பா.ஜ.க அனுப்பும் `டெல்லியார்’ வசம் 3 அசைன்மென்ட்… தமிழக அரசியல் இனி..?

தமிழக மக்கள் மத்தியில் பிரதமர் மோடியைப் பற்றி எதிர்க்கட்சிகள் செய்துவரும் பிரசாரம் நன்கு எடுபட்டிருப்பதை நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தின. அதை உடைத்து, தமிழகத்தில் மோடியின் செல்வாக்கை

அதிகப்படுத்துவதற்கான அசைன்மென்ட் டெல்லியாரிடம் தரப்பட்டிருக்கிறது. அதற்காக வரும் புத்தாண்டில் மூன்று புதிய மாற்றங்களை தமிழகத்தில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பா.ஜ.க தலைமைக்கு டெல்லியார் தரப்பில் ஆலோசனை தரப்பட்டிருக்கிறது” என்ற உளவுத்துறை அதிகாரிகள், அந்த மூன்று விஷயங்களைப் பட்டியலிட்டனர். இதோ அந்த மூன்று…

1) புது ஆளுநர்:

தமிழகத்துக்கு தற்போதைய தேவை, இரும்புக்கரம்கொண்ட ஓர் ஆளுநர். ‘வந்த புதிதில் மத்திய அரசின் திட்டங்களை நேரடியாக ஆய்வுசெய்வது, தமிழக அரசுக்கு அறிவுறுத்தல் வழங்குவது என அதிரடியாகவே செயல்பட்டார் புரோஹித். ஆனால், நிர்மலாதேவி விவகாரத்துக்குப் பிறகு அமைதியாகிவிட்டார். அதனால் அ.தி.மு.க அரசின் நடவடிக்கைகள், அமைச்சர்கள்மீது எதிர்க் கட்சிகளாலும் அமைப்புகளாலும் தரப்பட்டுள்ள ஊழல் புகார்கள் குறித்து மத்திய அரசுக்கு தெளிவான தகவல்களை அவர் கொண்டுசெல்ல வில்லை’ என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அதனால் ஆளுநரை மாற்ற வேண்டும்.

3) ஆட்சி மாற்றம்:

அ.தி.மு.க கூட்டணியிலிருந்து பா.ஜ.க வெளியேற வேண்டும். ஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்கில், அவர்களுக்கு எதிராகவே தீர்ப்பு வர வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள். இதன்மூலம் அ.தி.மு.க-வுக்குள்ளேயே மோதல்கள் வெடிக்கும். அதோடு ஒருசில அமைச்சர்களின் ஊழல் பட்டியலைக் கசியவிட்ட கைது நடவடிக்கை வரையும் கிடுகிடுக்கவைக்கலாம். இதனால் அந்த ஆட்சி தானாகவே கலைந்துவிடும். இதை வைத்து ஆளுநர் ஆட்சியை அமல்படுத்தலாம்.

மேற்கண்ட இந்த மூன்று திட்டங்களையும் மிக விரைவிலேயே செயல்படுத்த வேண்டும் என்பதே டெல்லியாரின் ஆலோசனை. இந்தத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக திறமையும் நேர்மையும்கொண்ட உயர் அதிகாரிகள் உடைய குழுவையும் அவர் களமிறக்கவுள்ளார்” என்றனர்.

மோடி மற்றும் அமித் ஷா

2) கூட்டணி மாற்றம்:

தி.மு.க-வை பலவீனப்படுத்துவதற்கான வேலைகளைச் செய்யவேண்டும். அதே நேரத்தில் அ.தி.மு.க-வையும் கழற்றிவிட்டு, கமல், ராமதாஸ், தினகரன், விஜயகாந்த் மற்றும் ரஜினி ஆகியோரை ஒருங்கிணைத்து தமிழகத்தில் புதிய கூட்டணியை ஏற்படுத்த வேண்டும். ஒருவேளை, பா.ஜ.க-வை ரஜினி தரப்பு சேர்த்துக்கொள்ளாவிட்டால் தனித்துப் போட்டியிட தயாராக இருக்கவேண்டும்.

அதேசமயம் அ.தி.மு.க மற்றும் தி.மு.க-வைத் தனிமைப்படுத்தும்விதத்தில் ரஜினி தலைமையில் மக்கள் நீதி மய்யம், பா.ம.க, அ.ம.மு.க, தே.மு.தி.க உள்ளிட்ட இன்னும் பல கட்சிகள்கொண்ட கூட்டணியை திரை மறைவில் இருந்துகொண்டு உருவாக்க வேண்டும். தேவைப்பட்டால் அ.தி.மு.க-வை உடைத்து அதையும்கூட அந்தக் கூட்டணியில் சேர்க்கவேண்டும். இதன்மூலம், திராவிட கட்சிகளுக்கு மாற்றுச் சக்தியை தமிழகத்தில் உருவாக்க வேண்டும்.

தமிழகத்தில் அ.தி.மு.க அரசுக்கு எந்தச் சிக்கலையும் ஏற்படுத்த பா.ஜ.க தலைமை விரும்பாது என்பதே அரசியல் நோக்கர்களின் கருத்து. ஆனால், ஆர்.எஸ்.எஸ் அளித்த அகில இந்திய அஜெண்டாக்களில் மிக முக்கியமான வற்றை நிறைவேற்றிவிட்ட நிலையில், வரும் புத்தாண்டிலிருந்து தன் அரசியல் வியூகங்களை பா.ஜ.க மாற்றிக்கொள்ளத் தீர்மானித்துள்ளதாகத் தெரிகிறது. இதற்கான முதற்கட்ட வேலையாக, தமிழகத்தில் இருந்து உளவுத்துறை மூலம் திரட்டப்பட்ட தகவல்களைக் கண்டு பா.ஜ.க தலைமையே அதிர்ந்திருந்திருக்கிறது. அந்தத் தகவல்களை வரிசைப்படுத்தியிருக்கிறது, ஜூ.வி. கவர்ஸ்டோரி.

அத்துடன், வரும் 2020-ம் ஆண்டில் தமிழகத்தில் மேற்கொள்ளவுள்ள மாற்றங்களைச் செய்வதற்கான பொறுப்பை, டெல்லி தமிழர் ஒருவரிடம் பிரதமர் அலுவலகம் ஒப்படைத்திருக்கிறது. இவரை, `டெல்லியார்’ என்று அதிகாரிகள் வட்டாரத்தில் செல்லமாக அழைக்கிறார்கள்

<span>%d</span> bloggers like this: