தினகரனின் கனவில் மண்ணைவாரிப்போடுவது எடப்பாடிக்கு தண்ணி குடித்த பாடு தான், அசால்ட்டா டீல் செய்து டெ
ன்சன் கொடுப்பதில் எடப்பாடியை அடிச்சுக்கவே முடியாது. ஆமாம் ஹேப்பியாக இருந்த தினகரனை பயங்கர கடுப்பில் புலம்பவிட்டு ஒரு சம்பவம் கடந்த சில நாட்களில் நடந்துள்ளது.
உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக – பாமக, தேமுதிக பிஜேபி என கூட்டணி பிரச்சனை இருந்தாலும் தினகரனுக்கு சின்னம் விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பயங்கர செக் வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்திய தேர்தல் ஆணையத்தில் அமமுக கட்சியைப் பதிவு செய்த குஷியோடு, உள்ளாட்சித் தேர்தலுக்குத் தனிச் சின்னம் வாங்க முயற்சி செய்தார் தினா. விஷயம் என்னன்னா?
இந்த நிலையில், அமமுகவுக்கு தனியாக ஒரு பொதுச்சின்னத்தை எங்களால் கொடுக்கமுடியாது. இதற்கு அகில இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தைத்தான் போய் பார்க்கணும் வேண்டும் என்று 11-ந் தேதி மாலை மாநிலத் தேர்தல் ஆணையமும் குண்டை தூக்கி போட்டத. இதன்படி தலைமைத் தேர்தல் ஆணையத்தை அணுகி தனிச் சின்னத்தை வாங்க ரொம்ப நாள் ஆகும் என்பதால், அந்த 6 ஆயிரம் உள்ளாட்சிப் பதவிகளுக்கும் சுயேட்சையாகப் போட்டியிடும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார் தினகரன். ஹேப்பி மூடில் இருந்த தீணாவின் கனவில் மண்ணைவாரி போட்டுவிட்டதாக புலம்புகின்றனர் அமமுகவினர்.