ப்பதற்கு முட்டையைப் போலவே காட்சி தரும். 30 ஆண்டுகளுக்கு முன்னர் காணப்பட்ட இந்த இனம், இன்று காணாமல் போய்விட்டது. இதுபோல நிறைய உள்ளூர் வகை காய்கறிகள் காணாமல் போய்விட்டன. விரிவாக படிக்க க்ளிக் செய்க… http://bit.ly/2mNBpE9

கத்திரியின் வேர், ஆஸ்துமா முதலான கப நோய்களுக்கான குடிநீர், சூரணம் மற்றும் லேகியங்களில் சேர்க்கப்படுகிறது. கத்திரிப்பழத்தில் ஊசியினால் பல இடங்களில் குத்தி, நல்லெண்ணெயில் வறுத்து உண்டு வந்தால் பல்வலி தீரும். கத்திரிப்பிஞ்சு, எள், வெல்லம் ஆகியவற்றைச் சம எடையளவு எடுத்து, அரைத்துக்கொள்ள வேண்டும். அதை 3 நாள்களுக்கு உப்பில்லாப்பத்தியம் மேற்கொண்டு, எலுமிச்சம்பழம் அளவு காலை, மாலை என உண்டு வந்தால், வெறி நாய்க்கடி தீரும் என்கிறது கண்ணுசாமிப் பிள்ளை எழுதிய பதார்த்த குணசிந்தாமணி.

கண்டங்கத்திரி

கண்டங்கத்திரி

முள்ளுக்கத்திரி… எல்லா இடங்களிலும் குறிப்பாகக் குப்பைமேட்டில் அதிகமாகக் காணப்படும் ஒரு தாவர இனம் இது. செடி, இலை, பூ, காய் அனைத்தும் கத்திரிக்காய் போலவே இருக்கும். ஆனால், இலைகளில் அதிகமாக முட்கள் காணப்படும். வேர்களுக்காக இவை சேகரிக்கப்படுகின்றன. இது ‘பப்ர முள்ளி’, ‘பாப்பார முள்ளி’ என்றும் அழைக்கப்படுகிறது. சமையலுக்கு ஆகாது. இதைச் சிலர் கண்டங்கத்திரி என்று தவறுதலாகச் சொல்கிறார்கள்.

இதை வேரோடுப் பறித்து வந்து, சிறிய துண்டுகளாக வெட்டி, நிழலில் காயவைத்துப் பொடி செய்துகொள்ள வேண்டும். பொடியில் குடிநீர் தயாரித்து உண்டு வந்தால், நாள்பட்ட ஆஸ்துமா நோய் குணமாகும். பொடியாக எடுத்துக்கொண்டால் 2 முதல் 3 கிராம் அளவும், குடிநீர் என்றால் 50 கிராம் பொடியுடன் 600 மில்லி தண்ணீர் சேர்த்து 150 மில்லியாக வற்றவைத்துப் பயன்படுத்தவும். இதன் விதைகளை காய்ந்த இலைக்குள் போட்டு பீடிபோல் செய்து புகைபிடிக்க, பற்களுக்கிடையே உள்ள புழுக்கள் வெளிப்பட்டுப் பல்வலி நீங்கும்.

கண்டங்கத்திரி

கண்டங்கத்திரி

கண்டங்கத்திரி இலைச்சாற்றுடன் நல்லெண்ணெய் கலந்து காய்ச்சிப் பூசிவர தலைவலி, மூட்டுவலி, அக்குள் நாற்றம் முதலியவை நீங்கும். இந்த இலைச்சாற்றுடன் ஆளிவிதை நெய் சேர்த்துக் காய்ச்சி வெடிப்புகளில் பூசி வந்தால் வெடிப்பு மறையும். சித்த மருந்துகளில் கிடைக்கும் கண்டங்கத்திரி ரசாயனம் அல்லது கண்டங்கத்திரி லேகியத்தைச் சிறுகுழந்தைகளுக்குக் கொடுத்துவர அனைத்துவிதமான சளி, இருமல், மிகக்கொடிய கக்குவான் இருமல்கூட (Whooping Cough) குணமாகும் என்று கண்ணுசாமிப் பிள்ளை, தமது ‘பதார்த்த குணவிளக்கம்’ நூலில் பதிவுசெய்துள்ளார்.

%d bloggers like this: