ஆணின் குரல். அப்படி ஒரு குரலை அதற்கு முன் நான் கேட்கவில்லை என்பதால், அந்த விஷயம் தன்னை ஈர்த்துவிட்டதாகவும் இன்று வரையிலும் அவரின் குரலை கேட்கும் போதெல்லாம் உள்ளுக்குள் தாக்கம் ஏற்படுவதாகவும் ஒரு பெண் தெரிவித்துள்ளார். ஆணின் புன்னகை என ஒரு பெண் தெரிவித்துள்ளார்.
பெரும்பாலான ஆண்கள் சிடுமூஞ்சிகளாக உள்ள நிலையில் அந்த ஆணின் சிரிப்பே அழகு. அந்த சிரிப்பில் ஒரு ஆண்மை, முகத்தில் அழகு அதிகமாக வெளிப்படுகிறது. அந்த ஆணின் சிரிப்புக்கு அடிமையாகி உள்ளதை உணர்ந்ததாக பெண் தெரிவித்தார்.
ஒரு பெண்ணின் காதலன் எதையுமே சீரியஸாக எடுத்துக் கொள்ளாமல் எளிமையாக எடுத்துக்கொண்டு, சிரித்த முகத்துடன் செல்வாராம். தான் விரும்பியபடியே உள்ளதால் அந்த ஆண் பிடித்துப் போனதாக தெரிவித்தார். ஆணின் நகைச்சுவை உணர்வு, அனைவரையும் மகிழ்விக்கும் விதம்தான் காதல் கொள்ள காரணம் என சந்தோஷமாக தெரிவித்துள்ளார் ஒரு பெண்.
ஆணின் உயரம்தான் தன்னை கவர காரணம் என ஒரு பெண் தெரிவித்துள்ளார். எந்த காரணத்திற்காகவும் பொய் சொல்லாமல் உண்மையை பேசிய ஆணை விரும்பியதாக ஒரு பெண் தெரிவித்துள்ளார். தன்னுடைய தகவல்களை பற்றி பொய்யாக சொன்னபோதும், எதையும் மறைக்காமல் தன்னிடத்தில் பேசியது பிடித்திருந்ததாக குறிப்பிட்டார்.
வசீகரமாக இருந்ததாக ஒரு பெண்ணும், மிகவும் எளிமையாகவும்… சாதாரணமாகவும் இருந்ததாலும், ஈர்ப்பு ஏற்பட்டதாக மற்றொரு பெண்ணும் தெரிவித்துள்ளார். நகைச்சுவை உணர்வு காரணமாகவும் ஆணின் மீது ஈர்ப்பு ஏற்பட்டதாக மற்றொரு பெண் தெரிவித்துள்ளார்.