உங்கள் வீட்டு வாசல்படியில் இந்த தவறை மட்டும் செய்து விடாதீர்கள்

நம்முடைய வீடு என்பது கோவில் போன்று நாம் கோவிலாக கருதப்படும் அந்த வீட்டில், முன் வாசல் அதாவது நில வாசற்படியானது, நல்ல சக்திகளை உள்ளே எடுத்துக்கொண்டு, கெட்ட சக்திகளை திருப்பி அனுப்ப வேண்டுமென்றால், நாம் அதனை எப்படி வைத்துக்கொள்ள வேண்டும். எப்படி வைத்துக் கொள்ளக் கூடாது என்பதை பற்றிதான் பார்க்க போகிறோம்.

நம்முடைய வீட்டுத் தலைவாசல் பகுதி என்பது அந்தக் காலத்தில், வீட்டின் உள்ளே செல்பவர்கள் தலை குனிந்து செல்லும் அளவிற்கு தாழ்வாக தான் கட்டப்பட்டிருக்கும். நம்முடைய வீட்டு வாசற்படியில் மகாலட்சுமியும், அஷ்டலக்ஷ்மியும் குடி கொண்டிருக்கும், கும்ப தேவதைகள் வாசலில் இரண்டு பக்கமும் அமர்ந்திருப்பதாலும், அவர்களை நாம் வணங்கும் வகையில், தலையை குனிந்து செல்வதற்காகவே அப்படிப்பட்ட அமைப்பில் அந்த காலத்தில் வாசல் கட்டப்பட்டிருக்கும். அப்படி நாம் குனிந்து செல்லும்போது அந்த வாசற்படியை நம் கால்களால் மிதிக்காமல் உள்ளே அந்த வீட்டில், முன் வாசல் அதாவது நில வாசற்படியானது, நல்ல சக்திகளை உள்ளே ஈர்த்து, கெட்ட சக்திகளை திருப்பி அனுப்ப வேண்டுமென்றால், நாம் அதனை எப்படி வைத்துக்கொள்ள வேண்டும். எப்படி வைத்துக் கொள்ளக் கூடாது என்பதை பற்றிதான் பார்க்க போகிறோம்.

தேவதைகள் வாசலில் இரண்டு பக்கமும் கட்டப்பட்டிருப்பதாலும் அவர்களை நாம் வணங்கும் வகையில், தலையை குனிந்து செல்வதற்காகவே அப்படிப்பட்ட வாசல் கட்டப்பட்டிருந்தது.அப்படி நாம் குனிந்து வீட்டிற்குள் செல்லும்போது அந்த வாசற்படியை நம் கால்களால் மிதிக்காமல் உள்ளே செல்ல வேண்டும். வாசற்படியில் செய்யவேண்டியவை. காலையில் பெண்கள் எழுந்தவுடன் நில வாசற்படியை தண்ணீர் ஊற்றி கழுவ வேண்டும். முடியாதவர்கள் ஈரத்துணியால் துடைத்து சுத்தம் செய்து மஞ்சள் தேய்த்து பொட்டு வைக்க வேண்டும். நம் வீட்டு வாசல் படியின் முன்னால் ஒரு கண்ணாடிப் பாத்திரத்தில் நீரூற்றி அதில் மலர்களை பறித்து வைப்பது நல்லது. அந்தக் பாத்திரத்தில் உள்ள மலர்கள் நம் வீட்டிற்குள் நல்ல சக்தியை இழுக்கும் தன்மையைக் கொண்டது. கண்ணாடி பாத்திரத்தில் உள்ள நீரையும் மலரையும் தினமும் மாற்ற வேண்டும். மாவிலைத் தோரணம் என்பது பண்டிகை நாட்களில் மட்டும் தான் கட்ட வேண்டும் என்ற எண்ணம் தவறு .பண்டிகை இல்லாத நாட்களில் கூட 11 மாவிலைகளை நம் வீட்டு வாசலில் தோரணமாக தொங்கவிடுவது நம் வீட்டிற்கு மிகவும் நல்லது.அது துர் சக்திகளை நம் வீட்டின் உள்ளே வர விடாது.

அடுத்ததாக லட்சுமி படத்தை நம் வீட்டு வாசலில் மாட்டி வைப்பது மிகவும் நல்லது. அப்படி நம் வீட்டு வாசலில் லட்சுமி புகைப்படம் இருக்குமேயானால் காலணிகளை வாசலிலே கழட்டி விட்டு வரவேண்டும். கும்ப கலச படத்தினை நம் வீட்டு வாசலில் வைத்திருந்தோமேயானால் நோய் நொடிகள் நம் வீட்டை அண்டாது என்பது ஐதீகம். ஸ்வஸ்திக் அடையாளம் அதிர்ஷ்டம் மற்றும் செல்வத்தை தேடித்தரும். நம் வீட்டு வாசல் கதவில் குலதெய்வம் குடியிருக்கும் என்பதும் ஒரு ஐதீகம். இதனால் சத்தம் போடாமல் கதவினை திறப்பதும் கதவினை அடைப்பதும் மிகவும் நல்லது. நாம் இடும் சத்தம் குலதெய்வத்திற்கு இடையூறாக இருக்கும். நில வாசற்படியில் செய்யக்கூடாதவை கிரகலஷ்மி வாசற்படியில் வாசம் செய்கின்றாள். என்பதால் அதில் நாம் சில விஷயங்களை செய்யக்கூடாது. நில வாசற்படியில் நின்று கொண்டு தும்புவது, தலை வைத்து படுப்பது, வாசற்படியின் மேல் அமர்வது, வாசலில் அமர்ந்து கொண்டு மற்றவர்களை பற்றிய குற்றம் குறைகளை பேசுவது, நகம் கடிப்பது, இப்படித் தவறான விஷயங்களை செய்யகூடாது. இது மூதேவியை நாமே உள்ளே அழைப்பதற்கு சமமாகும்.

மாலைகள், தோரணங்கள் கட்டுவதற்காக அடிக்கப்படும் ஆணியானது, வாசற்படியின் மேல் அடிக்காமல் அதில் இருந்து தள்ளி சுவற்றில் அடிப்பது நல்லது. வெளியில் சென்று விட்டு வருபவர்கள் கை, கால்களை கழுவாமல் வாசற்படியில் நுழையக்கூடாது. இந்த பழக்கமானது, நம் கால்களில் மிதித்து வரும் கிருமிகள் நம் வீட்டின் உள்ளே அண்டாமல் இருக்க கடைப்பிடிக்கப்பட்டது. குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை வாழும் நம் வீடானது நோய் நொடி அண்டாமல் இருக்க இதனை நம் முன்னோர்கள் செய்து வந்தனர். இந்த காலத்தில் இது சாத்தியம் இல்லை என்றாலும் இதுவே சிறந்தது. இப்படி நம்மால் கடைபிடிக்கப்படும் சின்ன சின்ன வழிமுறைகள் கூட நம் வீட்டை புனிதமானதாக மாற்றுகிறது.

%d bloggers like this: