டி.டி. வி.தினகரனுக்கு சசிகலா வைக்கும் ஆப்பு… கப்பலேறும் மன்னார்குடி குடும்ப மானம்..!

டி.டி.வி.தினகரனை புகழேந்தி ஒரு பிடி பிடித்து விட்டார். மனதில் பல மாதங்களாக தேக்கி வைத்து இருந்தை எல்லாம் கொட்டி தீர்த்துட்டார்.

இதை நேரலையில் பார்த்த டி.டி.வி.தினகரன் கொந்தளித்து போய்விட்டாராம். என்னை எப்படி எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்ய சொல்லலாம். நான் கட்சியை கலைத்து விடுவேனா..? வாய்க்கு வந்தபடி பேசிட்டு போனால் நான் என் இன்னொரு முகத்தை காட்ட வேண்டி இருக்கும் என்று தினகரன் பேசியதாக அடிபொடிகள் மத்தியில் பரபரப்பாக பேச்சுகள் எழுந்துள்ளது.

புகழேந்தியின் பேச்சில் சசிகலா வெளியில் வந்தாலும் டி.டி.வி.தினகரன் தரப்பை ஆதரிக்காது. அவர் எடப்பாடி பழனிசாமியை தான் ஆதரிப்பார் என கூறினார். டி.டி.வி.தினகரன் ஒரு வெத்துவேட்டு அவர் தரப்பில் ஸ்லீப்பர் செல்கள் யாரும் கிடையாது. இடைத்தேர்தல், பொதுத் தேர்தலில் எவ்வளவு வாங்கினார்? எவ்வளவு சுருட்டினார் என்ற தகவல் என்னிடம் உள்ளது

அதை தேவைப்படும்போது வெளியிடுவேன் எனக் கூறினார். அநேகமாக சசிகலாவின் ஒப்புதல் பெற்று டி.டி.வி.தினகரன் சுருட்டிய பணம் பற்றிய தகவலை விரைவில் எதிர்பார்க்கலாம் என்ற ரீதியில் தான் புகழேந்தியின் பேச்சும், செயலும் இருக்கிறது என்கிறார்கள்.

%d bloggers like this: