நீங்க அந்த விசயத்தில கில்லாடியா – கணவன் மனைவி பிணைப்பை அதிகரிக்க பரிகாரங்கள்

திருமணம் ஆயிரம் காலத்து பயிர். இருமனம் இணைகின்றன திருமண வாழ்த்து சிறக்க தாம்பத்ய உறவு சிறப்பாக இருக்க வேண்டும். கணவன் மனைவியின் ஆயுள் பலமும் அம்சமாக இருக்கவேண்டும். நீண்ட ஆயுளோடு பரிபூரண சந்தோஷத்தோடு இருந்தால் மட்டுமே கணவனும் மனைவியும்

தலைமுறை தலைமுறையாக சந்தோஷமாக இருக்க வேண்டும். திருமணத்திற்கு பொருத்தம் பார்க்கும் போது இருவரின் ஜாதகம், நடைபெற உள்ள தசாபுத்திகள் எப்படி இருக்கிறது என்று பார்க்க வேண்டும். குரு பார்வை களத்திர ஸ்தானத்திற்கு இருக்கிறதா என்றும் களத்திர காரகன் குருவின் நிலை எப்படி இருக்கிறது என்றும் பார்த்து மணம் முடிக்க வேண்டும். அப்பொழுதுதான் மனமொத்த தம்பதிகளாக இருவரும் இணைபிரியாமல் இருப்பார்கள்.

உயிரினங்கள் அனைவருக்கும் பசி தாகம் போல பாலுணர்வும் பொதுவானதுதான். இதில் சிலருக்கு அதிகமாக இருக்கும். சிலருக்கு குறைவாக இருக்கும். ஹார்மோன்கள் செய்யும் மாயத்தினாலும் நவகிரகங்களின் அமர்வைப் பொறுத்தும் சிலருக்கு கூடவோ குறையவோ இருக்கும். இதற்குத்தான் திருமணத்தின் போது பத்து பொருத்தம் பார்க்கிறார்கள். ஜாதகத்தில் கிரகங்கள் எப்படி இருக்கின்றன தோஷம் இருக்கிறதா என்றும் பார்ப்பது இதற்குத்தான். நாகதோஷம், செவ்வாய் தோஷம், சூரிய தோஷம், சுக்கிரதோஷம், களத்திர தோஷம், மங்கால்யதோஷம் என பலவித தோஷங்கள் திருமணத்திற்கு தடையாக இருக்கின்றன.

எந்த ராசிக்காரர்களுக்கு உணர்வுகள் அதிகம் என்பது ஜோதிடர்களுக்கு தெரியும். கிரகங்களின் அமர்வுகளைப் பொருத்து ஆண் பெண் ஜாதகங்களை சேர்ப்பது அவசியம். சில ராசிக்காரர்கள் சில ராசிக்காரர்களுடன் சேரவே கூடாது. அதே போலத்தான் சில நட்சத்திரகாரர்கள் அந்த மாதிரி விசயத்தில் கூடுதல் ஆர்வத்துடன் இருப்பார்கள். எந்த ராசிக்காரர்களுக்கு பாலுணர்வு எப்படி இருக்கும். எந்த நட்சத்திரக்காரர்கள் அந்த விசயத்தில் எப்படி என்று பார்க்கலாம். கணவன் மனைவி உறவு பிணைப்பு அதிகரிக்க பரிகாரங்களையும் பார்க்கலாம்.

நெருப்பு ராசிக்காரர்கள்

மிதுன ராசிக்காரர்களுக்கு அந்த உணர்வுகள் அதிகமாகவே இருக்கும். சும்மா தாண்டவமாடுமாம். நெருப்பு ராசிக்காரர்களான மேஷம், சிம்மம், தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு அந்த உணர்வு பொதுவாகவே அதிகம் இருக்கும். ரிஷபம், கன்னி,துலாம், மகரம், கும்பம் ராசிக்காரர்களுக்கு மிதமாகவும் இருக்கும். அதிலும் துலாம், கும்பம் ராசிக்காரர்கள் எதையும் வெளிக்காட்டிக்கொள்ள மாட்டார்களாம். கடகம், விருச்சிகம், மீனம் ராசிக்காரர்களுக்கு அதில் ஆர்வம் குறைவாகவே இருக்கும்.

யாருக்கு ஆர்வம் அதிகம்

நட்சத்திரங்களுக்கும் மனிதர்களின் பாலியல் உணர்வுகளுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. அசுவினி, மிருகசீரிடம், மகம், உத்திரம், அனுசம், மூலம்,உத்திராடம் நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு அந்த விசயத்தில் உணர்வு அதிகம் இருக்கும்.

அமைதியான அடக்கமானவர்கள்

பரணி, திருவாதிரை, புனர்பூசம், பூரம், அஸ்தம், சுவாதி, திருவாணம், பூராடம், ரேவதி நட்சத்தில் பிறந்தவர்களுக்கு அந்த விசயத்தில் ஆர்வம் மிதமாக இருக்கும். அதே நேரத்தில் கார்த்திகை, ரோகிணி, பூசம், ஆயில்யம் , சித்திரை, விசாகம், கேட்டை, அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி சராசரி செக்ஸ் உணர்வு இருக்கும். அதை வெளியே காட்டிக் கொள்ளமாட்டார்கள் அதே நேரம் ஏக்கம் அதிகம் இருக்கும்.

சுக்கிரன் கூட்டணி

எட்டில் செவ்வாய், ஆறில் சனி, இரண்டில் சூரியன் இருந்தால் ஒயாது உறவில் ஈடுபடுவர்கள். புதன், சுக்கிரன் ஏழில் இணைந்தால் நல்ல துணையும் சுகமான இன்பத்தை அனுபவிப்பார்கள். மிதுனம், துலாம், ரிசபம், இவைகளில் சுக்கிரன் இருந்தாலும், ஏழில் சுக்கிரன் இருந்தாலும் காம உணர்வு அதிகம். சுக்கிரன் 1-5-9-ல் இருந்தால் அந்த ஜாதகர் ஆயுள் முழுவதும் பெண்களின் அங்க அவயங்களைப்பற்றி எப்போதும் எண்ணிக் கொண்டிருப்பார்கள்.

ஆர்வமின்மை

சிலருக்கு தாம்பத்ய உறவில் ஆர்வமின்மை இருக்கும். அதே நேரத்தில் பெண்களுக்கு அதிக ஆர்வம் இருக்கும். ஒரு சிலரின் வீட்டிலோ ஆண்களுக்கு அதிக ஆர்வமும், பெண்களுக்கு ஆர்வமும் இருக்கும். லக்கினாதிபதி சனியாக இருந்து செவ்வாய்,கேது பார்வை, தொடர்பு இருந்தால் பாலியல் ஆர்வம் குறையும். லக்கினத்தில் கேது, சனி இருந்தால் ஆர்வம் குறையும் .

காரணமான கிரகங்கள்

ராகு சனிக்கு இடையே எட்டாம் வீடு இருந்து, குருவின் பலம் குறைந்தால் ஆர்வம் குறையும். புதன் எட்டாம் அதிபதியாகி எட்டில் ராகு, சனி அல்லது கேது, சனி இருந்தால் ஆர்வம் இருக்காது. எட்டில் புதனும்,சனியும் இருந்தால் ஆர்வம் குறையும்சனி, சூரியன், ராகு இணைந்திருந்தால் ஆர்வம் குறையும்.

கேது, சனி அல்லது செவ்வாய், சனி சந்திரனை பார்த்தால் ஆர்வம் குறையும். ஒரு ஆண் ஜாதகத்தில் பெண் கிரகங்கள் ஆண் ராசியில் இருந்தால் பெண்களால் நன்மை ஏற்படாது. ஒரு பெண் ஜாதகத்தில் ஆண் கிரகங்கள் பெண் ராசியில் இருந்தால் ஆண்களால் நன்மை ஏற்படாது.

பாதிப்பை நீக்கும் பரிகாரங்கள்

துளசிக்கும் கணவன் மனைவி பிணைப்பிற்கும் நிறைய தொடர்பு உள்ளது. எனவேதான் வீட்டில் துளசி மாடம் அமைத்து அதை காலையில் பெண்கள் சுற்றி வந்து விளக்கு எற்றுவார்கள். துளசி மாடத்திற்கு மஞ்சள் குங்குமம் வைத்து விளக்கேற்றி வழிபட கணவன் மனைவி உறவு அற்புதமாக அமையும்.

சுக்கிரன் ஜாதகத்தில் கெட்டிருந்தாலோ, மறைவாகவோ நீசமடைந்திருந்தாலோ வைர மோதிரம் மோதிர விரலில் போடலாம் பாதிப்புகள் நீங்கும். சுக்கிரன் காதல் நாயகன் களத்திரகாரகன். வெள்ளிக்கிழமைகளில் விரதம் இருந்து மகாலட்சுமியை வணங்க நன்மைகள் நடக்கும். பாதிப்புகள் நீங்கும்.

அசைவ ஆகாது

செவ்வாய்கிழமை, வியாழக்கிழமை, சனிக்கிழமைகளில் அசைவ உணவு சாப்பிடவே வேண்டாம். விஷ்ணு சகஸ்ராநாமம் தினசரி 108 முறை படிக்கலாம். இதன்மூலம் எதிர்மறை எண்ணங்கள் நீங்கி நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். மண வாழ்க்கையும் மகிழ்ச்சிகரமானதாக அமையும். வீட்டின் தென்கிழக்கு மூலையில் சிவப்பு நிற விளக்கை எரியவிடவும் பாதிப்புகள் குறையும்

One response

  1. விஷ்ணு சகஸ்ராநாமம் தினசரி 108 முறை படிக்கலாம். For one time recitation, it took 20 min. 108 x 20 = 36 hrs. How come 36 hrs fit into 24 hrs???

%d bloggers like this: