குடலுக்கும், உடலுக்குமான தொடர்பை துண்டிக்கும் அதிக கொழுப்பு நிறைந்த உணவுகள் ஆய்வில் தகவல்

அதிக கொழுப்பு நிறைந்த உணவு வகைகளை சாப்பிடும் போது, அவை குடலுக்கும், உடலுக்கும் இடையேயான தொடர்பை தடை செய்யும் என ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.

<!–more–>

அமெரிக்காவின் டுயூக் பல்கலைகழக ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் இந்த தகவல் தெரிய வந்துள்ளது. அதன்படி அதிக எண்ணெய்பசை மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை உண்ணும் பொழுது, அவை குடலின் உட்சுவர் பகுதியில் இருக்கும் எண்டெரோஎண்டோகிரைன் (enteroendocrine) எனும் செல்களை சிலமணி நேரத்துக்கு செயலற்ற நிலைக்கு கொண்டு செல்கின்றன.

இந்த வகை செல்கள் சுரக்கும் ஹார்மோன்கள், செரித்தல், பசி உள்ளிட்ட உணவுக்குழாயின் முக்கியமான வேலைகளுக்கு முக்கியமானவை என்பதோடு, மூளை மற்றும் தண்டுவடத்துடன் நேரடி தொடர்பில் இருப்பவை. அவை உறக்க நிலைக்கு செல்லும் போது, உடலுக்கும் குடலுக்கும் இடையேயான தொடர்பு துண்டிக்கப்படுவதாக ஆய்வு முடிவில் தெரிய வந்துள்ளது.

%d bloggers like this: