தட்டையான வயிற்றை பெற, கொழுப்பை கரைக்க உதவும் எளிய உடற்பயிற்சிகள்

தட்டையான வயிற்றை பெறவும், கொழுப்பை கரைக்க உதவும் எளிய உடற்பயிற்சி முறைகளை இங்கே பார்க்கலாம். இந்த பயிற்சிகளை தொடர்ந்து செய்து வந்தால் படிப்படியாக உடல் எடை குறைவதை காணலாம்.


போட் போஸ்(The Boat Pose): மல்லாந்து தரையில் நேராக படுக்கவும். கால்களையும், உடலையும் மேல் நோக்கி உயர்த்த வேண்டும். இரண்டுக்கும் இடையே 90 டிகிரி இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும். அந்த நிலையிலேயே 30 முதல் 60 நொடிகள் இருக்க வேண்டும். அதனை 5 முறை செய்ய வேண்டும்.

ப்ளாங்க் (The Plank):

குப்புற படுத்தவாறான நிலையில், கைகளை உந்தி உடலை மேலே வைத்திருக்க வேண்டும். கால்களை நிலத்தில் ஊன்றி, இடுப்பு பகுதியை மேலே உயர்த்த வேண்டும். அப்போது தலை முதல் கால் வரை உடல் கிடைமட்டமாக இருக்கவும். அந்த நிலையிலேயே 30 முதல் 40 நொடிகள் இருக்கவும்.

லுங்கே(Lunge):

நேராக நின்று, பின்னர் இடதுகால் முட்டியை தரையில் படுமாறு செய்ய வேண்டும். அப்போது வலது கால் நேராக, தொடைப்பகுதி உடன் 90 டிகிரி என்ற அளவில் இருக்க வேண்டும். கைகள் இரண்டையும் மார்பை நோக்கியவாறு வைக்கவும். இதேபோன்று வலதுகாலில் பயிற்சி செய்ய வேண்டும்.

புஸ்-அப்ஸ்(Push-Ups):

மல்லாந்து படுத்தவாறு கைகளை தரையில் நீட்டி வைக்க வேண்டும். பின்னர் கைகளின் உந்துதலால் உடல் முழுவதையும் மேலே உயர்த்த வேண்டும். அப்போது தலை நேராக பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். சீரான முறையில் மூச்சை உள்ளிழுக்கவும். பின்னர் உடலை மெதுவாக கீழே இறக்க வேண்டும். இதேபோல் 10 முதல் 20 முறை செய்ய வேண்டும்.

ஸ்குவாட்(Squats):

நேராக நிமிர்ந்து நிற்க வேண்டும். இரண்டு கைகளையும் நேராக நீட்ட வேண்டும். நாற்காலியில் அமர்வது போல், உடலை கீழே இறக்க வேண்டும். பின்னர் மீண்டும் உடலை மேலே கொண்டு செல்ல வேண்டும். அதனை 10 முறை தொடர்ந்து செய்யவும்.

%d bloggers like this: