ஆயுளை நீட்டிக்கும் அருமருந்து!

* பனங்கருப்பட்டியில் இரும்பு மற்றும் கால்சியம் சத்து அதிகமாக உள்ளது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். விட்டமின் ‘பி’ மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ள கருப்பட்டி நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துகிறது.


* பருவமடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து உளுந்தங்களி செய்து கொடுத்தால் கருப்பை ஆரோக்கியமாக இருக்கும். நார்ச்சத்தும் இதில் அதிகம்.
* குப்பைமேனிக் கீரையுடன் கருப்பட்டியைச் சேர்த்து சாப்பிட்டால் வறட்டு இருமல், நாள்பட்ட சளித்தொல்லை நீங்கும்.
* கருப்பட்டி மற்றும் பனங்கற்கண்டில் சுண்ணாம்பு விட்டமின்கள் மற்றும் மினரல்களும் உள்ளன.* கருப்பட்டி இயற்கையிலேயே உடலைக் குளிர்ச்சியடையச் செய்யும். வெள்ளைக் சர்க்கரைக்கு பதில் இதனை பயன்படுத்துவதால் இது நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

* கருப்பட்டி ரத்தத்தை சுத்திகரித்து உடலுக்கு சுறுசுறுப்பை கொடுக்கிறது.

* சீரகத்தை வறுத்து கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால் நன்கு பசி எடுக்கும். ஓமத்துடன் சாப்பிட்டால் வாயுத்தொல்லை நீங்கும்.

* உணவில் கருப்பட்டியை பயன்படுத்தினால் பற்களும், நரம்புகளும் உறுதியாகும்.

* நீரிழிவு நோயாளிகள் கைக்குத்தல் அரிசி சாதத்துடன் கருப்பட்டி கலந்து சாப்பிட்டு வர சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருப்பதுடன் அடிக்கடி சிறுநீர் போவது குறையும்.

* கருப்பட்டி பெண்களின் கருப்பைக்கு மிகவும் ஏற்றது. சுக்கு, மிளகு கலந்து கருப்பட்டியை பிரசவித்த பெண்கள் சாப்பிட்டால் தாய்ப்பால் நன்றாக சுரக்கும், குழந்தைக்கும் நல்ல ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்.

%d bloggers like this: