இளம் நரை முடி மாற இயற்கையான வீட்டு வைத்தியம்

கரிசலாங்கண்ணி இலையை தண்ணீர் விட்டு அரைத்து சாறு பிழிந்து கொதிக்க வைக்கவும். அதனுடன் பனைவெல்லம் சேர்த்து கொதிக்க வைக்கவும். பிறகு அதை வடிகட்டி குடிநீராக 45 நாட்கள் குடித்து வந்தால் நரை முடி மாறும்.

கரிசலாங்கண்ணி இலையை நன்கு அரைத்து சாறு பிழிந்து கொதிக்க வைத்து கொள்ளவும். தேங்காய் எண்ணெய், விளக்கு எண்ணெய் சம அளவு எடுத்து நன்கு காய்ச்சவும். பிறகு கரிசலாங்கண்ணி இலை சாறை காய்ச்சிய எண்ணெயுடன் சேர்த்து கொதிக்க வைக்கவும். பிறகு அதனை வடிகட்டி அந்த எண்ணையை 45 நாட்கள் தலைக்கு தேத்துவர நரை முடி மாறும்.

முதல் நாள் சிகைக்காய் தேய்த்து நன்கு தலை முடியை அலசி குளிக்கவேண்டும். மறுநாள் அவுரி இலை பொடி 2 ஸ்பூன், மருதாணி பொடி 2 ஸ்பூன், எலுமிச்சை சாறு மூன்றையும் கலந்து தலையில் தடவி 2 மணி நேரம் கழித்து குளிக்க வேண்டும். இப்படி குளித்தால் நரை முடி மாறி கருமையான முடி வளரும்.

கடுக்காயை எடுத்து நன்கு அரைத்த அதனுடன் டீத்தூளை கலந்து தலையில் தேய்த்து குளித்து வர இள நீரை முற்றிலும் மாறும்.

கறிவேப்பிலை மற்றும் நெல்லிக்காய் இரண்டையும் அரைத்து அதனை தண்ணீரில் கொதிக்க வைத்து அந்த குடிநீரை தினமும் குடித்துவர இளம் நிரை மறையும்.

நரை முடி மறைந்து கருமையான முடியாக மாற தேவையான பொருள்கள் : 1 லிட்டர் தேங்காய் எண்ணெய்,மஞ்சள் கரிசலாங்கண்ணி இலை 6 கைப்பிடி அளவு, மருதாணி இலை 6 கைப்பிடி அளவு, கறிவேப்பிலை 4 கைப்பிடி அளவு, வேப்ப இலை 10 கொத்து, செம்பருத்தி இலை 6 கைப்பிடி அளவு, நொச்சி தலை 4 கைப்பிடி அளவு,கற்றாழை 3 பட்டை, ஆமணக்கு இலை 5 தலை, முருங்கைக் கீரை 2 கைப்பிடி அளவு, 2 எலுமிச்சை பழம்,10 நெல்லிக்காய், 10 சின்ன வெங்காயம், 6 ஸ்பூன் கசகசா, 10 பாதாம் பருப்பு, அவுரி இலை பொடி 1 பாக்கெட், மரிக்கொழுந்து காய்ந்தது, செம்பருத்தி பூ ஆகிய பொருள்கள் தேவை.

முதல் நாள் 300 மி.லி தேங்காய் எண்ணெயில் கருவேலம் பட்டையை 24 மணி நேரம் உர வைக்க வேண்டும்.சிகப்பு நிறத்தில் இந்த எண்ணெய் மாறும். பிறகு மறுநாள் 700 மி.லி தேங்காய் எண்ணெயை காய்ச்சி அதனுடன் 1 டம்ளர் தேங்காய் பால், 1 டம்ளர் சுரைக்காய் சாறு சேர்த்து நன்கு காய்ச்சவும். பிறகு அதனுடன் உற வைத்த பாதம் பருப்பு, கசகசாவை சேர்த்து காய்ச்சவும். பிறகு மஞ்சள் கரிசலாங்கண்ணி இலை, மருதாணி இலை,கறிவேப்பிலை, வேப்ப இலை, செம்பருத்தி இலை, நொச்சி தலை அளவு,கற்றாழை பட்டை, ஆமணக்கு இலை, முருங்கைக் கீரை, நெல்லிக்காய், சின்ன வெங்காயம்எலுமிச்சை சாறு, அவுரி இலை பொடி, மரிக்கொழுந்து காய்ந்தது, செம்பருத்தி பூ ஆகியவற்றை அரைத்து அந்த காய்ச்சிய எண்ணையில் சேர்த்து கொதிக்கவிடவும். எண்ணெய் நன்கு கொதித்து கருப்பு நிறமாகும். பிறகு தேங்காய் எண்ணெயில் உர வைத்த கருவேலம் பட்டை சிகப்பு நிறத்தில் இருக்கும் அந்த எண்ணெய், இந்த கருப்பு நிற எண்ணெய் உடன் கலந்துவிடவும். இந்த எண்ணெய் தினமும் தலை முடியில் தேய்த்து வந்தால் கருமையான அழகான தலைமுடி வளரும். நரை முடி மறையும். கருமையான தலைமுடி இருப்பவர்களுக்கு இந்த எண்ணெய் தேத்தால் நரை முடி வருவதற்கு வாய்ப்பே இல்லை.

%d bloggers like this: