ட்ரெண்டாகும் பெய் உதடுகள் போன்று மாற்றி அமைக்கும் அறுவை சிகிச்சை

ரஷியாவில் இருந்து டிரெண்ட் ஆகியதாக கூறப்படும் ‘பிசாசு உதடுகள்’, இணையத்தில் டிரெண்ட் ஆகி வருகிறது. இவை உண்மையானது போன்று தோற்றம் அளிப்பதால் நெட்டிசன்கள் குழம்பி வருகின்றனர்.

அநேக பெண்கள் வித்தியாசமான

ஒப்பனை முறைகளின் மூலம், உதடுகளினுள் நிரப்பிகளை உட்செலுத்தி உதடுகளில் அலைகள் செல்வது போன்று தோற்றமளிக்கச் செய்து, அவற்றை வலைத்தளங்களில் டிரெண்டாக்கி வருகின்றனர். இதுகுறித்து புகழ்பெற்ற அழகு நிலையத்தின் நிறுவனர் கூறுகையில், ” நான் முதலில் இதை பார்க்கும் போது போட்டோஷாப் என்று நினைத்தேன். ஆனால் அது உண்மையானது என தெரிந்தவுடன் அதிர்ச்சி அடைந்தேன்.

இது மிகவும் மோசமான ஒப்பனை முறையாகும். நிரப்பிகள் அல்லது பச்சை குத்துதல் மூலமாகவோ இவ்வாறு செய்கிறார்கள்.இது இயற்கைக்கு மாறானது. உங்கள் உதடுகள் முற்றிலும் சிதைந்து விடும். தயவுசெய்து அப்பாவியாக இருக்காதீர்கள், இது போன்ற வேடிக்கையான போக்குகளைப் பின்பற்றினால் நீங்கள் அதை எளிதாக மாற்றியமைக்க முடியாது மற்றும் உங்கள் இயற்கையான உதடுகளை திரும்பப் பெற முடியாது ” என்று தெரிவித்துள்ளார்.

%d bloggers like this: