நோயே வராமல் வாழ வேண்டுமா..? இப்போதான்யா இந்த நித்யானந்தா உருப்படியான காரியத்தை சொல்லி இருக்கிறார்..!…

இதுகுறித்து அவர், ‘’டயாபடிக்ஸ்க்கு மருந்து கண்டுபிடித்து எத்தனையோ நூறு வருஷங்கள் ஆகிவிட்டது. அதை மக்களுக்கு போய் சேரவிடாமல் பார்த்துக்கொள்கிறார்கள். அதனை டயாபடிக்ஸி உருவாக்கியவர்கள் எப்படி மக்களுக்கு போய் சேர விடுவார்கள்?

டயாபடிக்ஸை உருவாக்கியவர்களின் நோக்கம் என்னவென்றால் மனிதன் ஒரேயடியாக செத்து விடக்கூடாது. செத்து விட்டால் வருமானம் வராது. முழுக்க முழுக்க ஆரோக்கியமாகவும் இருந்து விடக்கூடாது. அப்போதும் வருமானம் வராது. அவன் மருத்துவமனைக்கு போகணும், உழைக்கணும் பணத்தை மருத்துவர்களுக்கு கட்டிக்கொண்டே இருக்க வேண்டும். இதைத் தான் மருத்துவ தீவிரவாத வரி என்பார்கள். மனிதனை அவனிடம் இருந்து பணம் பறிப்பதற்காக அவனுக்கு தொடர்ந்து பணம் சுரக்கின்ற இயந்திரமாக மனிதன் இருக்க வேண்டும் என்பதற்காக மருத்துவ ரீதியாக அடிமைப்படுத்தி வைத்து, கொடுமைப்படுத்தி பறிக்கப்படும் பணம் மருத்துவ தீவிரவாத வரி.

இன்சுலின் மில்லியன் டாலர் பிஸினஸ். கேன்சர் மருந்துகள் ட்ரில்லியன் டாலர் பிஸினஸ். அதனால் அறிவு வறுமையில் கேன்சருக்கோ, நீரழிவு நோய்களுக்கோ மிக மிக சாதாரண, சொற்பமான, விலையே இல்லாமல் சித்த, ஆயுர்வேத, யோகா வைத்தியத்தில் இலவசமாக மருந்துகள் உள்ளன. ஆயுர்வேத, சித்த வைத்திய சைவ வாழ்க்கையை நீங்கள் வாழ்வீர்களானால் இந்த வியாதிகளே வராது. இந்த வியாதிகள் வந்தாலும், மற்ற பொருட்கள் உங்கள் உடம்பில் ஒட்டிக் கொண்டிருப்பதால் நோயின் தாக்கம் குறைவாகவே இருக்கும். அதனையும் சித்த, ஆயுர்வேத வைத்தியத்தின் மூலம் இந்த நோய்களை காணாமல் போய்விடச் செய்ய முடியும்.

ஒன்றுமே வேண்டாம். வாரத்தில் மூன்று நாட்கள் விரதமிருங்கள். திங்கட்கிழமை பரசிவனுக்காக, வெள்ளிக்கிழமை பராசக்திக்காக, ஞாயிற்றுக்கிழமை குருநாதருக்காக மூன்றே மூன்று நாட்கள் விரதமிருங்கள். அவ்வளவு தான். விரதமென்றால் சூரியன் உதித்தது முதல் அந்தி சாயும் வரை முடிந்தவரை எதுவும் சாப்பிடாமல் உங்களால் முடியுமானால் நீர்கூட அருந்தாமல் சரி அதுவும் முடியாவிட்டால் நீர் மட்டுமாவது அருந்தி, அதுவும் முடியாவிட்டால் கொஞ்சம் ஏதாவது பழரசம் மட்டும் அருந்தி, எந்தவிதமான திட உணவுகளையும் எடுத்துக் கொள்ளாமல் இந்த மூன்று நாட்கள் மட்டும் விரதம் இருங்கள்.

உங்கள் உடலும், மனமும் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு உயிர்த்து விடும். நன்றாக புரிந்து கொள்ளுங்கள். தேவையில்லாத எந்த செயல்களையும் செய்யச் சொல்லி உங்களை வருத்த மாட்டேன். உங்கள் மீது மிகுந்த அன்பும் நேர்மையான காதலும் உள்ளவன் நான். தேவையில்லாத எந்த ஒரு துயரத்தையும் உங்களுக்கு அளிக்க மாட்டேன். மூன்று நாட்கள் விரதமிருந்தால் உண்மையிலேயே உங்கள் மனதுக்கும், உயிருக்கும், உடலுக்கும் நன்மை தரும் என்பதால் இதைச் சொல்கிறேன்.

எந்தத் துறையிலும் வறுமையில்லை. அந்தத் துறையின் தலைவராக இருப்பவரின் சூழ்ச்சியே வறுமையை திணித்து அவர்கள் பணத்தில் கொழிக்கிறார்கள்’’எனத் தெரிவித்துள்ளார் நித்யானந்தா.

One response

  1. indormation given are very usefull to namkind

%d bloggers like this: