12.11.2019 – தயவு செய்து இந்த நாளை தவறவிடாதீர்கள்..!!

மிக சிறப்புமிக்க நாளாக வரவிருக்கும் இந்த 12_ஆம் தேதியை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்வீர்கள்.

12.11.2019 செவ்வாய்க்கிழமை நாளை தயவு செய்து தவறவிடாதீர்கள். அப்படி என்ன விசேஷம் என்று நினைக்கலாம்.அன்று பௌர்ணமி , அதாவது ஐப்பசி பவுர்ணமி. ஐப்பசி பவுர்ணமி என்றால் அன்னம் அபிஷேகம் என்று சொல்வார்கள். உலகத்தில் உள்ள லிங்க வடிவில் உள்ள சிவன் கோயில்களுக்கு ஐப்பசி மாதம் வரக்கூடிய பவுர்ணமி அன்று வருடம் தோறும் அன்னாபிஷேகம் சிறப்பாக நடைபெறும்.

அந்த நாள் தான் வரும் நவம்பர் மாதம் 12ஆம் தேதி வருகிறது.

சரி யார் யாருக்கெல்லாம் அன்ன தோஷம் ஏற்படும்:

பசியால் வாடுகின்றனர் என்றால் பச்சிளம் குழந்தைக்கு நாம் சாப்பிட ஏதுமே கொடுக்கலைன்னா நமக்கு அந்த தோஷம் ஏற்படும். அதேபோல வயதானவர்கள் , கர்ப்பிணி பெண்கள் , சாப்பிட பந்தியில் உட்கார்ந்த உடனேயே எந்திரிக்க சொல்லி இந்த மாதிரியான சிறு தவறுகள் செய்தவதற்கு அன்ன தோஷம் ஏற்படும். அது போலவே தான் சாப்பிட்டு போக ஏராளமான உணவை நாம் குப்பைத்தொட்டியில் போடுபவர்களும் அன்ன தோஷம் ஏற்படும். இறந்த முன்னோர்களுக்கு நாம் சரியான முறையில் சடங்கு செய்யா விட்டால் அந்த தோஷம் ஏற்படும்.

இந்த தோஷத்தில் இருந்து நாம் எப்படி காத்துக் கொள்வது :

அன்னாபிஷேக நாளில் சிவ பெருமானை தரிசிப்பதும் அன்னாபிஷேகத்திற்கு தேவையான சந்திரனின் காரகம் பெற்ற அரிசி. அதாவது பச்சரிசியை வாங்கி கோவிலில் கொடுப்பது மற்றும் குறைந்தது ஒரு ஏழு நபர்களுக்கு அன்னதானம் செய்வது போன்றவை செய்யலாம். அதாவது பச்சை அரிசியில் செய்த தயிர் சாதத்தை நீங்கள் அன்னதானமாக கொடுக்கலாம்.

இப்படி கொடுக்கும் போது உங்களுக்கு அன்னதோஷம் நீங்கி செல்வச் செழிப்பு ஏற்படும். அதே போலவே அன்னபூரணியை வணங்கிவர உணவு வீணாவது குறைவு. மேலும் உணவு தட்டுப்பாடு இன்றி நமக்கு கிடைக்கும். இத்தகைய சிறப்பு வாய்ந்த அன்னாபிஷேக வழிபாட்டில் கலந்துகொண்டு இறைவனின் பரிபூரண அருளைப் பெற்று , உங்களது குறைகளை நீக்கி , செல்வ செழிப்புடன் நலமுடன் வாழ வேண்டும் என்பதே எங்களுடைய எண்ணம். வாழ்க வளமுடன் 11.12.2019_ஆம் நாளை நீங்கள் தவறாமல் பயன்படுத்தி விடுங்கள்.

%d bloggers like this: