இதையெல்லாம் தெரிஞ்சுக்கிட்டா கொசுக்கள் கடிக்காது? ஏன் கொசுக்கள் ஒருத்தரை மட்டுமே அதிகமா கடிக்குது?

பூச்சியினங்களில் கொசுக்கள் வித்தியாசமான பழக்கங்களை உடையவை. மனிதர்களைப் போலவோ, ஆட்டு மந்தைகளைப் போலவோ மனுஷ கூட்டத்தைப்

பார்த்தவுடன் அப்படியே படையெடுத்து, கண்களில் படுபவர்களை எல்லாம் கடித்து ரத்தத்தை உறிவதில்லை. ஆற அமர உட்கார்ந்து, யோசிச்சு, திட்டமிட்டே கடிக்க வேண்டிய நபரை(!) தேர்ந்தெடுக்கிறது.
பொதுவாக, ஆண் கொசுக்கள் யாரையும் கடித்து ரத்தத்தை எல்லாம் உறிவதில்லை. இரத்தத்தை உறிஞ்சு எடுக்கிற பழக்கம் பெண் கொசுக்களுக்கு மட்டும் தான் இருக்கிறது. ஆண் கொசுக்கள் தேனைத் தான் உணவாக எடுத்துக் கொள்கின்றன. இப்படி ரத்தத்தை உறியும் கொசுவிற்கு மற்ற வகை ரத்தங்களை விட அதிகம் பிடித்தது ‘ஓ’ வகை இரத்தம் தானாம்.

அதேபோல் ஜிம்முக்கு எல்லாம் போய் கட்டுமஸ்தான உடம்போடு இருக்கிறவங்களையும் கொசு விருந்தா தான் பார்க்குது. காரணம், உடற்பயிற்சியின் போது தசைகள் இறுக்கமாகி, உடல் இலகுவாகிறதுக்காக தூங்கும் போது அவங்களோட தோல்கள் லாக்டிக் அமிலத்தை வெளியேற்றும். இதெல்லாமே கொசுக்களுக்கு நல்ல சிக்னல்களா இருக்குமாம். கொசு உங்களை உற்று நோக்கிய பின்னரே கடிக்க துவங்குகிறது. அப்படி உற்று பார்க்கும் போது, கொசுவிற்கு அடர் நிறங்கள் தான் தெளிவாக தெரியும். அதனால் கருப்பு, கருஞ்சிவப்பு போன்ற நிறங்களில் ஆடைகளை அணிந்தால் விரைவில் உங்களை கடிக்க துவங்குகிறது. வெளிர் நிற ஆடைகளை அவ்வளவு எளிதில் கண்டறிய இயலாதாம். அதே போல் வெப்பநிலை அதிகம் கொண்ட உடலும் கொசுக்களுக்குப் பிடிக்குமாம். அவர்களுக்கு இரத்தத்தின் அடர்த்தி அதிகமாகவும், தோலிற்கு மிக அருகிலும் இருப்பதால் இரத்தத்தை எளிதில் உறிஞ்சுவிடலாம். இதையெல்லாம் தெரிஞ்சுக்கிட்டீங்கன்னா கொசுக்கடியில் இருந்து தப்பிக்கலாம்!

%d bloggers like this: