குருப்பெயர்ச்சி பலன்கள்!-(29.10.2019 முதல் 13.11.2020 வரை) -தனுசு

.

தனுசு

தனுசு

ங்களின் ராசிக்கு 12-ம் வீட்டில் அமர்ந்து உங்களுக்கு வீண் அலைச்சல், விரயச் செலவுகளைத் தந்துகொண்டிருந்த குரு பகவான் 29.10.2019 முதல் 13.11.2020 வரை உங்கள் ராசிக்குள் நுழைந்து ஜன்ம குருவாக ஆட்சிபெற்று அமர்வதால் பொறுப்புகளும் வேலைச்சுமையும் அதிகரிக்கும். அதிகாரமுள்ள பதவியில் இருப்பவர்கள் ஆதரிப்பார்கள்.

ஜன்ம குருவாக இருப்பதால் அவ்வப்போது முன்கோபம் வரும். உங்களின் குடும்ப விஷயத்தில் மற்றவர்கள் தலையிட அனுமதிக்காதீர்கள். கணவன் மனைவிக்குள் வீண் வாக்குவாதத்தைத் தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளின் எதிர்பார்ப்புகள் அதிகமாகிக் கொண்டே போகும். உங்கள் இயல்புக்கு மாறான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம். திடீரென்று அறிமுகமானவரை நம்பி முடிவுகள் எடுக்க வேண்டாம். 

குரு பகவானின் பார்வை: குரு, உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டைப் பார்ப்பதால் குழந்தைபாக்கியம் சிலருக்குக் கிடைக்கும். பூர்வீக சொத்துப் பிரச்னைகள் தீரும். சிலர் தங்களின் பங்கை விற்று புதிய இடம் வாங்குவார்கள். தியானம், பொதுச்சேவையில் மனம் ஈடுபாடு கொள்ளும். குரு 7-ம் வீட்டைப் பார்ப்பதால் தள்ளிப்போன திருமணம் கைகூடும். போட்டிகளில் வெற்றிபெறுவீர்கள்.

குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: 29.10.2019 முதல் 31.12.2019 வரை குரு பகவான் கேதுவின் நட்சத்திரமான மூல நட்சத்திரத்தில் செல்வதால் வேலைச்சுமை அதிகரிக்கும். எதிர்பார்த்தவை தாமதமானாலும் எதிர்பாராத சில வேலைகள் விரைந்து முடியும்.  1.1.2020 முதல் 5.3.2020 வரை மற்றும் 31.7.2020 முதல் 18.10.2020 வரை உங்களின் சஷ்டமாதிபதியும் லாபாதிபதியுமான சுக்கிரனின் பூராடம் நட்சத்திரத்தில் குரு பகவான் செல்வதால் உங்களின் செயலில் வேகம் கூடும். எதிரிகளை வீழ்த்துவீர்கள். பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும்.    

6.3.2020 முதல் 27.3.2020 வரை மற்றும் 19.10.2020 முதல் 13.11.2020 வரை குரு பகவான் உங்களின் பாக்கியாதிபதியான சூரியனின் நட்சத்திரமான உத்திராடம் 1-ம் பாதத்தில்  செல்வதால் உங்களுடைய ஆளுமைத் திறன் அதிகரிக்கும். அரசால் அனுகூலம் உண்டு.

மகரத்தில் குரு பகவான்: 28.3.2020 முதல் 6.7.2020 வரை குரு பகவான் உங்கள் ராசிக்கு 2-ம் வீடான மகர ராசியில் அதிசாரமாகியும் வக்கிரமாகியும் அமர்வதால் திடீர் யோகம், பணவரவு, மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் நிலவி வந்த குழப்பங்கள் விலகும். கட்டட வேலைகளைத் தொடங்குவீர்கள். வங்கிக் கடனுதவியும் கிட்டும்.

வியாபாரத்தில் ஆழம் தெரியாமல் இறங்காதீர்கள். புதிதாக வரும் போட்டியாளர்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறுவீர்கள். புதிய முடிவுகளோ, முதலீடுகளோ வேண்டாம். பழைய சரக்குகளைப் போராடி விற்பீர்கள். கடையை அவசரப்பட்டு வேறு இடத்துக்கு மாற்ற வேண்டாம். கூட்டுத்தொழில் வேண்டாம்.

உத்தியோகத்தில் நாளுக்கு நாள் வேலைச்சுமை கூடிக்கொண்டே போகும். அலுவலக ரகசியங்களை வெளியே சொல்ல வேண்டாம். குறைகளை அதிகாரிகள் சுட்டிக்காட்டினால் திருத்திக்கொள்ளுங்கள். முறைப்படி தேர்வெழுதி வெற்றிபெற்றும் பதவி உயர்வு, சலுகைகள், சம்பள உயர்வைப் பெற போராட வேண்டியிருக்கும்.

பெண்கள் யதார்த்தமாகவும் விளையாட்டாகவும் எதையோ சொல்லப் போய் அதைச் சிலர் பெரிதாக்கிக் கொள்ள வாய்ப்பிருக்கிறது.

மாணவ மாணவியர் டி.வி, சினிமாவையெல்லாம் விட்டுவிட்டுப் படிப்பில் முழுகவனம் செலுத்துங்கள். மறதியால் மதிப்பெண் குறையும் வாய்ப்புள்ளதால் ஒருமுறைக்கு இருமுறை எழுதிப் பழகுங்கள்.

கலைத்துறையினர் விமர்சனங்களை ஏற்று, திருத்திக்கொள்ளுங்கள். உங்களின் படைப்புகளைப் போராடி வெளியிட வேண்டி வரும். எதிலும் பொறுமையுடன் செயல்படவும்.

பரிகாரம்: உத்திரமேரூர் அருகில், திருப்புலிவனம் ஸ்ரீவியாக்ரபுரீஸ்வரர் ஆலயத்தில் அருளும் குரு பகவானை வழிபட்டு வாருங்கள்; வெற்றி கிட்டும்.

%d bloggers like this: