குருப்பெயர்ச்சி பலன்கள்!-(29.10.2019 முதல் 13.11.2020 வரை) -மேஷம்

மேஷம்:

மேஷம்

ங்களின் ராசிக்கு 8-ம் வீட்டில் மறைந்திருந்து எதையும் எட்டாக்கனியாக்கியதுடன், மன அழுத்தத் தையும் தந்துகொண்டிருந்த குரு பகவான் 29.10.2019 முதல் 13.11.2020 வரை உங்கள் ராசிக்கு பாக்கியாதிபதி வீடான 9-ம் வீட்டில் நுழைவதால், வாழ்வில் புதிய வியூகங்களை அமைத்து முன்னேறத் தொடங்குவீர்கள். தொட்ட காரியங்களெல்லாம் துலங்கும். தள்ளிப்போன சுப நிகழ்ச்சிகள் இப்போது கூடி வரும். அறிவுபூர்வமாகவும் அனுபவபூர்வ மாகவும் செயல்படுவீர்கள்.

குழந்தைபாக்கியம் சிலருக்குக் கிடைக்கும். கணவன் மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக் கும். மனைவிவழி உறவினர்கள் பக்கபலமாக இருப்பார்கள்.

குரு பகவானின் பார்வை… குரு பகவான் உங்கள் ராசியைப் பார்ப்பதால், சோகமாக இருந்த உங்களின் முகம் இனி மலர்ச்சி அடையும். அழகும் இளமையும் கூடும். புதிய வாகனம் வாங்குவீர்கள். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும்.

உங்களின் ராசிக்கு  3-ம் வீட்டை குரு பார்ப்பதால் தன்னம்பிக்கை பிறக்கும். விலையுயர்ந்த ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். உங்களின் ராசிக்கு 5-ம் வீட்டை குரு பார்ப்பதால் முடிவுகள் எடுப்பதில் இருந்த குழப்பம், தடுமாற்றம் நீங்கும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் சாதகமாக முடியும். பாகப்பிரிவினை சுமுகமாகும்.

குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

29.10.2019 முதல் 31.12.2019 வரை குரு பகவான் கேதுவின் நட்சத்திரமான மூல நட்சத்திரத்தில் செல்வதால் செலவுகள் அதிகமாகும். அசுவினி நட்சத்திரக்காரர்கள் அலைச்சலைக் குறைத்து உடல்நலனில் கவனம் செலுத்துங்கள். யோகா, தியானம் கை கொடுக்கும்.

1.1.2020 முதல் 5.3.2020 வரை மற்றும் 31.7.2020 முதல் 18.10.2020 வரை உங்களின் தன சப்தமாதிபதியான சுக்கிரனுக்குரிய பூராடம் நட்சத்திரத்தில் குரு பகவான் செல்வதால், குடும்பத்தின் அடிப்படை வசதிகள் பெருகும். பணவரவு உண்டு. ஆனால், பரணி நட்சத்திரக்காரர்கள் எதிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது.

6.3.2020 முதல் 27.3.2020 வரை மற்றும் 19.10.2020 முதல் 13.11.2020 வரை குரு பகவான் உங்கள் பூர்வபுண்ணியாதிபதியான சூரியனின் நட்சத்திரமான உத்திராடம் 1-ம் பாதத்தில் செல்வதால், அரசு வகையில் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றிபெறுவீர்கள். பிள்ளைகள் படிப்பில் முன்னேறுவார்கள். கார்த்திகை 1-ம் பாதத்தில் பிறந்தவர்கள் எதிலும் கவனமாகச் செயல்பட வேண்டும். மகளின் திருமணத்துக்காக கடன் வாங்கவேண்டிய சூழ்நிலை உருவாகும்.

மகரத்தில் குரு பகவான்: 28.03.2020 முதல் 6.7.2020 வரை குரு பகவான் உங்களின் ராசிக்கு 10-ம் வீடான மகர ராசியில் அதிசாரமாகியும், வக்கிரமாகியும் அமர்வதால் புதிய தெம்பு பிறக்கும்.

வியாபாரத்தில் சந்தை நிலவரம் அறிந்து முதலீடு செய்வீர்கள். தேங்கிக் கிடந்த சரக்குகள் விற்றுத் தீரும். கொடுக்கல் வாங்கலில் சுமுகமான நிலை ஏற்படும். கடையை விரிவுபடுத்துவீர்கள். ஷேர், உணவு, எண்டர் பிரைசஸ், ஜுவல்லரி, மர வகைகளால் ஆதாயமடைவீர்கள்.

உத்தியோகத்தில் உங்களைப் பற்றி குறை கூறியவர்களுக்குப் பதிலடி கொடுப்பீர்கள். தேங்கிக் கிடந்த பணிகளை விரைந்து முடிப்பீர்கள். பதவி உயர்வு, சம்பள உயர்வு உண்டு. சிலருக்கு அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனத்தில் வேலை அமையும். பெண்களுக்கு எதிர்பார்த்தபடி நல்ல வரனும் அமைந்து திருமணம் சிறப்பாக முடியும்.

மாணவ மாணவியர் நல்ல கல்வி நிறுவனத்தில் மேற்படிப்பைத் தொடங்குவார்கள். மொழித்திறனை வளர்த்துக்கொள்வார்கள். போட்டிகளில் பரிசு பெறுவார்கள். கலைத்துறையினருக்கு இனி பெரிய வாய்ப்புகள் கிடைக்கும். அவர்களுடைய படைப்புகளை அரசு கௌரவிக்கும்.

பரிகாரம்: சஷ்டி தினங்களில் சிறுவாபுரி முருகப் பெருமானை வழிபட்டு வாருங்கள்; சந்தோஷம் பெருகும்.

கே.பி.வித்யாதரன்

%d bloggers like this: