உஷார்ர்! இதைச் செஞ்சா உங்களோட பேங்க் பேலன்ஸ் மொத்தமும் காலி! வெளியான அதிர்ச்சி தகவல்!

இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தனது வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் ஒரு அதிர்ச்சிகரமானத் தகவலை அறிவித்துள்ளது.ஸ்டேட் பேங்க் வழங்கியுள்ள அந்த எச்சரிக்கை

செய்திக் குறிப்பில் மொபைல் பேங்கிங் மற்றும் ஸ்மார்ட் போன்களில் இருந்து ஒரு துளி சந்தேகம் கூட இல்லாமல் உங்கள் பணத்தை திருடுவதற்காக ஹேக்கர்கள் புதிய வழிகளைக் கையாள்கின்றனர் என்பதைப் பற்றி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.டிஜிட்டல் யுகத்திற்கு மாறிய பிறகு அனைத்து விதமான வங்கி பரிவர்தனைகளும் மொபைல் பேங்கிங் போன்ற இணைய பண பரிமாற்றத்துக்குள் வந்து விட்டது.

அப்படி பாதுகாப்பற்ற ஆஃப்களை இப்போது ஹேக்கர்கள் ஹேக் செய்து உங்களுடைய பணத்தை திருடிக் கொண்டிருக்கிறார்கள். விமான நிலையங்கள், வணிக வளாகங்கள், உணவகங்கள் மற்றும் இலவச சார்ஜிங் செய்யும் இடங்கள் போன்ற இடங்களில் உங்கள் செல்போன்களைச் சார்ஜ் செய்யும் போது இந்தத் திருட்டை ஹேக்கர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

இந்த நூதன திருட்டுக்கு ஜூஸ் ஜாக்கிங் எனப் பெயரிடப்பட்டுள்ளது. மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் யு.எஸ்.பி கேபிள்களை ஹேக்கர்கள் மாற்றியமைக்கின்றனர். அந்த மாற்றியமைக்கப்பட்ட கேபிள்களில் உங்களுடைய மொபைல் சார்ஜ் செய்யப்படும் பொழுது உங்கள் மொபைலில் இருக்கக் கூடிய போட்டோ, வீடியோக்கள், உங்கள் தனி நபர் தரவுகள், மெயில் என அனைத்தையும் ஹேக் செய்து விடுவார்கள். ஜூஸ் ஜாக்கிங் எனப்படும் இந்த ஹேக்கிங் முறையால் உங்களுடைய செல்போனை முதலில் ஹேக் செய்து விடுவார்கள். ஹேக் செய்த பிறகு உங்கள் வங்கி பயனர் பெயர், கடவுச் சொல் போன்றத் தகவல்களை எளிதாகப் பெற்று உங்கள் கணக்கில் உள்ள ஒட்டு மொத்தப் பணத்தையும் திருடி விடுவார்கள்.

பணத்தை திருடுவது மட்டுமில்லாமல் உங்களுடைய அந்தரங்க விஷயங்களும் பறிபோவதற்கான வாய்ப்புகளும் இருக்கிறது. வாடிக்கையாளர்கள் பொது இடங்களில் சார்ஜ் செய்வதை தவிர்ப்பதே இது போன்ற மோசடிக்காரர்களிடம் இருந்து உங்கள் பணத்தை பாதுகாப்பதற்கான வழி என ஸ்டேட் பேங்க் எச்சரிக்கை விடுத்துள்ளது.

%d bloggers like this: