இந்தியாவில், 4வது இடத்தில் இருந்து, முதலிடத்துக்கு முன்னேறிய இதய நோய்

இந்தியாவில் 1990 -ம் ஆண்டு நான்காவது இடத்திலிருந்த இதயம் சார்ந்த நோய்கள், தற்போது முதலிடத்தில் உள்ளன. அதே போல 18 -வது இடத்திலிருந்த சர்க்கரை நோய் , 2-வது இடத்தில் உள்ளது. 100 பேரில் 11 பேர் இதய நோய்களாலும், 12 பேர் சர்க்கரை நோயாலும்

பாதிக்கப்பட்டுள்ளனர் என்று உலக இதய தினத்தை முன்னிட்டு சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் இதய இயல் துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றில் மருத்துவர் கே.கண்ணன் இந்த தகவலைக் கூறியுள்ளார்.

வாழ்வியல் முறைகளில் ஏற்பட்ட மாற்றங்கள், துரித உணவுகள், அருகில் இருக்கும் கடைகளுக்கும் இரு சக்கர வாகனத்தை எடுத்துச் செல்வது, உடல் உழைப்பு குறைவானது, பிஸியான வாழ்க்கையில் காலை உணவைத் தவிர்ப்பது , எங்கு சென்றாலும் ஏசி வாகனத்தில் செல்வது, ஏசி இருக்கும் அறையில் உறங்குவது , உடல் பயிற்சி செய்யாமல் இருப்பது எனப் பல காரணங்கள் இதய நோய் அதிகரிக்க.

பரம்பரை மரபணு பிரச்னையாலும் இதய நோய்கள் வருகின்றன. வாழ்க்கை முறையை மாற்றி இதுபோன்ற உடல்நலக்குறைபாடுகளைத் தவிர்க்கலாம் என மருத்துவர் கண்ணன் தெரிவித்துள்ளார்.

%d bloggers like this: