எல்லாமே போச்சு… டி.டி.வி.யால் குமுறித்துடிக்கும் சசிகலா..!

சிறையில் இருப்பதை தவிர பெரிய அளவில் தற்போது சசிகலாவுக்கு எந்தவிதமான மன அழுத்தமும் கிடையாது. ஆனால், அமமுகவையும், தினகரனையும் நினைத்தால்தான் டென்ஷனாகி விடுகிறராம் சசிகலா.

அப்போதெல்லாம் அவருடன் இருக்கும் இளவரசிதான் ஆறுதல் கூறுகிறார். மேலும், வெளியே வரும்போது என்ன செய்ய வேண்டும். யாரை இழுக்க வேண்டும். யார் நாம் சொன்னால் கேட்பார்கள் என்ற பட்டியலையும் சொல்லி ஆறுதல்படுத்துகிறாராம் இளவரசி.

நாம் வெளியில் வர இன்னும் ஒரு வருஷம் இருக்கும்போது ஏன் டென்ஷனாக வேண்டும்.?

அரசியல் நம்மை விட்டு எங்கும்போகாது. நம் விசுவாசிகள் எங்கேயும் போக மாட்டார்கள். இப்போதைக்கு அவர்களுக்கு ஒரு பாதுகாப்பு வேண்டும் என்பதற்காக ஒட்டிக் கொண்டு இருப்பார்கள் என்று சிறைக்குள் உடனிருக்கும் மச்சினியார் இளவரசி ஆறுதல் கூறி வருகிறாராம். அதை கேட்டுக் கொண்டு சசிகலாவும் நீ சொல்வதும் உண்மைதான் என்று ஆறுதலடைந்து வருகிறாராம்.

எல்லா சொத்துக்களையும் மகன் மீது சசிகலாவை எழுத வைத்து வாங்கி விட்டார் இளவரசி. அதையும் உள்மனதில் வைத்துக் கொள்ளாமல் இல்லை சசிகலா. ஆக மொத்தத்தில் சசிகலாவை அழிக்கப்போவது அவரது குடும்ப உறவுகள் மட்டுமே.

%d bloggers like this: