தேர்தல் நேரத்தில் திமுகவில் இருந்து விலகிய முக்கிய நபர்… என்ட்ரி கொடுக்கம் புது டீம்… ரகசியம் காக்கும் திமுக! 

உள்ளாட்சித் தேர்தல் நெருங்கிவரும் நேரத்தில், தி.மு.க.வுக்கு தேர்தல் வியூகம் வகுத்துக் கொடுக்கும் ஓ.எம்.ஜி. குழுவின் தலைவர் சுனில் ராஜினாமா செய்துள்ளார் என்று

தகவல் பரவியது. கலைஞர் இருக்கும் போதே மு.க.ஸ்டாலினுக்கு அரசியல் வியூகங்களை வகுத்துக் கொடுத்து, அவரது இமேஜை உயர்த்தியதில் ஓ.எம்.ஜி. குரூப்பிற்கு பெரும்பங்கு உண்டு. இந்த ஓ.எம்.ஜி. குரூப்தான் ’நமக்கு நாமே’ பயணத் திட்டத்தை ஸ்டாலினுக்கு வகுத்துக் கொடுத்து, தமிழகமே அவரைத் திரும்பிப் பார்க்கும்படி செய்தது. 2016 தேர்தலில் வலுவான எதிர்க்கட்சியானதிலும் பங்கு உண்டு. அதேபோல் தமிழகத்தில் இருக்கும் 12,600 பஞ்சாயத்துகளிலும், தி.மு.க.வைக் கூட்டம் நடத்தச் செய்து, கட்சிக்குக் கீழ்மட்டம் வரை புதுரத்தம் பாய்ச்சச் செய்த ஓ.எம்.ஜி. ஐடியாவால், நாடாளுமன்றத் தேர்தலிலும் தி.மு.க. தன் பலமான வெற்றியை உயர்த்திப் பிடித்தது.

எனினும் தி.மு.க.வின் இடைத்தேர்தல் தோல்வி, ஓ.எம்.ஜி. மீதான பிரமிப்பைக் குறைத்தது. அதோடு, ஒரு கோடி தொண்டர்கள் கொண்ட கட்சிக்கு ஒரு சில தனி நபர்களோ ஒரு குழுவோ ஆலோசனை சொல்வது முழுப் பலனை கொடுக்காது என்றும், கட்சியின் ரகசியங்களை காப்பதும் பெரும் பாடாயிடும் என்றும் துரைமுருகன் போன்ற சீனியர்களும் கூறிவந்தார்கள். இந்த நிலையில் சுனில் ராஜினாமா செய்தது திமுகவினர் மத்தியில் என்ன காரணமாக இருக்கும் என்று நினைக்க வைத்தது. சுனிலோ, நான் சொன்னதற்கெல்லாம் உரிய முக்கியத்துவம் கொடுத்தார்கள். அது வெற்றி பெற்றது. இப்போது நான் என் சொந்த காரணங்களால் தான் ராஜினாமா செய்திருக்கிறேன் என்று கூறுகிறார். பிரபல அரசியல் வியூகரான பிரசாந்த் கிஷோர் தி.மு.க. பக்கம் ஆலோசகராக வரக்கூடும் என்கிற எதிர்பார்ப்பு பலமாக இருக்கிறது என்கின்றனர்.

%d bloggers like this: