வீட்டருகில் நடப்படும் மரங்களின் மகிமைகள்: நன்றும், தீதும்.

வீட்டின் கிழக்கே ஆலமரம் வேண்டிய வரம் வழங்கும். தெற்கே அத்தியும், மேற்கே அரசும் நல்ல சகுனம். வடக்கே இச்சியும் இருப்பது நன்று. (திசைகளுக்கு பொருந்தா மரங்களை தவிர்ப்பதும் நன்று).

கிழக்கில் அரசும், இச்சியும், மேற்கில் ஆலும், வடக்கில் அத்தியும் நட்டு வளர்ப்பதை தவிர்க்க வேண்டும்.தேவர்களும், ராட்சஸர்களும், கந்தர்வர்களும், மனிதர்களும் மரங்களைத் தஞ்சம் கொள்வதைப் போல பிசாசுகளும், சர்ப்பங்களும், மிருகங்களும், பறவைகளும் மரங்களைய்யே என்றும் தஞ்சமாகக் கொண்டுள்ளன.

தங்கமே விலையும் மரம் ஆனாலும் வீட்டின் மேல் நிழல் விழும் அளவில் எந்த மரங்களையும் நடுவது தீது.

இலந்தை ,வாழை, மாதுளை, எலுமிச்சை மரங்களை வீட்டில் வைத்து வளர்த்தால் வீட்டிற்கு விருத்தி இல்லை.

மகிழ்ச்சி தவழும் வீட்டருகில் ஆமணக்கு, செந்தாமரை, நறுவெள்ளி , மருதம், புங்கம் ஆகியவற்றை வளர்க்க வேண்டாம்.

வீட்டருகில் முள் செடிகள் வளர்ப்பது விரோதிகளால் ஆபத்தை தரும் கண்ணு பாலை மரம் நட்டால் செல்வம் பறிபோகும் – இம்மரம் பழம் தந்தாலும் சந்ததிகளை இழப்பார். வீடு கட்டவும் இம்மரத்தை பயன்படுத்த வேண்டாம்.

அவரியும், மஞ்சளும் வீட்டருகில் நட்டால் சொத்தையும், சந்ததியையும் இழக்க நேரிடும். இவை குலநாசம் செய்யும் என்பதால் ஆன்றோரின் கூற்றை மதிக்கும் அறிவுரையோ நாடுவதும் இல்லை. தானாக முளைத்தாலும் பிடுங்கி எறிவர்.

வீட்டுத்தோட்டம் தெற்கிலும், மேற்கிலும், கிழக்கிலும் இருந்தால் சண்டை வேதனை துன்பம் உண்டாகும்.அதுவே மேற்கு, வடக்கு, கிழக்கு ஆகிய திசைகளில் தோட்டம் அமைத்தால் புண்ணியமும், புத்திர பாக்கியமும் உண்டாகும்.

One response

  1. இளங்கோவன்

    பயனுள்ல தகவல்.

%d bloggers like this: