நோய்களை விரட்டியடிக்கும் இஞ்சி! இப்படியெல்லாம் சாப்பிட்டு பாருங்க!

இஞ்சி என்று சொன்னதுமே, பலருக்கும் இஞ்சி சாப்பிட்ட ……. மாதிரி முகம் அஷ்ட கோணலாக மாறிவிடுகிறது. ஆனால், இஞ்சியின் அருமைகளை தெரிந்துக் கொண்டால் எப்போதுமே இஞ்சியை ஒதுக்கி வைக்க மாட்டீர்கள். சித்த

மருத்துவத்தில் இஞ்சியின் பங்கு மிகப் பெரியது. மருந்துக்களின் தன்மைக்கேற்ப சில மருந்துகளில் இஞ்சியாகவோ, காய வைத்து சுக்குவாகவோ பயன்படுத்துகிறார்கள்.
இஞ்சி சாற்றை பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் வயிறு சம்பந்தமான நோய்கள் சரியாகும். உடல் இளைக்கும்.

இஞ்சி துவையல், பச்சடி வைத்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும்.

இஞ்சியை அரைத்து நீரில் கலந்து தெளிந்தபின், நீரை எடுத்து, துளசி இலை சாறை சேர்த்து ஒரு கரண்டி வீதம் ஒரு வாரம் சாப்பிட வாய்வுத் தொல்லை நீங்கும்.
இஞ்சி சாற்றில், தேன் கலந்து தினசரி காலை ஒரு கரண்டி சாப்பிட்டு வர நோய் தடுப்பு திறன் கூடும். உற்சாகம் ஏற்படும். இளமை பெருகும்.
இஞ்சி சாறுடன், வெங்காய சாறு கலந்து ஒரு வாரம், காலையில் ஒரு கரண்டி வீதம் குடித்துவர நீரிழிவு குறையும்.
இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு, வெங்காய சாறு மூன்றையும் கலந்து ஒருவேளை அரை அவுன்ஸ் வீதம் சாப்பிட்டுவர ஆரம்ப கால ஆஸ்துமா, இரைப்பு, இருமல் குணமாகும்.

%d bloggers like this: