முதுகில் குத்திய கிருஷ்ணபிரியா..! சிறைச்சாலையில் சரிந்து அமர்ந்த சசிகலா..! விஸ்வரூபம் எடுக்கும் ரூ.1400 கோடி சொத்து..!

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு சசிகலா வாங்கிக் குவித்த சொத்துகள் தொடர்பாக கிடைத்துள்ள ஆவணங்கள் அவருக்கு புதிய சிக்கலை ஏற்படுத்தும் என்று கவலையில் ஆழ்ந்துள்ளனர் மன்னார்குடி உறவுகள்.

கடந்த 2016ம் ஆண்டு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டன. அப்போது ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சமயம். சசிகலா மருத்துவமனையில் இருந்தபடியே ஜெயலலிதாவை கவனித்து வந்ததாகத்தான் எல்லாரும் நினைத்துக் கொண்டிருந்தனர். ஆனால் தற்போது வருமான வரித்துறை பக்கத்தில் இருந்து கசியும் தகவல்கள் அப்பலோவில் சசிகலா உண்மையில் என்ன செய்து கொண்டிருந்தார் என்கிற தகவலை அம்பலப்படுத்துகிறது.

பணமதிப்பிழப்பு கால கட்டத்தில் மட்டும் சசிகலா தன் வசம் இருந்த சுமார் 1400 கோடி ரூபாய் மதிப்பிழான பழைய ரூபாய் நோட்டுகளை சொத்துகளாக மாற்றியது தற்போது தெரியவந்துள்ளது. அந்த பழைய ரூபாய் நோட்டுகளை வைத்து சென்னை, புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் மால்கள், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்கள், நகைக்கடைகள் உள்ளிட்டவற்றை அவர் வாங்கிக் குவித்துள்ளார். இதே போல் சொற்ப வட்டிக்கு பழைய ரூபாய் நோட்டுகளை கொடுத்து புதிய ரூபாய் நோட்டுகளா பிறகு வாங்கியுள்ளார்.

இப்படி சுமார் 1400 கோடி ரூபாய்க்கு சொத்துகளை வாங்கிக் குவித்தாலும் அது குறித்து பெரிய அளவில் யாருக்கும் எதுவும் தெரியாமல் இருந்தது. ஜெயலலிதா மறைவை தொடர்ந்து சசிகலா சிறை சென்ற நிலையில், அவரது தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. அப்போது ஏராளமான ஆவணங்கள் சிக்கின. ஆனால் அவற்றால் எந்த பிரயோஜனமும் இல்லை. இதற்கிடையே சசிகலா, தனது கணவர் நடராஜன் உடல்நிலை மோசமானதை தொடர்ந்து பரோலில் வந்து சென்று இருந்தார்.

அப்போது சென்னையில் இளவரசி மகள் கிருஷ்ணபிரியா வீட்டில் தங்கியிருந்தார். அந்த சமயத்தில் தான் இந்த 1400 கோடி ரூபாய் தொடர்புடைய சொத்து கணக்கு பார்க்கப்பட்டுள்ளது. அது தொடர்பான ஆவணங்களை எடுத்து வந்து கொடுக்க அதனை வாங்கி கிருஷ்ணபிரியாவிடம் கொடுத்து கிழித்துப் போடச் சொல்லியுள்ளார் சசிகலா. ஆனால் கிழித்துப் போடுவதற்கு முன்னதாக அந்த ஆவணங்களை தனது செல்போனில் புகைப்படமாக எடுத்து வைத்துள்ளார் கிருஷ்ணப்பிரியா.

இதனை தொடர்ந்து கிருஷ்ணப்பிரியா வீட்டில் நடைபெற்ற சோதனையின் போது அவரது செல்போனை வருமான வரித்துறை பறிமுதல் செய்தது. அதை ஆய்வுக்கு உட்படுத்திய போது தான் 1400 கோடி ரூபாய் பழைய நோட்டுகளை எப்படி சசிகலா புதிய நோட்டுகளாகவும், சொத்தாகவும் மாற்றினார் என்பது தெரியவந்தது. தொடர்ந்து கிருஷ்ணப்பிரியாவிடம் நடைபெற்ற விசாரணையின் போது நடந்த உண்மைகளை அப்படியே கொட்டித் தீர்த்துள்ளார்.

இந்த விவரங்கள் அனைத்தும் தற்போது வருமான வரித்துறை தரப்பில் இருந்து குறிப்பட்ட ஆங்கில நாளிதழ்களுக்கு லீக் செய்யப்படுகின்றன. இதனை கேள்விப்பட்ட சசிகலா, இப்படியும் நம் உறவுகள் இருக்குமா? என்று கிருஷ்ணப்பிரியாவை நினைத்து சிறையிலேயே சரிந்து உட்கார்ந்துவிட்டதாக கூறுகிறார்கள். மேலும் தினகரனை உடனடியாக தன்னை வந்து சந்திக்குமாறு தகவல் அனுப்பியிருப்பதாகவும் பேசிக் கொள்கிறார்கள்.

%d bloggers like this: