வருமான வரியில் அதிரடி மாற்றங்கள்

வரும் 2020 – 21 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் சம்பளதாரர்களுக்கான தனி நபர் வருமான வரி வரம்பு மாற்றப்படலாம் எனச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. லைவ்

மிண்ட், எகனாமிக் டைம்ஸ் போன்ற செய்தி நிறுவனங்களும் இந்த செய்தியை தங்கள் வலைதளத்தில் பதிவிட்டு இருக்கிறார்கள். இது நடுத்தர மக்கள் இடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அரசின் இந்த முடிவு பொருளாதார வல்லுநர்கள், நிதிநிலை ஆலோசகர்கள் வரவேற்றுள்ளனர்.

உலக பொருளாதார மந்தநிலையின் காரணமாக நமது பொருளாதாரம் மந்தமாக இருக்கிறது. இது தற்காலிகமானது தான் என்றாலும் இந்த சிறிய வீழ்ச்சி பெரிய கவலையை கொடுக்கிறது. இதற்கு காரணம் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் நாட்டின் உள்நாட்டு உற்பத்தி 7.5% என்று சராசரி வளர்ச்சி உள்ளது. இதனால் இந்த சிறிய வீழ்ச்சியும் நமக்கு பெரிதாக தெரிகிறது.

இந்த மந்தநிலையை சமாளிக்க மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு தைரியமான முடிவுகளை அறிவித்துள்ளார். கார்ப்பரேட் வரி குறைப்பு, தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு சலுகை, ஆட்டோமொபைல் துறைக்கும் பல சலுகைகளை அறிவித்தார். இது இந்த மூன்றாம் காலாண்டில் சிறிய முன்னேற்றத்தை கொடுத்துள்ளது. இதனை மேலும் மேம்படுத்த வருகிற பட்ஜெட்டில் வருமான வரி சலுகைகளை அதிரடியாக அறிவிக்கவுள்ளார்.

தற்போது வரை 1 ரூபாய் முதல் 2.5 லட்சம் ரூபாய் வரை – 0 % வரி
2.5 லட்சம் ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய் வரை – 5 % வரி,
5 லட்சம் ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரை – 20 %
10 லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பாதிப்பவர்கள் வரும் வருமானத்தில் 30 % வருமான வரியாகச் செலுத்த வேண்டி இருக்கிறது. இந்த அறிவிப்புக்கு பின் 1 ரூபாய் முதல் 2.5 லட்சம் ரூபாய் வரை – 0 % வரி
2.5 லட்சம் ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரை – 10 % வரி,
10 லட்சம் ரூபாய் முதல் 20 லட்சம் ரூபாய் வரை – 20 % வரி செலுத்த வேண்டி இருக்கும் எனச் சொல்லி இருக்கிறார்கள்.

இது குறித்து கோவையை சேர்ந்த நிதிநிலை ஆலோசகர் Dr. சந்திரசேகரன் அவர்களை தொடர்புகொண்டு கேட்டபோது அவர் கூறியதாவது,
“கடந்த செப்டம்பர் 2019-ல் கார்ப்பரேட் நிறுவனங்கள் செலுத்த வேண்டிய வரிகளுக்கு ஒரு பெரிய சலுகையைக் கொடுத்தது அரசு. இப்போது இந்த புதிய வரி வரம்பின் மூலம் நடுத்தர மக்களுக்கு சலுகைகளைக் கொடுக்க திட்டமிட்டு இருக்கிறார்களாம். இந்த புதிய வருமான வரி வரம்பு மாற்றம் வருமான வரித் துறையின் டாஸ்க் ஃபோர்ஸின் பரிந்துரைகள் அடிப்படையில் திட்டமிட்டு இருக்கிறார்களாம்”.

மேலும் அவர் கூறியதாவது, “கடந்த இரண்டு மாதங்களாக பல நடவடிக்கைகளை எடுத்தது அரசு. இது வழங்கல் திறனை (Supply) மட்டுமே அதிகரித்தது. தற்போது அறிவிக்க இருக்கும் அறிவிப்பின் மூலம் வாங்கும் திறனை (Purchasing Power) அதிகரிக்க இது உதவும். இது ஒரு சிறந்த முடிவாகும்” என்றார் அவர்.

அரசின் இந்த முடிவு நமது பொருளாதாரத்தை எப்படி உயர்த்துகிறது என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.

%d bloggers like this: