தூது வந்த புகழேந்தி! சின்னம்மாவையும், 18 எம்.எல்.ஏக்களை மீண்டும் கட்சியில் சேர்த்துக்கொள்வதாக வாக்குக்கொடுத்த பழனிசாமி!

சசிகலா வெளியே வந்தவுடன் அவரை அதிமுகவில் இணைத்துக்கொள்வேன் என புகழேந்தியிடம் சம்மதம் தெரிவித்ததாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக அதிமுகவில் நிலவும் மிகப் பெரிய குழப்பம் சசிகலா வெளியே வந்தால் அவரை இணைத்துக் கொள்ளலாமா? வேண்டாமா என்பதுதான்.. இத்தகைய சூழலில் கடந்த வாரம் அமமுகவின் நிர்வாகியும், சசிகலாவின் உண்மை விசுவாசியான புகழேந்தி முதலமைச்சர் இல்லத்துக்கு திடீர் விசிட் அடித்தார். சிறையிலிருக்கும் சசிகலா வெளியே வந்தவுடன் அதிமுகவில் பதவிக் கொடுப்பது குறித்து அப்போது புகழேந்தி கலந்தாலோசித்ததாக கூறப்பட்டது.

இந்நிலையில் மாமனார் துக்கத்திற்கு சேலம் சென்றுள்ள எடப்பாடி பழனிசாமியை முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், செம்மலை ஆகியோர் நேரில் சந்தித்து துக்கம் விசாரித்தனர்.

சிறையிலிருந்து வெளியே வந்தவுடன் அவருக்கு கட்சியில் சேர்த்துக்கொண்டு அவருக்கு பொறுப்பு கொடுக்கனும்., 2021 ஆம் ஆண்டு தேர்தலில் சீட் கொடுக்கனும், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களை அதிமுகவில் மீண்டும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை சசிகலா வைத்ததாக புகழேந்தி முன்வைத்தார். இதுகுறித்து ஓபிஎஸிடம் கலந்தாலோசித்தோம். அவரும் மேற்கொண்ட கண்டிஷன்களுக்கு ஒப்புக்கொண்டதால் கோரிக்கைகளுக்கு ஒகே சொல்லிவிட்டேன். ஆனால் தினகரனை மட்டும் கட்சியின் இணைத்துக்கொள்ள முடியாது என தீர்க்கமாக கூறிவிட்டேன். அதற்கு புகழேந்தியும் ஒப்புக்கொண்டுவிட்டார் என அமைச்சர்களிடம் எடப்பாடி கூறியுள்ளார்.

%d bloggers like this: