மழைக்காலத்தில் பாகற்காய், புடலங்காய், பீர்க்கங்காய், கீரைகள் சாப்பிட்டால் சளி பிடிக்குமா? காய்ச்சல் வருமா? தெரிந்துகொள்ளலாமா!

மழைக்காலத்தில் நீர்ச்சத்துள்ள காய்கறிகளைச் சாப்பிடலாமா? கூடாதா? என்ற குழப்பம், பலர் மத்தியிலும் உள்ளது.

▪ கீரைகள் மற்றும் நீர்க்காய்கறிகளுடன் இஞ்சி, பூண்டு, மிளகு, உப்பு சேர்த்து சூப்பாக தயாரித்துப் பருகினால், மிக எளிதாகச் செரிமானமாகும்.

▪ நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகளில் வைட்டமின் ஏ, சி மற்றும் பல்வேறு விதமான தாது உப்புகள் நிறைந்துள்ளதால், அவை நோய் எதிர்ப்பு ஊக்கியாகச் செயல்படும்.

▪ பாகற்காயில் கசப்புத்தன்மை உள்ளதால், அது எல்லாவிதமான காய்ச்சலுக்கும் நோய் எதிர்ப்புத்திறனை அளிக்கும்.

▪ புடலங்காயில் உள்ள வேதிப்பொருள், மலேரியா காய்ச்சலைக் குணப்படுத்தும் தன்மை கொண்டது.

▪ சளி, ஆஸ்துமாவைக் குணப்படுத்தும் தன்மை பீர்க்கங்காயில் உள்ளது. சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்தச் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும்.

▪ கீரைகள் உண்பது உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும். கீரைகளில் பொட்டாசியம், இரும்பு, சோடியம், ஃபோலிக் ஆசிட் மற்றும் பல்வேறு தாது உப்புகள் நிறைந்திருக்கும். நோய் எதிர்ப்புத் திறனை மேம்படுத்தும்.

இதனால் மழைக்காலங்களில் வரக்கூடிய சாதாரண வைரஸ் காய்ச்சலிலிருந்து டெங்கு, எலிக்காய்ச்சல் என அனைத்து விதமான காய்ச்சல்களிலிருந்தும் நம்மைப் பாதுகாக்கும்.

▪ மழைக்கால காய்கறிகளில் பாக்டீரியா, வைரஸ் மற்றும் புழுக்கள் அதிகமாக உள்ளதால், நோய்த்தொற்று ஏற்படாமல் இருக்க மஞ்சள் தூளை சேர்த்து காய்கறிகளை கழுவவேண்டும். மேலும் சமைக்கும்போதும் மஞ்சள் தூளை சேர்த்துக் கொண்டால் சளி பிடிப்பது தவிர்க்கப்படும்.

%d bloggers like this: