குருப்பெயர்ச்சி பலன்கள்!-(29.10.2019 முதல் 13.11.2020 வரை) -துலாம்

துலாம்

துலாம்

குரு பகவான் 29.10.2019 முதல் 13.11.2020 வரை ராசிக்கு 3-ம் வீட்டில் அமர்வதால் எதையும் திட்டமிட்டு செய்யுங்கள். எந்த ஒரு வேலையையும் முதல் முயற்சியிலேயே முடிக்க முடியாமல் போராடி முடிக்க வேண்டி வரும். யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். திடீரென்று அறிமுகமானவரை நம்ப வேண்டாம்.

கணவன் மனைவிக்குள் வீண் வாக்குவாதங்கள் வேண்டாம். மற்றவர்களை நம்பி முக்கிய விஷயங்களை ஒப்படைக்காமல், நீங்களே நேரடியாகச் சென்று முடிப்பது நல்லது. அக்கம்பக்கம் வீட்டாருடன் எல்லாவற்றையும் பகிர்ந்துகொள்ள வேண்டாம்.

சிலர் உங்களை நேரில் பார்க்கும்போது நல்லவர் களாகவும் பார்க்காதபோது உங்களைப் பற்றி வேறுமாதிரியாகவும் பேசுவார்கள். கவனமாகப் பழகுங்கள். உறவினர்கள், நண்பர்களிடம் அதிக உரிமை எடுத்துக்கொள்ள வேண்டாம். இடைவெளிவிட்டு பழகுவது நல்லது.

குரு பகவானின் பார்வை: குரு உங்களின் ராசிக்கு 7-ம் வீட்டைப் பார்ப்பதால் மனைவி வழியில் உதவிகள் உண்டு. குரு 9-ம் வீட்டைப் பார்ப்பதால் பணவரவுக்குக் குறைவிருக்காது. தந்தைவழிச் சொத்துகள் கைக்கு வரும்.

குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: 29.10.2019 முதல் 31.12.2019 வரை குரு கேதுவின் நட்சத்திரமான மூலம் நட்சத்திரத்தில் செல்வதால் பெரிய திட்டங்கள் தீட்டுவீர்கள். தீராத பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும்.    

1.1.2020 முதல் 5.3.2020 வரை மற்றும் 31.7.2020 முதல் 18.10.2020 வரை உங்களின் ராசியாதிபதியும் அஷ்டமாதிபதியுமான சுக்கிரனின் பூராடம் நட்சத்திரத்தில் குரு செல்வதால் திடீர்ப் பணவரவு உண்டு. வாகனம் வாங்குவீர்கள். உறவினர்களின் திருமணத்தை முன்னின்று நடத்துவீர்கள்.

6.3.2020 முதல் 27.3.2020 வரை மற்றும் 19.10.2020 முதல் 13.11.2020 வரை குரு பகவான் உங்களின் லாபாதிபதியான சூரியனின் நட்சத்திரமான உத்திராடம் 1-ம் பாதத்தில்  செல்வதால் எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை மனத்தில் பிறக்கும். சமூகத்தில் அந்தஸ்து உயரும்.

மகரத்தில் குரு பகவான்: 28.03.2020 முதல் 6.7.2020 வரை குரு பகவான் உங்களின் ராசிக்கு 4-ம் வீடான மகர ராசியில் அதிசாரமாகியும் வக்கிரமாகியும் அமர்வதால் தாயாரின் உடல்நலனில் கவனமாக இருங்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல், செலவுகள் இருக்கும்.

வியாபாரத்தில் சில சூட்சுமங்களையும், ரகசியங்களையும் தெரிந்துகொண்டு அதற்கேற்ப லாபம் ஈட்டுவீர்கள். பழைய பாக்கிகளைப் போராடி வசூலிப்பீர்கள். தரமான பொருள்களை விற்பனை செய்வதன் மூலமாக புது வாடிக்கை யாளர்கள் வருவார்கள். கட்டட உதிரிப் பாகங்கள், ஸ்டேஷனரி, பெட்ரோகெமிக்கல், டிராவல்ஸ் வகைகளால் ஆதாயமடைவீர்கள்.

உத்தியோகத்தில் சின்னச் சின்ன அலைக்கழிப்புகள் இருக்கும். சக ஊழியர்களின் கடின உழைப்பால் தடைபட்ட வேலைகளை முடித்துக் காட்டுவீர்கள். உத்தியோகத் தில் பதவி உயர்வு கிடைக்கும். சம்பளப் பாக்கி கைக்கு வரும். உயரதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள்.

பெண்களுக்குத் தடைப்பட்ட உயர் கல்வியைத் தொடரும் வாய்ப்பு கிடைக்கும். நல்ல இடத்தில் வரன் அமையும். போட்டித்தேர்வுகளில் வெற்றிபெற்று நல்ல வேலையில் அமர்வார்கள். மாணவ மாணவியர் விரும்பிய நிறுவனத்தில் எதிர்பார்த்த கல்விப் பிரிவில் சேருவார்கள். ஆசிரியரிடம் தயங்காமல் உங்களின் சந்தேகங்களைக் கேட்டுத் தெளியுங்கள்.

கலைத்துறையினருக்குப் பெரிய வாய்ப்புகள் தேடி வரும். யதார்த்தமான உங்களின் படைப்புகளுக்குப் பாராட்டுகள் கிடைக்கும்.

பரிகாரம்: செங்கல்பட்டு அருகிலுள்ள திருவடிசூலம் பைரவரை வழிபட்டு வாருங்கள்; எடுத்த காரியங்களில் வெற்றி உண்டாகும்.

%d bloggers like this: