கேபிள் டிவி வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த டிராய்: கட்டணம் குறைப்பு.! எவ்வளவு தெரியுமா?

கேபிள் இணைப்புகள் மூலம் தொலைக்காட்சி சேனல்களை பார்க்கும் வாடிக்கையாளர்கள் குறைந்த கட்டணத்தில் அதிக சேனல்களை பார்க்கும் வகையில் விதிமுறைகளை திருத்தி தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.


டிராய் வெளியிட்டுள்ள அறிவிப்பு

டிராய் வெளியிட்டுள்ள அறிவிப்புகளில் தெரிவித்திருப்பதாவது, கேபிள் வாடிக்கையாளர்களுக்கு மாதந்தோறும் அதிகபட்சமாக ரூ.160-க்குள் சேனல்களை வழங்க வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட இணைப்புகளை பெற்றுள்ள வாடிக்கையாளர்கள் கூடுதல் இணைப்புகளுக்கு அதிகபட்சமாக 40 சதவீத கட்டணம் செலுத்த வேண்டும் என அதில் தெரிவித்துள்ளது.

200 சேனல்களுக்கு வரி இல்லாமல் ரூ.130

மேலும் இதில், நெட்வொர்க் திறன் கட்டணமாக 200 சேனல்களுக்கு ரூ.130 நிர்ணயிக்கப்பட்டு உள்ளது(வரி இல்லாமல்).

சந்தாதாரர்களுக்கு தள்ளுபடி வழங்க உத்தரவு

6 மாதம் அல்லது அதற்கு மேலான நீண்டகால சந்தாதாரர்களுக்கு தள்ளுபடி வழங்குவதற்கு விநியோகஸ்தர்களான ஆபரேட்டர்களுக்கு டிராய் அனுமதி அளித்திருக்கிறது. வாடிக்கையாளர்கள் தேர்வு செய்து வாங்கும் சேனல்களின் கட்டணம், மொத்த தொகுப்பு சேனல்களின் கட்டணத்தைவிட ஒன்றரை மடங்குக்கு மேல் இருக்கக்கூடாது என உத்தரவு பிறப்பித்துள்ளது.

மார்ச் 1 ஆம் தேதிமுதல் அமல்

அதன்படி விதிமுறைகளில் டிராய் அறிவித்துள்ள அறிவிப்புகள் அனைத்தும், மார்ச் 1-ந்தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு கேபிள் டிவி வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும் வகையில் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

%d bloggers like this: