உங்கள் வீட்டு டிவி கூட உளவு பார்க்கலாம்!’- அலர்ட் தரும் FBI

என்னதான்
உலகத்தையே கைக்குள் அடக்கும் ஸ்மார்ட்போன்கள் நம்மிடையே வந்துவிட்டாலும்
தொலைக்காட்சியின் மோகம்

மக்களிடம் குறைந்தபாடில்லை. அன்று `திருமதி
செல்வம்’ சீரியல் பார்த்துக்கொண்டிருந்த நாம் இன்று நெட்ஃப்ளிக்ஸ் அமேசான்
ப்ரைமில் ஆங்கில தொடர்கள் பார்க்கும் அளவுக்கு அப்கிரேட் ஆகியுள்ளோம். இதே
அளவுக்குத் தொலைக்காட்சிப் பெட்டியும் எல்.சி.டி, எல்.இ.டி தொடங்கி சகல
ஆன்லைன் வசதிகளுடன் கூடிய ஸ்மார்ட் டிவிகள் என காலத்திற்கேற்றவாறு
தொழில்நுட்பத்தில் வளர்ச்சிகளைக் கண்டுவருகிறது.

அமெரிக்காவின்
மிகப்பெரிய தள்ளுபடி விற்பனை நாள்களான பிளாக் ஃப்ரைடே(Black Friday)
மற்றும் சைபர் மன்டேவில்(Cyber Monday) இந்த வருடமும் விற்பனைகள் களைகட்டி
முடிந்துள்ள நிலையில், தற்போது FBI அமைப்பு வெளியிட்டுள்ள ஓர் எச்சரிக்கை
அறிக்கை பலருக்கும் அதிர்ச்சி அளித்துள்ளது.
தற்போது
உற்பத்தியாகும் பெரும்பாலான தொலைக்காட்சிகளில் இணைய இணைப்பு தொடங்கி
ஃபேசியல் ரெகெக்னிஷன் வரை பல திறன்களைக்கொண்டுள்ளன. இதனால் இணையவழி
ஹேக்கர்களின் ஊடுருவல்களால் ஏற்படும் பாதிப்புகள் ஸ்மார்ட் டிவிகளில்
இருக்கக்கூடும் என அந்த அமைப்பு விற்பனை நாளுக்கு முன்பாகவே ஒரு
எச்சரிக்கையை விடுத்திருந்தது.
இந்தவகை டிவிகளை உற்பத்தி செய்யும் தயாரிப்பாளர்கள் மற்றும் அதில்
பயன்படுத்தப்படும் ஆப்பின் வடிவமைப்பாளர்கள் டிவி வழியாக நம்மை எந்தளவு
கண்காணிக்க வாய்ப்புள்ளதோ அதே அளவு இணையவழி ஹேக்கர்களுக்கும் வாய்ப்பு
இருக்கிறது. மேலும், அடுத்த தலைமுறை தொலைக்காட்சிகள் என விற்பனையாகும்
மாடல்களில் இணையதள இணைப்புக்காக இயக்கப்படும் அதிநவீன மென்பொருள் மற்றும்
அதில் உள்ள மைக் ஹேக்கர்கள் நம்மை உளவு பார்க்க ஏதுவாக இருக்கிறது என சைபர்
பாதுகாப்பு நிபுணரும் பிரிட்டிஷ் சிக்னல்கள் புலனாய்வு சேவையான
ஜி.சி.எச்.கியூவின் முன்னாள் ஆய்வாளரான மேட் டைட் கூறுகிறார்
அத்தகைய
ஹேக்கர்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் மற்றும் அதிலிருந்து தங்களைப்
பாதுகாத்துக்கொள்ளப் பயன்பாட்டாளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய சிம்பிள்
வழிகளை விளக்குகிறது தற்போதைய FBI-யின் அறிக்கை. சேனல்களை மாற்றுவது, நம்
வீட்டுக் குழந்தைகளிடம் வயது மீறிய வீடியோக்களைக் காட்டுவது எனத் தொடங்கும்
ஹேக்கிங் செயல்கள் நம் வீட்டுப் படுக்கையறையில் உள்ள தொலைக்காட்சியின்
கேமராக்கள் மற்றும் மைக் இயக்கும்வரை செல்லலாம்.

நம் ஸ்மார்ட் டிவி
பற்றி அடிப்படைத் தகவல்களைத் தெரிந்து வைத்திருப்பது , புதிதாக வாங்கிய
டிவிக்களில் உள்ள நெட்வொர்க் கடவுச்சொற்களை அவ்வப்போது மாற்றுவது மற்றும்
அக்கருவியில் உள்ள கேமரா, மைக்குகளை ஆன், ஆஃப் செய்வது ஹேக்கர்களிடம்
இருந்து பாதுகாக்க எளிய வழியாக பரிந்துரைக்கிறது FBI.

“அப்படி
ஆன், ஆஃப் செய்ய முடியாவிட்டால் கேமரா மீது ஒரு கறுப்பு டேப்பை
ஒட்டிவிடுவது நல்லது. மேலும், பயன்பாட்டாளர்கள் தங்கள் தயாரிப்பாளர்கள்
ரிலீஸ் செய்யும் அப்டேட்களை உடனுக்குடன் செய்துவிடுவது நல்லது என்றும்
அப்படி புது வெர்ஷன்களை விரும்பாதவர்களுக்கு ஒரு எளிய தீர்வு உள்ளது,
தேவையில்லாத நேரங்களில் இணையத்திலிருந்து உங்கள் டிவியை துண்டித்து
விடுங்கள்!” என்கிறார் டைட்.

எப்படியும் பெரும்பாலானோர் டிவியை ஆன்
பண்ணி ஸ்மார்ட்போன்தான் நோண்டப் போகிறோம். அப்படி நீங்க டிவி
பார்க்கலைனாலும் டிவி உங்கள பார்க்கும். அலர்ட்!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: