எடப்பாடியை சிக்க வைக்க பாஜகவின் அதிர வைத்த திட்டம்… அதிர்ச்சியில் எடப்பாடி தரப்பு!

தமிழகத்தில் டிசம்பர் இறுதியில் இரு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதனையடுத்து கூட்டணி கட்சிகள் மேயர் பதவி கேட்டு அதிமுக

தலைமைக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக சொல்லப்படுகிறது. இதில் பாஜக, பாமக, தேமுதிக கட்சியினர் மேயர் பதவி வேண்டும் என்று கூறுவதாக சொல்லப்படுகிறது. மேலும் உள்ளாட்சித் தேர்தலில் கழகங்களை விட ஆர்வமாக இருக்கிற பா.ஜ.க. தற்போது மேயர் சீட்டுகளை குறி வைத்து தீவிரமாக இறங்கியுள்ளது. இதனையடுத்து பா.ஜ.க.வைப் பொறுத்தவரை 3 மாநகராட்சியைக் கேட்டு அதில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று அதிகாரத்தோடு கணக்குப்போட்டு வருகிறது. குறிப்பாக கோவை, நாகர்கோவில், நெல்லை ஆகிய மூன்று மாநகராட்சியை கைப்பற்ற திட்டம் போட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் அதற்குள் தமிழக அரசு மேயர், நகராட்சி தலைவர் பதவிகளுக்கு அவசர சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றி விட்டது. இதனால் அதிமுக கட்சியினர் மீது பாஜக கட்சியினர் கடும் கோபத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் பாஜக கேட்கும் மேயர் சீட்டுக்களை அதிமுக தலைமை கொடுக்காமல் விட்டால் எடப்பாடிக்கு நெருக்கடியை ஏற்படுத்த பாஜக தலைமை முடிவெடுத்துள்ளதாக கூறுகின்றனர். இதனால் எடப்பாடிக்கு நெருக்கமானவர்களைப் பற்றி உளவுத்துறையின் உதவியுடன் தகவல்களை பெற ஆரம்பித்துள்ளது என்று சொல்கின்றனர். குறிப்பாக தமிழ்நாட்டு தலைமை கூட்டுறவு வங்கியில் இருக்கும் ஒரு முக்கிய புள்ளியை குறிவைத்து தகவல் சேகரித்து வருவதாக சொல்கின்றனர். எடப்பாடி பழனிச்சாமி அமைச்சராக வருவதற்கு முன்பு இருந்தே அவர் எடப்பாடியுடன் நெருக்கமாக இருந்தவர் என்று கூறுகின்றனர். இதனால் ஆரம்ப காலத்தில் இருந்து தற்போது வரை இருக்கும் எடப்பாடியின் ரகசியங்களை அவர் மூலம் உளவுத்துறையினர் சேகரித்து வருவதாக கூறுகின்றனர். அதோடு, இவர்களுடைய சொத்து எங்கு இருக்கிறது, வெளிநாடுகளில் சொத்து ஏதும் வங்கியுள்ளனரா என்று ஆராய தொடங்கியுள்ளனர். இதன் மூலம் எடப்பாடிக்கு நெருக்கடி கொடுக்க பாஜக தயாராகி வருவதாக கூறுகின்றனர்.

%d bloggers like this: