சர்க்கரை நோய் உங்கள எட்டிப் பார்க்காம இருக்கணுமா?… இதுல ஒன்னு தினம் சாப்பிடுங்க

சர்க்கரை நோய் தான் உலக அளவில் அச்சுறுத்தக்கூடிய ஒரு விஷயமாக நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகிறது. உலக நீரிழிவு தினத்திலாவது அதுபற்றிய விழிப்புணர்வு அவசியம். எந்தமாதிரியான வீட்டு வைத்தியங்களைப் பின்பற்றினால் சர்க்கரை நோய் உங்களை எட்டிப் பார்க்காமல் காத்துக் கொள்ள முடியும் என்று பார்க்கலாம்.

உலக நீரிழிவு தினம் 2019

உலக சர்க்கரை வியாதி தினம் 2019- முன்னிட்டு வீட்டு மருத்துவ முறை மூலம் குணம் அளிக்கக்கூடிய 12 அற்புத நாட்டு மருந்துகளைப் பற்றி இப்போது நாம் பார்க்கலாம். 12 அற்புத நாட்டு மருந்துகளைப் உலகம் முழுவதும் சர்க்கரை வியாதி உள்ளவர்கள் பயன்படுத்தி வந்து அவர்களின் சர்க்கரை வியாதியின் அளவு குறைந்துள்ளது எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் சர்க்கரை வியாதி மக்களைப் பாதிப்புக்கு உள்ளாக்கி உள்ளது.குறிப்பாக இந்தியா சர்க்கரை வியாதியின் தலைநகரம் என அழைக்கும் அளவுக்கு இந்தியா முழுவதும் சர்க்கரை வியாதி நிறைந்தவர்கள் காணப்படுகின்றனர். சர்க்கரை வியாதி இந்தியாவில் குறிப்பாக ஆறரை கோடி மக்களிடையே உள்ளதாகச் சொல்கின்றனர். சர்க்கரை வியாதி என்பது இரு வகைப்படும் ஒன்று டைப்-1 உடலில் இன்சுலின் சுத்தமாகச் சுரக்க விடாமல் தடுப்பது. டைப் 2 என்பது இன்சுலின் அளவு குறைவாகச் சுரக்கும்.

நீரிழிவு நோய் என்பது என்ன?

undefined

சர்க்கரை வியாதி என்பது ஒரு ஹார்மோன் சம்பந்தப்பட்ட வியாதி எனக் கூறுகிறார்கள். சர்க்கரை வியாதி மூலம் இதய பாதிப்புகள் நெஞ்சுவலி கிட்னி இழப்பு, ஈரல் போன்றவை சேதமடைதல் என அதன் பாதிப்புகள் மிகவும் அதிகம். ஆனால் இந்தியாவில் இது போன்ற நோய்கள் சகஜமாகி உள்ளது. இதை நாம் ஒரு சில வாழ்க்கை முறை மாற்றத்தினால் மற்றும் ஒரு சில மருத்துவ குணமுள்ள மூலிகைகளின் துணையால் முற்றிலும் இந்த பாதிப்பிலிருந்து விடுபட முடியும். அதில் முக்கியமான பங்கு வகிக்கும் 12 அற்புதமான பொருள்கள் ஆனது, பாகற்காய், லவங்கப் பட்டை, வெந்தயம், நெல்லிக்காய், நாவல் பழம், மாங்காய் இலை, கறிவேப்பிலை சோற்றுக்கற்றாழை, கொய்யாப்பழம், துளசி, ஆளி விதை மற்றும் வேப்பிலை. மேற்கண்டவற்றைப் பற்றி ஒவ்வொன்றாக தற்போது பார்க்கலாம்:

பாகற்காய்:

undefined

பாகற்காய் சர்க்கரை வியாதியிலிருந்து நம்மைப் பாதுகாக்கப் பெரும்பங்கு வகிக்கிறது பாகற்காயில் இயற்கையாகவே உள்ள சரண்டின் என்ற வேதிப்பொருள் நம் உடலில் உள்ள குளுக்கோஸ் அளவை குறைத்து இன்சுலின் அதிகம் சுரக்க உதவி செய்கிறது. உடலில் உள்ள ஒரு குறிப்பிட்ட பகுதி மட்டுமல்லாமல் உடலில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் பாகற்காய் நன்மையே செய்கிறது. டைப் 1 சர்க்கரை வியாதி மற்றும் டைப்-2 சர்க்கரை வியாதி இரண்டுக்குமே பாகற்காய் சாப்பிடுவது நல்லது. மேலும் மெட்டபாலிசத்தின் அளவை குறைக்கவும் உதவுகிறது. இந்த பாகற்காய் மட்டுமே நமது சர்க்கரை வியாதியின் மருத்துவம் ஆகிவிடாது. தினமும் காலை வெறும் வயிற்றில் பாகற்காய் சாறு குடித்து வந்தால் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். கூடுதல் நன்மைக்குப் பாகற்காய் உபயோகித்து தினமும் ஒரு பொரியல் அல்லது கூட்டு செய்து சாப்பிட்டால் மிகவும் நல்லது.

இலவங்கப்பட்டை:

undefined

இலவங்கப்பட்டை சர்க்கரை வியாதியைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது இது உடலில் இருக்கும் இன்சுலின் அளவு குறையாமல் பார்த்துக் கொள்ள உதவுகிறது. இதிலிருக்கும் சினமேட், சினமிக், போன்ற இயற்கை வேதிப்பொருள் ஆனது சர்க்கரை வியாதியைக் கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகளில் ஈடுபடுகிறது. சில ஆராய்ச்சிகளில் இலவங்கப்பட்டை ஆனது சர்க்கரை வியாதி குறைவதற்கு உதவுகிறது எனக் கண்டுபிடித்துள்ளார்கள் குறிப்பாகச் சர்க்கரை வியாதி இலவங்கப்பட்டை மூலம் குணமடைய உதவுகிறது கண்டுபிடித்து உள்ளார்கள். இருந்தாலும் அதிகமாக இலவங்கப்பட்டை எடுப்பதினால் மூச்சுத் திணறல், அதிகமாக வியர்ப்பது என ஒரு சில பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.எனவே ஒரு தேக்கரண்டி இலவங்கப்பட்டை எடுத்துக்கொண்டு அதைச் சூடு தண்ணீரில் கலக்கி தினமும் காலையில் குடித்து வந்தால் மிகவும் நல்லது. டி அல்லது மற்ற உணவுகளில் கலந்தும் சாப்பிடலாம்.

வெந்தயம்:

undefined

timeவெந்தயம் சர்க்கரை வியாதியைப் பெரிதளவு கட்டுப்படுத்தி குளுக்கோஸ் அளவை குறைக்கிறது எனக் கண்டுபிடித்துள்ளனர் இதில் அதிகமாக நார்ச்சத்து உள்ளது. வெந்தயம் அதிகம் சாப்பிடும் பொழுது செரிமானத்தைச் சீர்படுத்தி ரத்தத்தில் உள்ள சர்க்கரையை ஒழுங்காகச் செரிமானம் செய்ய உதவுகிறது இந்த அற்புதமான தாவரமானது இன்சுலின் சுரப்பதற்குக் காரணமாக அமைந்துள்ளது. வெந்தயம் டைப் 1 மற்றும் டைப் 2 சர்க்கரை வியாதிகளுக்கு உபயோகப்படுத்தலாம் நல்ல முன்னேற்றம் ஏற்படுகிறது எனக் கண்டுபிடித்துள்ளனர் தண்ணீரில் இரண்டு தேக்கரண்டி ஊற வைத்து இரவு முழுவதும் வைத்து காலையில் அந்த தண்ணீரைக் குடித்தால் மிகவும் நல்லது எனக் கூறுகின்றனர்.

நெல்லிக்காய்:

undefined

நெல்லிக்காயின் நற்குணங்கள் ஏராளம் இதில் உள்ள விட்டமின் சி, சர்க்கரை வியாதியை அடித்து விரட்டுகிறது, சக்தி வாய்ந்த சர்க்கரை வியாதிக்கு எதிராகப் போராடக்கூடிய ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளது. நமது கணையத்துக்கு மிகவும் நல்லதே. கணயமானது இன்சுலின் சுரக்கக் காரணமாக உள்ளது. நாம் தினமும் இரண்டு அல்லது மூன்று நெல்லிக்காய்களை உண்டு வந்தால் மிகவும் நல்லது. நெல்லிக்காயில் உள்ள விதைகளை அகற்றி விட்டு அதை அரைத்து, நல்ல மாவு போல் ஆக்கி அதை ஒரு துணியில் வைத்துப் பிழிந்து ஜூஸ் ஆக்கி அதை இரண்டு மேசைக்கரண்டி சுடு தண்ணீரில் கலந்து தினமும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் இன்சுலின் அதிகமாகச் சுரக்க உதவி செய்யும்.

நாவல் பழம்:

undefined

இந்தியாவில் உள்ள நாவல் பழம் சர்க்கரை வியாதிக்குப் பெருமளவு உதவி செய்கிறது. நாவல் பழத்தில் உள்ள அந்தோசுணன்ஸ் என்ற வேதிப்பொருளால் ஆனது ஆன்டிஆக்சிடன்ட் நிறைந்தது இந்த நாவல் பழங்கள் மட்டும் அல்லாமல் நாவல் பழங்களில் உள்ள இலைகளிலும் கிடைக்கிறது. எனவே இதை சிறந்த மருந்து என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.நாவல் பழம் சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்குக் கொடுக்கும்பொழுது நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர் இது உடம்பில் உள்ள சர்க்கரையைக் குறைப்பது மட்டுமல்லாமல் சிறுநீர் அதிகமாகக் கழிக்கவும் உதவி செய்கிறது. இதைப் பழமாகச் சாப்பிடலாம் அல்லது பொடியாக அரைத்து தண்ணீரில் கலந்து தினமும் இரு முறை குடித்துவந்தால் சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்குச் சர்க்கரையின் அளவு பெருமளவில் குறையும்.

மாங்காய் இலை:

undefined

மாங்காய் இலையும் சர்க்கரை வியாதியின் அளவை குறைப்பதற்குப் பெரிதும் உதவி செய்கிறது இன்சுலின் அதிகம் சுரக்க உதவி செய்கிறது மாம்பழ இலையில் உள்ள விட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏ மிகவும் சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்சிடென்ட் ஆக செயல்படுகிறது. இதிலுள்ள 3பேட்டா எனும் வேதிப் பொருள் உடலில் உள்ள இன்சுலின் சுரக்க உடனடியாக உதவுகிறது. தினமும் 10 முதல் 15 இலைகளைத் தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைத்து காலையில் வடிகட்டி வெறும் வயிற்றில் குடித்து வந்தால் நல்ல முன்னேற்றம் காணலாம்.

கறிவேப்பிலை:

undefined

கறிவேப்பிலையின் குணங்களைப் பற்றி நாம் சொல்லி தெரியப்போவதில்லை. தினமும் சமைக்கும் உணவில் தவறாமல் கறிவேப்பிலை நாம் சேர்த்துக் கொண்டுதான் இருக்கின்றோம்..சர்க்கரை வியாதி உள்ளவர்கள் இன்னும் அதிகமாகக் கறிவேப்பிலையை எடுத்துக் கொண்டால் உடலில் உள்ள குளுக்கோஸ் அளவு சீராகும் என்று கண்டு பிடித்து உள்ளனர் லண்டனிலுள்ள கிங்ஸ் கல்லூரியைச் சேர்ந்தவர்கள்.

சோற்றுக்கற்றாழை:

undefined

சோற்றுக்கற்றாழை உடலில் உள்ள குளுக்கோஸின் அளவைக் குறைத்து சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்குப் பெரிதும் உதவி செய்கிறது குறிப்பாக டைப் 2 சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்டவர்கள் சோற்றுக்கற்றாழை உபயோகிக்கும் பொழுது பெரிய அளவில் மாற்றம் தெரிந்தது கண்டுபிடித்துள்ளார்கள். சோற்றுக்கற்றாழைடன் சேர்த்து சிறிது மஞ்சளும் சேர்த்து அரைத்து சாறாக்கி அதைத் தினமும் குடித்துவந்தால் சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது. சோற்றுக்கற்றாழை உடலிலுள்ள கொழுப்பைக் குறைக்கவும் பெரிதும் உதவுகிறது.

கொய்யாப்பழம்:

undefined

கொய்யாப் பழத்தில் அதிகமாக விட்டமின் சி மற்றும் நார்ச்சத்து இருப்பதால் கொய்யாப்பழத்தை நாம் தொடர்ந்து உண்டு வந்தால் சர்க்கரை வியாதி கட்டுக்குள் கொண்டு வரலாம் என வல்லுநர்கள் சொல்கின்றனர்.மேலும் சர்க்கரை வியாதி உள்ளவர்கள் கொய்யாப் பழத்தின் தோலை உரித்து விட்டு பழங்களை மட்டும் சாப்பிடுவதைப் பரிந்துரை செய்கின்றனர் இருந்தாலும் கொய்யாப்பழம் மிகவும் அதிகமாகச் சாப்பிடுவதைத் தவிர்க்கவும் ஒரே நாளில் அதிக கொய்யாப் பழம் எடுத்துக் கொண்டால் அதில் உள்ள பொட்டாசியம் நம் உடலுக்குச் சிறிதளவு கேடு விளைவிக்கும்.

துளசி இலை:

undefined

துளசி இலையில் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் நிறைந்து உள்ளன. பழங்காலங்களில் துளசிச் செடியை வீட்டுக்குள்ளேயே வளர்த்து வருவதைப் பழக்கமாக வைத்துள்ளனர் துளசியில் உள்ள சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் ஒருசில எண்ணை மருத்துவ குணங்கள் இன்சுலின் சுரக்க உதவுகிறது. இதிலுள்ள மெத்தில், யுஜினால், போன்ற வேதிப் பொருள்கள் கணையத்துக்கு நன்மை விளைவிக்கிறது மேலும் தேங்கிக் கிடக்கும் இன்சுலினை விடுவிக்க உள்ளது மற்றும் கணையம் சிறப்பாகச் செயல்பட உதவி செய்கிறது மேலும் ஆராய்ச்சிகளில் துளசியிலை குளுக்கோஸ் அளவை ஏழு சதவீதம் குறைந்துள்ளதாகவும் சாப்பாட்டுக்கு முன் உள்ள குளுக்கோஸ் அளவை 17 சதவீதம் குறைந்துள்ளதாகவும் கணக்கிடுகிறார்கள் . தினமும் இரண்டு அல்லது மூன்று துளசி இலைகளைச் சாப்பிட்டால் நல்லது அல்லது இரண்டு தேக்கரண்டி துளசி இலை சாற்றைக் காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் நல்லது.

ஆளி விதை

undefined

ஆளி விதையில் சர்க்கரை வியாதியைக் கட்டுப்படுத்த கூடிய ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகமாக உள்ளது இதில் நார்ச்சத்தும் அதிகமாக உள்ளது அது கொழுப்பு மற்றும் சர்க்கரையை உறிஞ்சும் தன்மை கொண்டது தினமும் ஆளிவிதை எடுத்துக்கொள்பவர்களில் 28 சதவீதம் பேர் இன்சுலின் அதிகம் சுரந்து சர்க்கரை வியாதி படிப்படியாகக் குறைவது தெரியவந்துள்ளது. ஆளி விதையைப் பொடியாக அரைத்துச் சுடு தண்ணீரில் கலந்து காலை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் சர்க்கரை வியாதி படிப்படியாகக் குறைந்துவிடும் எனக் கூறுகின்றனர்.

வேப்பிலை:

undefined

வேப்பிலையின் நன்மைகளை நாங்கள் சொல்லி உங்களுக்குத் தெரிய வேண்டியதில்லை வேப்பிலையிலுள்ள கசப்புத்தன்மை உடலில் உள்ள சர்க்கரை வியாதிக்கு எதிராகப் பெரிதளவு போராடுகிறது அதிலுள்ள பீட்டா செல் குளுக்கோஸின் அளவைக் குறைத்து பெரிதும் உதவுகின்றது

%d bloggers like this: