Daily Archives: நவம்பர் 11th, 2019

மனிதரை கொல்லும் மாசு!

பல லட்சம் பேரை பலிவாங்கும் புதிய பயங்கரவாதி

ஆண்டுதோறும் ஜூன் 5ம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படுகிறது.  கொண்டாட்ட மனநிலையில் இருந்து அதை விழிப்புணர்வு மனநிலைக்கு கொண்டு செல்ல அரசுகள் முயற்சி செய்ய வேண்டும்…
Continue reading →

உலகளாவிய கடன் மதிப்பீடுகள் எவ்வாறு செயல்படுகின்றன?

இந்தியப் பொருளாதாரம் மீதான தனது பார்வையை ‘மூடி’ஸ் நிறுவனம் மாற்றியுள்ளது. இந்தியப் பொருளாதாரம் தீவிர நெருக்கடி நிலையில் இருப்பதாக அந்நிறுவனம் சுட்டிக்காட்டி உள்ளது. இந்தியாவின் பொருளாதார மந்தநிலை முன்பு இருந்ததைவிட தற்போது தீவிரம் அடைந்திருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Continue reading →

உங்கள் வீட்டு வாசல்படியில் இந்த தவறை மட்டும் செய்து விடாதீர்கள்

நம்முடைய வீடு என்பது கோவில் போன்று நாம் கோவிலாக கருதப்படும் அந்த வீட்டில், முன் வாசல் அதாவது நில வாசற்படியானது, நல்ல சக்திகளை உள்ளே எடுத்துக்கொண்டு, கெட்ட சக்திகளை திருப்பி அனுப்ப வேண்டுமென்றால், நாம் அதனை எப்படி வைத்துக்கொள்ள வேண்டும். எப்படி வைத்துக் கொள்ளக் கூடாது என்பதை பற்றிதான் பார்க்க போகிறோம்.

Continue reading →

இரவில் நிம்மதியாக தூங்க வேண்டுமா.?இதை செய்யுங்கள் உடனே தூக்கம் வந்துவிடும்..!!

தூக்கமின்மை என்பது இப்போது எல்லாருடைய மத்தியிலும் அதிகமாக வரும் பிரச்சனையாக இருக்கிறது. குழந்தைகள் முதல் முதியவர் வரை தூக்கமின்மை தொல்லையால் அவதிப்படாதவர்கள் இல்லை எனவே கூறலாம்.

Continue reading →

12.11.2019 – தயவு செய்து இந்த நாளை தவறவிடாதீர்கள்..!!

மிக சிறப்புமிக்க நாளாக வரவிருக்கும் இந்த 12_ஆம் தேதியை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்வீர்கள்.

12.11.2019 செவ்வாய்க்கிழமை நாளை தயவு செய்து தவறவிடாதீர்கள். அப்படி என்ன விசேஷம் என்று நினைக்கலாம்.அன்று பௌர்ணமி , அதாவது ஐப்பசி பவுர்ணமி. ஐப்பசி பவுர்ணமி என்றால் அன்னம் அபிஷேகம் என்று சொல்வார்கள். உலகத்தில் உள்ள லிங்க வடிவில் உள்ள சிவன் கோயில்களுக்கு ஐப்பசி மாதம் வரக்கூடிய பவுர்ணமி அன்று வருடம் தோறும் அன்னாபிஷேகம் சிறப்பாக நடைபெறும்.

அந்த நாள் தான் வரும் நவம்பர் மாதம் 12ஆம் தேதி வருகிறது.

சரி யார் யாருக்கெல்லாம் அன்ன தோஷம் ஏற்படும்:

பசியால் வாடுகின்றனர் என்றால் பச்சிளம் குழந்தைக்கு நாம் சாப்பிட ஏதுமே கொடுக்கலைன்னா நமக்கு அந்த தோஷம் ஏற்படும். அதேபோல வயதானவர்கள் , கர்ப்பிணி பெண்கள் , சாப்பிட பந்தியில் உட்கார்ந்த உடனேயே எந்திரிக்க சொல்லி இந்த மாதிரியான சிறு தவறுகள் செய்தவதற்கு அன்ன தோஷம் ஏற்படும். அது போலவே தான் சாப்பிட்டு போக ஏராளமான உணவை நாம் குப்பைத்தொட்டியில் போடுபவர்களும் அன்ன தோஷம் ஏற்படும். இறந்த முன்னோர்களுக்கு நாம் சரியான முறையில் சடங்கு செய்யா விட்டால் அந்த தோஷம் ஏற்படும்.

இந்த தோஷத்தில் இருந்து நாம் எப்படி காத்துக் கொள்வது :

அன்னாபிஷேக நாளில் சிவ பெருமானை தரிசிப்பதும் அன்னாபிஷேகத்திற்கு தேவையான சந்திரனின் காரகம் பெற்ற அரிசி. அதாவது பச்சரிசியை வாங்கி கோவிலில் கொடுப்பது மற்றும் குறைந்தது ஒரு ஏழு நபர்களுக்கு அன்னதானம் செய்வது போன்றவை செய்யலாம். அதாவது பச்சை அரிசியில் செய்த தயிர் சாதத்தை நீங்கள் அன்னதானமாக கொடுக்கலாம்.

இப்படி கொடுக்கும் போது உங்களுக்கு அன்னதோஷம் நீங்கி செல்வச் செழிப்பு ஏற்படும். அதே போலவே அன்னபூரணியை வணங்கிவர உணவு வீணாவது குறைவு. மேலும் உணவு தட்டுப்பாடு இன்றி நமக்கு கிடைக்கும். இத்தகைய சிறப்பு வாய்ந்த அன்னாபிஷேக வழிபாட்டில் கலந்துகொண்டு இறைவனின் பரிபூரண அருளைப் பெற்று , உங்களது குறைகளை நீக்கி , செல்வ செழிப்புடன் நலமுடன் வாழ வேண்டும் என்பதே எங்களுடைய எண்ணம். வாழ்க வளமுடன் 11.12.2019_ஆம் நாளை நீங்கள் தவறாமல் பயன்படுத்தி விடுங்கள்.