கடுமையான வயிற்று வலியை ஐந்து நிமிடத்தில் சரியாக

வயிறு வலிக்கு காரணம் குடல்புண், வயிற்றுப்புண் இல்ல வேற ஏதாவது பிரச்சனையா என நாம எல்லாரும் குழம்பி போய் இருப்போம். வயிறு வலிக்கு வீட்டில் இருக்கும்

பொருட்களை வைத்தே என்ன செய்யலாம் பார்ப்போம்.

மாதுளை பழத்தை தோலை உரித்து நன்கு காய வைத்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் இரவு மாதுளை பழத்தை தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். காலை அந்தத் தண்ணீரை வடிகட்டி குடிக்க வேண்டும். அப்படி செய்தால் வயிறு வலி உடனே குணமாகும். ஆண் பெண் ஆகிய இருவருமே இந்த குடிநீரைக் குடிக்கலாம்.

ஒரு டம்ளர் தண்ணீரை நன்கு கொதிக்க வைக்க வேண்டும். அத்துடன் இரண்டு ஸ்பூன் தேன் கலந்து குடித்து வந்தால் வயிறு வலி குணமாகும்.

கிராம்பு, கசகசா 3ஸ்பூன், பனை வெல்லம் ஆகியவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் கசகசாவையும், கிராம்பையும் பொடியாகி அரைத்து எடுத்துக் கொள்ளவும். 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி அந்த பொடியை நன்கு கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீர் நன்கு கொதித்தவுடன் பனை வெல்லத்தைச் சேர்த்து எடுத்து வடிகட்டி குடிக்க வேண்டும். இந்த குடிநீரை ஒரு நாளைக்கு மூன்று வேளை குடித்து வந்தால் வயிறு வலி உடனே குணமாகும்.

வெந்தயத்தை நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும். பின்னர் மிக்ஸியில் பொடியாக திரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு டம்ளர் மோருடன் அரை ஸ்பூன் வெந்தயப் பொடியை சேர்த்து குடிக்க வேண்டும். இப்படி செய்தால் வயிறு வலி உடனடியாக குணமாகும்.

தண்ணீரைக் கொதிக்க வைத்து பெருங்காய பொடியைச் சேர்த்து அந்த தண்ணீரை குடிக்க வேண்டும். வயிற்று வலி உடனே குணமாகும். புதினா டீயை குடித்து வந்தால் வயிறு வலி உடனடியாக கேட்கும்.

எலுமிச்சை சாறுடன் உப்பு சேர்த்து குடித்து வந்தால் வயிறு வலி குணமாகும். சீரகத்தை எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி குடித்து வந்தால் வயிறு வலி குணமாகும்.

சுக்கு,மிளகு, திப்பிலி ஆகிய மூன்று பொருட்களையும் பொடியாகி அத்துடன் வெல்லம் கலந்து சாப்பிட்டு வந்தால் வயிறு வலி குணமாகும்.

முருங்கை இலையுடன் சிறிதளவு உப்பு சேர்த்து வந்து கொதிக்க வைத்து குடிக்க வேண்டும். வயிறு வலி உடனடியாக குணமாகும்.

முருங்கை இலை, பிரண்டை இரண்டையும் ஒரு கைப்பிடி அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். அத்துடன் தேங்காய் துருவல் சேர்த்து நன்கு வறுத்து நசுக்கி பிழிந்து தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து குடித்துவந்தால் வயிற்றுவலி குணமாகும்.

சுக்கை பொடியாக்கி ஒரு டம்ளர் தண்ணீருடன் கொதிக்க வைத்து பனைவெல்லம் சேர்த்து குடித்து வந்தால் வயிறு வலி குணமாகும்.

%d bloggers like this: