பசியை குறைக்கும் நுகர்வு திறன்!

ஆகா… நல்ல வாசனை.. சாப்பிடணும் போல இருக்கே…’ இதுபோல் பலர் பேசுவதைக் கேட்டு இருப்போம். ஏன்? நமக்கும் கூட அந்த உணர்வு ஏற்படும்தான். இதுபோல் சாப்பிடத் தூண்டும் நுகர்வுத்திறன் மருத்துவரீதியாகவும் பலனளிக்கும் என்று தெரிய வந்துள்ளது.
அமெரிக்காவின் தெற்கு ஃபுளோரிடா மாகாணத்தில் செயல்பட்டு வரும் University College of

Business-யின் மார்க்கெட்டிங் புரொபசர் திபயான் பிஸ்வாஸ் மேற்பார்வையில் சமீபத்தில் ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் உணவின் வாசனையை நுகர்வதால் அதனை உட்கொள்ளும் அளவு குறைகிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக, எண்ணெயில் நன்றாகப் பொரிக்கப்பட்ட மற்றும் கொழுப்புச்சத்து அதிகம் இருக்கிற உணவுப்பண்டங்களில் இருந்து வெளிப்படும் வாசனையை நுகர்ந்து பார்ப்பதால், பசியுணர்வு குறைவதாகவும் கண்டறியப்பட்டு
உள்ளது.
இதற்கு ஐந்து புலன்களைச் சார்ந்து வெளிப்படும் மகிழ்ச்சி உணர்வை, மூளையால் துல்லியமாக வேறுபடுத்தி பார்க்க முடியாத நிலை முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. மேலும், நமக்கு விருப்பமுள்ள உணவுகளால் ஏற்படும் பசியுணர்வைக் கட்டுப்படுத்துவதில், சுற்றுப்புறச் சூழலிலிருந்து வெளிப்படும் ஒருவகையான நறுமணமும் முக்கிய காரணியாக செயல்படுவதும் இந்த ஆராய்ச்சி மூலமாக தெரிய வந்துள்ளது.
இதுபோன்ற ஆய்வுகளின் முடிவுகள் எத்தகையதாக இருந்தாலும், சாப்பிட வேண்டும் என்ற உணர்வு கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்படுவதால், அளவுக்கு அதிகமான கலோரிகளை உட்கொள்வதில் இருந்து நீங்கள் பாதுகாக்கப்படுகிறீர்கள் என்பது மகிழ்ச்சிக்குரிய செய்திதானே!

%d bloggers like this: